முட்டை பிரியாணி

Viji Prem
Viji Prem @vijiprem24
Dharmapuri

#mom பாலூட்டும் தாய்மார்கள் குறைந்த அளவில் முட்டை போன்ற புரதம் மிகுந்த உணவுகளைச் சாப்பிடலாம்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

45 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 6 வேகவைத்த முட்டை
  2. 2 கப் பாஸ்மதி அரிசி (20 நிமிடம் ஊறவைக்கவும்) 1/2கிலோ)
  3. 2நறுக்கிய வெங்காயம்
  4. 2நறுக்கிய தக்காளி
  5. 1-1/2டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  6. 1டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  7. 1/2டீஸ்பூன் தனியாத்தூள்
  8. 1/2டீஸ்பூன் கரம் மசாலா
  9. 1/2 கப் நறுக்கிய புதினா கொத்தமல்லி
  10. 1/4கப் கெட்டித் தயிர்
  11. 2டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  12. 2டேபிள் ஸ்பூன் நெய்
  13. 1பட்டை, 2லவங்கம்,1 பிரிஞ்சி இலை, 2ஏலக்காய் (அரிசி வேக வைக்கும்போது)
  14. 1பட்டை, 2லவங்கம்,1 பிரிஞ்சி இலை, 2ஏலக்காய் (பிரியாணி செய்யும்போது)
  15. 1/2 எலுமிச்சை சாறு

சமையல் குறிப்புகள்

45 நிமிடங்கள்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் 5 கப் தண்ணீர் பட்டை பிரிஞ்சி இலை லவங்கம் ஏலக்காய் உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க விடவும் தண்ணீர் குடித்த பிறகு ஊறவைத்த பாஸ்மதி அரிசியை சேர்த்து முக்கால் பாகம் வேக வைத்து தண்ணீர் வடித்து எடுத்துக் கொள்ளவும்

  2. 2

    ஒரு வாணலியில் எண்ணெய் நெய் விட்டு சூடானதும் பட்டை லவங்கம் பிரிஞ்சி இலை சேர்க்கவும் பிறகு இதில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும் பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும் பிறகு தக்காளி சேர்த்து தக்காளி மசியும் வரை நன்றாக வதக்கவும் பிறகு வேகவைத்த முட்டை சேர்த்து எண்ணெயிலேயே ஒரு நிமிடம் வதக்கவும்

  3. 3

    எப்போது இதில் மிளகாய்த்தூள் கரம்மசாலா தனியாத்தூள் உப்பு சேர்த்து பச்சை வாசனை போக மிதமான தீயில் வதக்கவும்

  4. 4

    பச்சை வாசனை போன பிறகு இதில் நறுக்கிய கொத்தமல்லி புதினா தயிர் சேர்த்து 2 நிமிடம் நன்றாக வதக்கவும் பிறகு மசாலாவில் சிறிது தனியாக எடுத்துக் கொள்ளவும்.. வேகவைத்த பாசுமதி அரிசியை இதன் மேல் தூவவும் பிறகு சிறிது மசாலா முட்டையை அரிசியின் மேல் வைக்கவும்

  5. 5

    மறுபடியும் வேகவைத்த பாசுமதி அரிசியை இதன் மேல் தூவவும் பிறகு நறுக்கிய புதினா கொத்தமல்லி இலை தூவி 1/2 எலுமிச்சை சாறு கலந்து மூடி காற்றுப் புகாதவாறு துணியால் மூடி குறைந்த தீயில் 15 நிமிடம் வைக்கவும்

  6. 6

    அடுப்பை அணைத்து 10 நிமிடம் கழித்து திறந்து ஒன்றுடன் ஒன்று சேருமாறு மெதுவாக கிளறவும்

  7. 7

    முட்டை பிரியாணி தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Viji Prem
Viji Prem @vijiprem24
அன்று
Dharmapuri
Running Madurai virundhu homemade delivery restaurantsFb pagehttps://www.facebook.com/vijiprem20/
மேலும் படிக்க

Similar Recipes