சப்பாத்தி நூடுல்ஸ் கோன்

Viji Prem
Viji Prem @vijiprem24
Dharmapuri

#leftover காலையில் எங்களுக்கு செய்த சப்பாத்தியும் குழந்தைகளுக்கு செய்த நூடுல்ஸும் மீதமானது அதைக்கொண்டு சப்பாத்தி நூடுல்ஸ் கோன் செய்துள்ளேன் இது பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
4-6 பரிமாறுவது
  1. 2 சப்பாத்தி
  2. 1கப் எக் நூடுல்ஸ்
  3. 2 டேபிள்ஸ்பூன் மைதா (தண்ணீர் விட்டு பசை போல் கரைத்துக் கொள்ளவும்)
  4. 1/2கப் பிரட் தூள்
  5. எண்ணெய் பொரிப்பதற்கு
  6. நூடுல்ஸ் செய்முறை
  7. 2 கப் வேக வைத்த நூடுல்ஸ்
  8. 2-3 முட்டை
  9. 1/2கப் நறுக்கிய காய்கறிகள்
  10. 1டீஸ்பூன் சோயா சாஸ்
  11. 1டீஸ்பூன் சில்லி சாஸ்
  12. தேவையானஅளவு உப்பு

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    முதலில் சப்பாத்தியை படத்தில் காட்டியவாறு 4 பங்காக வெட்டிக் கொள்ளவும்

  2. 2

    பிறகு அதை படத்தில் காட்டியவாறு மைதா பசை கொண்டு ஓரங்களில் ஒட்டி கோன் போல் தயார் செய்து கொள்ளவும்... (படத்தில் காட்டியவாறு 15நொடி பசையை ஓட்டும்வாறு பிடித்துக்கொள்ளவும்)

  3. 3

    இப்பொழுது தயார் செய்து வைத்துள்ள கோனில் மீதமுள்ள நூடுல்ஸ்களை நிரப்பவும் பிறகு மைதா மாவு பசை கொண்டு மேலாக பூசவும்

  4. 4

    இப்போது அதன் மேல்பகுதியை பிரட் தூளில் பிரட்டி எடுத்துக்கொள்ளவும்

  5. 5

    தயார் செய்து வைத்துள்ள கோனை 10நிமிடம் கழித்து ஒரு கடாயில் எண்ணெய் காயவைத்து எண்ணெய் சூடானதும் மிதமான தீயில் பொரித்தெடுக்கவும்

  6. 6

    மீதமான சப்பாத்தி நூடுல்ஸ் கொண்டு குழந்தைகள் முதல் பெரியவர் வரை விரும்பி சாப்பிடும் சப்பாத்தி நூடுல்ஸ் தயார் இதை தக்காளி சாஸுடன் சேர்த்து பரிமாறவும்

  7. 7

    நூடுல்ஸ் செய்முறை ஒரு கடாயில் முதலில் முட்டையை உப்பு சேர்த்து பொரித்து எடுத்துக்கொள்ளவும்... பிறகு அதே கடாயில் சிறிது எண்ணெய் விட்டு கேரட் குடைமிளகாயை வதக்கவும் பிறகு வேக வைத்த நூடுல்ஸ் உப்பு சோயா சாஸ், சில்லி சாஸ் சேர்த்து மிதமான தீயில் நன்றாக கிளறவும்

  8. 8

    இறுதியாக முட்டை பொரியல் சேர்த்து உப்பு சரிபார்த்து பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Viji Prem
Viji Prem @vijiprem24
அன்று
Dharmapuri
Running Madurai virundhu homemade delivery restaurantsFb pagehttps://www.facebook.com/vijiprem20/
மேலும் படிக்க

Similar Recipes