சாக்லேட் ட்ரிஃபில் கேக் (Chocolate truffle cake recipe in Tamil)

kavi murali
kavi murali @kavimurali_cook
Chennai

*என் மகன் பிறந்தாளுக்காக நான் செய்து கொடுத்த சாக்லேட் ட்ரிஃபில் கேக்.

*இதை நான் முதல் முறையாக செய்ததாக இருந்தாலும் சுவை அபாரமாக இருந்தது.

* இதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

#Ilovecooking...

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

60 நிமிடங்கள்
6 பரிமாறுவது
  1. 1 1/2 கப் மைதா மாவு
  2. 1 கப் பொடித்த சர்க்கரை
  3. 2 டேபிள் ஸ்பூன் கொக்கோ பவுடர்
  4. 1 கப் பால்
  5. 1/2 கப் எண்ணெய்
  6. 1 டேபிள் ஸ்பூன் பேக்கிங் பவுடர்
  7. 1/2 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடா
  8. 1 டேபிள் ஸ்பூன் வெனிலா எசன்ஸ்
  9. 1 டேபிள் ஸ்பூன் வினிகர்
  10. 3 டேபிள் ஸ்பூன் சர்க்கரை கலந்த தண்ணீர்
  11. சாக்லெட் சிரப் செய்வதற்கு
  12. 1 டேபிள்ஸ்பூன் பட்டர்
  13. 100 கிராம் டார்க் சாக்லேட்
  14. 2 டேபிள்ஸ்பூன் பால்
  15. முந்திரித் துண்டுகள் அலங்கரிக்க
  16. சாக்லேட் பால்ஸ் அலங்கரிக்க

சமையல் குறிப்புகள்

60 நிமிடங்கள்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் வெதுவெதுப்பான பால், எண்ணெய், பொடித்த சர்க்கரை,வினிகர் மற்றும் வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து ஒரு டீஸ்பூன் வைத்து கலக்கி 5 நிமிடங்கள் மூடி வைக்கவும். 5 நிமிடங்கள் கழித்து மூடியைத் திறந்து விஸ்க் /பிளன்டர் வைத்து கலக்கி அதன் மேல் ஒரு சல்லடை வைத்து மைதா மாவு,பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா, கோகோ பவுடர் சேர்த்து நன்கு சலித்துக்கொள்ளவும்.

  2. 2

    இந்த கலவையை ஒரு விஸ்க் வைத்து கட்டி இல்லாமல் கலக்கி வைத்துக் கொள்ளவும். ஒரு அடி கனமான கடாயில் ஒரு ஸ்டாண்ட் வைத்து மூடி போட்டு பத்து நிமிடங்கள் மிதமான தீயில் சூடேற்றி வைத்துக் கொள்ளவும். ஒரு வட்டமான பாத்திரத்தில் உள்ளே சிறிதளவு எண்ணெய் ஊற்றி நன்கு தடவிக் கொண்டு கலந்து வைத்துள்ள மாவை இதனுள் ஊற்றி ஒரு தட்டு தட்டி சூடேற்றிய கடையில் உள்ளே வைத்து மூடி போட்டு மூடி 50 அல்லது 55 நிமிடங்கள் வரை வேக வைத்துக் கொள்ளவும்.

  3. 3

    கேக் நன்றாக ஆறிய பிறகு ஒரு தட்டிற்கு மாற்றி குச்சியை வைத்து அங்குங்கு ஓட்டை போட்டுக் கொண்டு சர்க்கரை கலந்த தண்ணீரை டீ ஸ்பூனில் எடுத்து கேக்கின் மேல் சிறிது சிறிதாக ஊற்றி தடவி வைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் பட்டர்,டார்க் சாக்லேட் மற்றும் பால் சேர்த்து மிதமான தீயில் கிளறிக் உருக்கி கொண்டால் சாக்லெட் சிரப் தயார். இதனை கேக் முழுவதும் படும்படி சாக்லெட் சிரப்பை ஊற்றிக் கொள்ளவும்.

  4. 4

    கேக்கின் ஓரங்களை முந்திரி துண்டுகளை ஒட்டி விடவும். பிறகு கேக்கின் மேல் சாக்லேட்டை வைத்து அலங்கரித்தால் பேக்கரியில் வாங்கியது போல சுவையான கேக் தயார். இனிமேல் எந்தவிதமான அசாதாரணமான சூழ் நிலைகளிலும் வீட்டிலேயே சிறப்பாக நாம் கேக்கை தயார் செய்யலாம்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

கமெண்ட் (2)

Renukabala
Renukabala @renubala123
பிறந்தநாள் வாழ்த்துக்கள். அருமையான கேக் செய்துள்ளீர்.🎂👌👏

எழுதியவர்

kavi murali
kavi murali @kavimurali_cook
அன்று
Chennai
வானவில்தோன்றும் போதுவானம் அழகாகிறதுநம்பிக்கைதோன்றும் போதுவாழ்க்கை அழகாகிறது...
மேலும் படிக்க

Similar Recipes