சுண்டல் மசாலா இடியாப்பம் (Sundal masala idiyappam recipe in tamil)

Rajarajeswari Kaarthi
Rajarajeswari Kaarthi @cookwith_raji1
Erode

#jan1 #week1 சுண்டல் மசாலா இடியாப்பம் உடம்புக்கு மிகவும் நல்லது.சுவையாக இருக்கும்.சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்பர்.குழந்தைகளுக்கு நூடுல்சுக்கு பதிலா இந்த இடியாப்பத்தை கொடுக்கலாம்.

சுண்டல் மசாலா இடியாப்பம் (Sundal masala idiyappam recipe in tamil)

#jan1 #week1 சுண்டல் மசாலா இடியாப்பம் உடம்புக்கு மிகவும் நல்லது.சுவையாக இருக்கும்.சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்பர்.குழந்தைகளுக்கு நூடுல்சுக்கு பதிலா இந்த இடியாப்பத்தை கொடுக்கலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
2 பேர்
  1. 1கப் வேகவைத்த இடியப்பம்
  2. 1கப்வேகவைத்த கருப்பு சுண்டல்
  3. 2 பெரிய வெங்காயம்
  4. 1 தக்காளி
  5. 2 பச்சை மிளகாய்
  6. 1 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  7. 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  8. 1 டீஸ்பூன் கரம் மசாலா
  9. 1 டீஸ்பூன் மல்லித்தூள்
  10. 3 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்
  11. கொத்தமல்லி கருவேப்பிலை தேவையான அளவு
  12. உப்பு தேவையான அளவு
  13. எண்ணெய் தாளிக்க
  14. 1 டீஸ்பூன் சோம்பு

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    வெங்காயம் தக்காளி பச்சை மிளகாய் சிறிது சிறிதாக நறுக்கிக் கொள்ள வேண்டும்

  2. 2

    மசாலா பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்

  3. 3

    வாணலியில் எண்ணெயை ஊற்றி சோம்பு போட்டு தாளிக்க வேண்டும்

  4. 4

    சோம்பு சிவந்தவுடன் வெங்காயம் தக்காளி பச்சை மிளகாயை வதக்கவும்

  5. 5

    வதங்கியவுடன் இஞ்சி பூண்டு பேஸ்டை சேர்க்கவேண்டும்.

  6. 6

    கலவை நன்றாக வந்த பின் மிளகாய் தூள் மல்லித்தூள் மஞ்சள் தூள் கரம் மசாலாவை சேர்க்க வேண்டும்

  7. 7

    இதனுடன் வேகவைத்த சுண்டலை சேர்த்து ஒரு நிமிடம் கழித்து இடியாப்பத்தை சேர்க்கவேண்டும்.இப்போது நமது சுவையான சுண்டல் மசாலா இடியாப்பம் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Rajarajeswari Kaarthi
Rajarajeswari Kaarthi @cookwith_raji1
அன்று
Erode

Similar Recipes