தினை பனியாரம் (Thinai paniyaram recipe in tamil)

Meenakshi Maheswaran
Meenakshi Maheswaran @cook_20286772

தினை பனியாரம் (Thinai paniyaram recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
4 பரிமாறுவது
  1. 1 கப் தினை அரிசி
  2. 1 கப் இட்லி அரிசி
  3. 1/4 கப் உளுந்து
  4. 1/2 டீஸ்பூன் வெந்தயம்
  5. 1.5 கப் வெல்லம்
  6. 2ஏலக்காய்
  7. 1 டீஸ்பூன் சுக்கு பொடி
  8. நல்லெண்ணெய் அல்லது நெய்

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    தினை அரிசியை, கல், குருணை நீக்கி 4 முறை நன்கு கழுவி, அரிசி, உளுந்து, வெந்தயம் சேர்த்து 4 மணி நேரம் ஊற வைக்கவும்.

  2. 2

    ஊறிய பொருட்களை மிக்ஸி அல்லது கிரைண்டரில் மாவாக அரைத்து கொள்ளவும்.

  3. 3

    வெல்லத்தை நீரில் கரைத்து வடிகட்டி மாவுடன் கலக்கவும். அதனுடன் ஏலக்காய் பொடி, சுக்கு தூள் சேர்த்து கலக்கவும்.

  4. 4

    பணியார கல்லை சூடாக்கி, தேவைக்கேற்ப நெய் அல்லது எண்ணெய் சேர்த்து, பணியார மாவை ஊற்றி, இரு புறமும் நன்கு வெந்தவுடன் எடுக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Meenakshi Maheswaran
Meenakshi Maheswaran @cook_20286772
அன்று

கமெண்ட் (2)

Similar Recipes