அவரைக்காய் பொரியல்

Sundari Mani
Sundari Mani @cook_22634314

நார் சத்து அதிகம் உள்ளது. தாய்மை காலத்தில் சாப்பிட்டால் உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கும் #mom

அவரைக்காய் பொரியல்

நார் சத்து அதிகம் உள்ளது. தாய்மை காலத்தில் சாப்பிட்டால் உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கும் #mom

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடம்
4 பேர் சாப்பிடலாம்
  1. அரை கிலோ அவரைக்காய்
  2. உப்பு தேவையான அளவு
  3. 1 ஸ்பூன் கடுகு
  4. 1 ஸ்பூன் உளுந்து பருப்பு
  5. 1 ஸ்பூன் மிளகாய் தூள்
  6. 5 சின்ன வெங்காயம் 2ஸ்புன் தேங்காய் துருவல்
  7. எண்ணெய் தேவையான அளவு
  8. கறிவேப்பிலை சிறிதளவு

சமையல் குறிப்புகள்

10 நிமிடம்
  1. 1

    அவரைக்காய் நன்றாக பார்த்து அரிந்து கொள்ளவும்.பிறகு ஒரு வாணலியில் எண்ணை விட்டு கடுகு தாளித்து உளுந்து பருப்பு தாளித்து, வெங்காயம் பொடியாகநறுக்கி வதக்கி கொள்ளவும். பிறகு நன்றாக வதங்கியதும் அரிந்த அவரைக்காய்யை போட்டு வதக்கவும். பிறகு உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கவும்.

  2. 2

    சிறிது தண்ணீர் ஊற்றி வேக விடவும். கறிவேப்பிலை சேர்த்து பெருங்காயம் சேர்த்து வேக விடவும். பிறகு வெந்ததும் தேங்காய் துருவல் போட்டு கலக்கவும்.நன்றாக வெந்ததும் பறிமாறவும். சாதத்துடன் பிசைந்து சாப்பிட சுவையாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Sundari Mani
Sundari Mani @cook_22634314
அன்று

Similar Recipes