சாக்லேட் க்ராஸண்ட் (Chocolate Croissant) (Chocolate crescent recipe in tamil)

சாக்லேட் க்ராஸண்ட் (Chocolate Croissant) (Chocolate crescent recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பவுலில் பால், சர்க்கரை, ஈஸ்ட் கலந்து 15 நிமிடம் அப்படியே மூடி வைக்கவும். ஈஸ்ட் ஆக்டிவேட் ஆகி வந்து விடும்.
- 2
பிறகு இதில் மைதா மாவு, உப்பு, 2டேபிள் ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து கலந்து விட்டு கைகளால் நன்கு அழுத்தம் கொடுத்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து வைத்து மூடி போட்டு 1 மணி நேரம் வைக்கவும்.மாவு இரண்டு மடங்காக உப்பி வந்து விடும்.
- 3
பிறகு இதனை நன்கு அழுத்தம் கொடுத்து பிசைந்து சம துண்டுகளாக கத்தியால் நறுக்கி உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.
- 4
பின்னர் இதனை வட்ட வடிவில் தேய்த்து அதன் மேல் எல்லா இடங்களிலும் படும் படி வெண்ணெய் தடவி வைக்கவும்.இதே போல் ஒவ்வொரு உருண்டைகளையும் ஒரே வடிவில் உருட்டி வெண்ணெய் தடவி ஒன்றின் மேல் ஒன்றாக வைக்கவும்.
- 5
கடைசி உருண்டயை முன்பு விட சற்று பெரியதாக தேய்த்து மற்ற தேய்த்த லேயர் மீது வைத்து எல்லா பக்கங்களிலும் கவர் செய்து வைத்து கொள்ளவும். பிறகு இதனை இன்னும் சற்று அழுத்தம் கொடுத்து வட்ட வடிவில் தேய்த்து கொள்ளவும்.
- 6
கத்தியால் சம பாகமாக 8 பகுதியாக கட் செய்து கொள்ளவும்.ஒவ்வொரு துண்டுகளாக தட்டில் தனியே எடுத்து வைக்கவும்.
- 7
பின்னர் ஒரு பவுலில் சாக்லேட் துண்டுகள் எடுத்து கொள்ளவும். இந்த நறுக்கிய ஒரு மாவு துண்டை எடுத்து அதன் முக்கோண வடிவில் கீழ் பகுதியில் மத்தியில் சிறிதளவு கட் செய்து அதன் நடுவில் ஒரு சாக்லேட் துண்டை வைக்கவும்.
- 8
பின் அதனை அப்படியே உருட்டி கொள்ளவும். இதேபோல் எல்லா துண்டுகளையும் செய்து வைக்கவும்.
- 9
பிறகு பேக் ட்ரேயில் வெண்ணெய் தடவி இந்த துண்டுகளை சிறிதளவு இடைவெளி விட்டு வைத்து அப்படியே 10 நிமிடம் வைக்கவும்.சிறிது பெரிதாக வரும்.ஓவனை 180 டிகிரி செல்சியஸில் 5 நிமிடம் கன்வக்ஷன் மோடில் ப்ரீஹுட் செய்யவும்.
- 10
பின்னர் இந்த துண்டுகளின் மேல் பால் தொட்டு லேசாக ப்ரஷ் செய்து கொள்ளவும். பிறகு ஓவனில் வைத்து 180 டிகிரி செல்சியஸ் 25 நிமிடம் பேக் செய்து எடுக்கவும்.
- 11
பிறகு வெளியே எடுத்து அதன் மேல் வெண்ணெய் தொட்டு சிறிதளவு ப்ரஷ் செய்து கொள்ளவும்.
- 12
சூப்பரான சுவையான சாக்லேட் க்ராஸண்ட் தயார். நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
சாக்லேட் மலர் குக்கீ (Chocolate malar cookies recipe in tamil)
#bake உங்கள் குழந்தைகள் இந்த முறுமுறுப்பான மலர் குக்கீகளை சாப்பிட ஆசைப்படுவார்கள் Swathi Emaya -
கோதுமை சாக்லேட் கேக் (Homemade wheat chocolate cake recipe in tamil)
#bakeசுவையான கோதுமை சாக்லெட் கேக்.. Kanaga Hema😊 -
-
-
-
-
சாக்லேட் ஸ்வ்ரில் பிரெட்(chocolate swirl bread recipe in tamil)
#welcomeஇந்த பிரெட்டின் புறத்தோற்றதால்,நான் கவரப்பட்டதால்,முதல் முறை தோல்வி கண்டாலும், இரண்டாம் முறை வெற்றி பெற, தோழி இலக்கியா(@homecookie_270790) மற்றும் one of our cookpad member & 'home chef ' mam kavitha விடமும் என் சந்தேகங்களைக் கேட்டு தெளிவு பெற்று,வெற்றி பெற்றுள்ளேன். Ananthi @ Crazy Cookie -
-
-
-
சிறுத்தை அச்சு ரொட்டி (leopard print bread) (Siruthai achu rotti recipe in tamil)
#bake karunamiracle meracil -
சாக்லேட் குக்கீஸ்.(chocolate cookies recipe in tamil)
வீட்டில் இருக்கும் கோதுமை மாவு ஈசியாக குக்கீஸ் செய்யலாம் ..#made2 Rithu Home -
-
-
வென்னிலா சாக்லேட் கேக் (Vanilla chocolate cake recipe in tamil)
#bakeமிகவும் சுலபமாக செய்திடலாம் குழந்தைகளுக்கு பிடித்தமான வெனிலா சாக்லேட் கேக் jassi Aarif -
-
-
-
-
-
சாக்லேட் கேக் வித்தவுட் சாக்லேட் (Chocolate cake without chocolate recipe in tamil)
#noovenbaking Mispa Rani -
-
-
-
Walnut Chocolate Brownie (Walnut chocolate brownie recipe in tamil)
#bake #photo Aishwarya Veerakesari
More Recipes
கமெண்ட் (8)