ஈசி ஹெல்தி சென்னா மசாலா

Aishwarya Veerakesari
Aishwarya Veerakesari @laya0431

#mom
கொண்டைக்கடலையில் அதிக அளவில் ஃபோலிக் அமிலம் இருக்கிறது. இது நரம்புகளைத் தூண்டி, துரிதப்படுத்தும். ரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்வதில் இரும்புச்சத்துக்கு மிக அதிக பங்கு உண்டு. அதிலும் கர்ப்ப காலத்தில் மிக அதிகமாகவே தேவைப்படும்.

ஈசி ஹெல்தி சென்னா மசாலா

#mom
கொண்டைக்கடலையில் அதிக அளவில் ஃபோலிக் அமிலம் இருக்கிறது. இது நரம்புகளைத் தூண்டி, துரிதப்படுத்தும். ரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்வதில் இரும்புச்சத்துக்கு மிக அதிக பங்கு உண்டு. அதிலும் கர்ப்ப காலத்தில் மிக அதிகமாகவே தேவைப்படும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1கப்கொண்டைக்கடலை
  2. 1ஸ்பூன்இஞ்சிபூண்டுவிழுது
  3. எண்ணெய்
  4. 1பட்டை
  5. 1ஸ்பூன்சீரகம்
  6. 1பிரியாணிஇலை
  7. 1வெங்காயம்
  8. 1தக்காளி
  9. 1ஸ்பூன்மல்லிதூள்
  10. 1/2ஸ்பூன்கரம்மசாலாதூள்
  11. 1/2ஸ்பூன்ஆம்சூர்பவுடர்
  12. உப்பு தேவையான
  13. 1/2ஸ்பூன்சீரகத்தூள்
  14. 2ஸ்பூன்சிவப்புமிளகாய்தூள்
  15. தண்ணீர்
  16. கொத்தமல்லி

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் கொண்டைக்கடலை 8 மணி நேரம் ஊறவைக்கவும்... பின்னர் குக்கரில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பட்டை, பிரியாணிஇலை,சீரகம் சேர்த்து நன்கு வதக்கவும்... பின்னர் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கிய பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்...

  2. 2

    பின்னர் தக்காளி சேர்த்து வதக்கிய பின் சிவப்புமிளகாய்தூள், மல்லிதூள்,கரம்மசாலாதூள், ஆம்சூர்பவுடர்,உப்பு, சீரகத்தூள் சேர்த்து வதக்கிய பிறகு கொண்டைக்கடலை சேர்க்கவும்...

  3. 3

    பின்னர் தேவையான தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி வைத்து 7 விசில் வந்ததும் அடுப்பை அணைத்து கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்... சுவையான ஆரோக்கியமான ஈசி ஹெல்தி சென்னா மசாலா தயார்...

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Aishwarya Veerakesari
அன்று

Similar Recipes