சென்னா மசாலா வித் லெஃப்ட் ஓவர் சென்னா

Manickavalli M
Manickavalli M @Mani_2090

#leftover #ilovecookingநம்ம விட்டுல் சென்னா வைத்து சுண்டல் செய்யும் போது எப்போதாவது மீந்து போகும் அதை அப்படியே ஃபிரிட்ஜ்ல வைத்து சாப்பிடுவோம் அதுக்கு பதிலா கொஞ்சமாக மாசால சேர்த்து இப்படி சாப்பிட்டு பாருங்க 😋😋

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. மீந்த சுண்டல் 100 கிராம்
  2. தண்ணீர் தேவையான அளவு
  3. தக்காளி 2
  4. பெரிய வெங்காயம் 1
  5. மல்லி தூள் 2 டேபிள்ஸ்பூன்
  6. கரம் மசாலா தூள் 1 டேபிள்ஸ்பூன்
  7. மிளகாய்த்தூள் 1 டேபிள்ஸ்பூன்
  8. தயிர் 50 கிராம்
  9. கொத்தமல்லி தழை & புதினா தலா 1 கைப்பிடி
  10. கருவேப்பிலை சிறிது
  11. உப்பு தேவைக்கேற்ப
  12. தேங்காய் எண்ணெய் 2 டேபிள்ஸ்பூன்
  13. சோம்பு 1 டேபிள்ஸ்பூன்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    மீந்த சுண்டலை கொதிக்க வைத்த தண்ணீரில் 1/2 டீ ஸ்பூன் உப்பு சேர்த்து 15 நிமிடங்கள் ஊறவைத்து நன்கு கழுவி எடுத்து கொள்ளவும்.

  2. 2

    மிக்ஸி ஜாரில் தக்காளி,வெங்காயம்,கொத்தமல்லி தழை, புதினா, மல்லி தூள், கரம் மசாலா, மிளகாய் தூள் எல்லாவற்றையும் சேர்த்து நன்கு விழுதாக அரைக்கவும்.

  3. 3

    கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு சேர்த்து அரைத்து வைத்துள்ள ‌விழுதை ஊற்றி 10 நிமிடங்கள் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும் பிறகு அதனுடன் தயிர் & சுண்டல் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கவும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Manickavalli M
Manickavalli M @Mani_2090
அன்று

Similar Recipes