நாட்டுக்கோழி குழம்பு (Naatu kozhi kulambu recipe in tamil)

Kanaga Hema😊
Kanaga Hema😊 @cook_kanagahema

நாட்டுக்கோழி குழம்பு (Naatu kozhi kulambu recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1 மணி 30 நிமிடம
5 பேர்
  1. அரை கிலோநாட்டுக்கோழி ,
  2. 10சின்ன வெங்காயம்
  3. 1தக்காளி
  4. 1பச்சை மிளகாய்
  5. 2 ஸ்பூன்இஞ்சி பூண்டு விழுது
  6. இரண்டு ஸ்பூன்தயிர்
  7. கால் டீஸ்பூன்மஞ்சள்தூள்
  8. 2 டீஸ்பூன்மிளகாய்த்தூள்
  9. 2 டீஸ்பூன்மல்லித்தூள்
  10. ஒரு டீஸ்பூன்சோம்புத் தூள்
  11. தேவையானஅளவு கல்லுப்பு
  12. தேவையானஅளவு தண்ணீர்
  13. தாளிக்க:
  14. நல்லெண்ணெய் தேவையான அளவு
  15. 2பட்டை துண்டு
  16. 1அண்ணாச்சி பூ
  17. கல்பாசி பூ
  18. கால் டீஸ்பூன்சோம்பு
  19. அரைக்க:
  20. 4 ஸ்பூன்தேங்காய்
  21. 1 டேபிள்ஸ்பூன்மிளகு

சமையல் குறிப்புகள்

1 மணி 30 நிமிடம
  1. 1

    முதலில் சுத்தம் செய்த நாட்டுக் கோழி துண்டுகளுடன் இஞ்சி பூண்டு விழுது, தயிர், மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், கல்லுப்பு, சோம்பு தூள் ஒன்றியத்தின் ஒன்றாக கலந்து பிரட்டி 15 நிமிடங்கள் ஊற வைக்கவும்.

  2. 2

    சின்ன வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாயை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

  3. 3

    பிறகு அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய் காய்ந்ததும் தாளிக்க வைத்திருந்ததை தாளித்து, வெங்காயம் தக்காளி பச்சை மிளகாய் போட்டு வதக்கி, பிரட்டி வைத்த துண்டுகளை போட்டு நன்றாக சுருள வதக்கவும்.

  4. 4

    எண்ணெய் பிரிந்து வரும் வரை நன்றாக வதங்கியவுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி வைத்து 5 முதல்‌ 6 விசில் விடவும்.

  5. 5

    பிறகு விசில் அடங்கியவுடன் கோழி நன்றாக வெந்து இருக்கும். பின்பு தேங்காய் மற்றும் மிளகு நன்றாக அரைத்து வேகவைத்த குழம்புடன் சேர்க்கவும்

  6. 6

    சிறிது நேரம் மட்டும் அடுப்பில் வைத்து ஒரு கொதி விடவும்.

  7. 7

    சுவையான நாட்டுக்கோழி குழம்பு தயார். சளி மற்றும் உடல் சோர்விற்கு மிகவும் நல்லது. பிள்ளை பெற்ற தாய்மார்களுக்கு சேர்த்துக்கொண்டால் நன்றாக பால் ஊரும் உணவு.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Kanaga Hema😊
Kanaga Hema😊 @cook_kanagahema
அன்று

Similar Recipes