முள்ளங்கி கீரை பொரியல்

Renukabala
Renukabala @renubala123
Coimbatore

#mom
முள்ளங்கி கீரையில் நிறைய சத்துக்கள் உள்ளது. நல்ல மருத்துவகுணம் கொண்டது. நம்மில் பலர், முள்ளங்கியை மட்டும் கறி செய்துவிட்டு கீரையை தூக்கிப் போட்டு விடுகிறோம். சத்தான இந்தக்கீரையில் இரும்பு, சுண்ணாம்பு, புரோட்டின் சத்துக்கள், கால்சியம், பாஸ்பரஸ் போன்ற தாது உப்புக்களும், வைட்டமின் ஏபிசி முதலியவையும் அதிகமாக உள்ளது. இனிமேல் யாரும் முள்ளங்கி கீரையை தூக்கிப் போடாமல் சமைத்து சுவைக்கவே இந்த பதிவு.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
2 பேர்
  1. 2 கட்டு கீரை
  2. 1/4 கப் சாம்பார் வெங்காயம்
  3. 1டீஸ்பூன் மிளகாய் தூள்
  4. 1/4டீஸ்பூன் மஞ்சள் தூள்
  5. உப்பு தேவையான அளவு
  6. தாளிக்க :
  7. 1டீஸ்பூன் எண்ணை
  8. 1/4 டீஸ்பூன் கடுகு
  9. 1டீஸ்பூன் உளுந்து, கடலை பருப்பு
  10. கறிவேப்பிலை

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    முள்ளங்கிகீரையை நன்கு கழுவு பொடியாக நறுக்கி வைக்கவும். வெங்காயத்தையும் நறுக்கி வைத்துக்கொள்ளவும்.

  2. 2

    வாணலியை ஸ்டவ்வில் வைத்து சூடானதும், எண்ணை சேர்த்து சூடு செய்து, கடுகு, உளுந்து, கடலைப் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து பொரிந்ததும், நறுக்கி வைத்துள்ள வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கி, பின் நறுக்கி வைத்துள்ள முள்ளங்கி கீரையை சேர்த்து, உப்பு சேர்த்து கலந்து மூடி வைக்கவும்.

  3. 3

    ஐந்து நிமிடங்கள் வெந்தவுடன் திறந்து மிளகாய் தூள் சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்கி, கீரை வெந்துள்ளதை பார்த்து, தேங்காய் துருவல் கலந்து இறக்கி சர்விங் பௌல்லுக்கு மாற்றவும்.

  4. 4

    இப்போது சத்தான, சுவையான முள்ளங்கி கீரை பொரியல் சுவைக்கத்தயார்.

  5. 5

    சத்துக்கள் நிறைந்த முள்ளங்கி கீரையை இனிமேல் யாரும் வீணாக்காமல், சமைத்து சுவைக்கவும். சாதத்துடன் சேர்த்தும், சைடு டிஷ் ஆகவும் வைத்துக்கொண்டு சுவைக்கலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Renukabala
Renukabala @renubala123
அன்று
Coimbatore
My passion for cooking is my happiness.I make dishes and assemble them in my own style.
மேலும் படிக்க

Similar Recipes