தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 நபர்
  1. பச்சரிசி - 1 கப்
  2. பாசிப்பருப்பு - 1/4 கப்
  3. தண்ணீர் - 4 கப்
  4. ஒரு ஸ்பூன் மிளகு, சீரகம் அரை ஸ்பூன், முந்திரிபருப்பு 10
  5. பச்சை மிளகாய் 3 கறிவேப்பிலை ஒரு கொத்து
  6. நெய் 5 ஸ்பூன், தேவையான அளவு உப்பு

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    தேவையான பொருட்கள்

  2. 2

    பச்சரிசி,பாசிப்பருப்பு இரண்டையும் சேர்த்து நன்கு கழுவி எடுத்துக்கொள்ளவும். பிறகு அதை குக்கரில் போட்டு 4 டம்ளர் தண்ணீர் ஊற்றவும். பிறகு அதற்கு தேவையான அளவு உப்பை போட்டு 5 விசில் விட்டு வேக வைத்துக் கொள்ளவும்.

  3. 3

    பிறகு அடுப்பில் ஒரு கடாய் வைத்து 3 ஸ்பூன் நெய் விட்டு காய்ந்ததும் பச்சைமிளகாய் கறிவேப்பிலை போட்டு வதக்கவும். பிறகு மிளகு சீரகம், முந்திரிப் பருப்பு போட்டு வறுக்கவும்.

  4. 4

    பிறகு குக்கரில் வேக வைத்து இருந்த பொங்கலை கடாயில் சேர்த்து நன்கு கிளறவும். மீதி இருக்கும் இரண்டு ஸ்பூன் நெய்யை சுற்றிலும் ஊற்றி விட்டு இறக்கவும்.

  5. 5

    சுவையான மிளகு பொங்கல் ரெடி. இதற்கு சாம்பார், தேங்காய் சட்னி நன்றாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Priyamuthumanikam
Priyamuthumanikam @cook_24884903
அன்று

Similar Recipes