மினி மசாலா சுண்டல் கொழுக்கட்டை (Mini masala sundal recipe in tamil)

Nithyavijay
Nithyavijay @cook_24440782
Coimbatore
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

40 நிமிடங்கள்
5 பரிமாறுவது
  1. 200 கிராம்பச்சரிசி
  2. 200 கிராம்புழுங்கல் அரிசி
  3. 1 கப்வேகவைத்த சுண்டல்
  4. 2பெரிய வெங்காயம்
  5. 1தக்காளி
  6. 1மேஜைக்கரண்டிஇஞ்சி பூண்டு விழுது
  7. 2 தேக்கரண்டிமல்லி தூள்
  8. 1தேக்கரண்டிமிளகாய் தூள்
  9. 1தேக்கரண்டிமஞ்சள் தூள்
  10. 1மேஜைக்கரண்டிகரம் மசாலா
  11. எண்ணெய் தேவையான அளவு
  12. உப்பு தேவையான அளவு
  13. கறிவேப்பிலை கொத்தமல்லி சிறிதளவு
  14. தண்ணீர் தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

40 நிமிடங்கள்
  1. 1

    அரிசியை இரண்டு மணி நேரம் ஊற வைத்துப் பின் நன்றாக கழுவி மைய அரைத்து ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி அரைத்த மாவை கெட்டி பதம் வரும் வரை கிளறிய பிறகு சிறிய சிறிய உருண்டைகளாக உருட்டி ஆவியில் வேக வைக்கவும்.

  2. 2

    அரைப்பதற்கு வெங்காயம், தக்காளி,இஞ்சி,பூண்டு, நன்றாக வதக்கி ஆறிய பிறகு மிக்ஸி ஜாரில் மல்லித்தூள்,மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா சேர்த்து மைய அரைத்து வைத்துக் கொள்ளவும். அடுத்து ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்தம் பருப்பு,கறிவேப்பிலை,வெங்காயம்,தக்காளி சேர்த்து வதக்கவும்.வதக்கிய பிறகு அரைத்து வைத்திருக்கும் மசாலாவை சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி பச்சை வாசம் போகும் வரை கொதிக்கவிடவும். பின் வேகவைத்த சுண்டலை சுண்டலை சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.

  3. 3

    கொதித்த பிறகு வேக வைத்திருக்கும் கொழுக்கட்டை உருண்டைகளை சேர்த்து மீண்டும் 5 நிமிடம் கொதிக்கவிடவும்.
    பின் கொத்தமல்லி இலையை தூவி பரிமாறலாம்.

  4. 4

    இப்பொழுது சுவையான மசாலா சுண்டல் கொழுக்கட்டை ரெடி.நன்றி நித்யா விஜய்.கோவை பாசக்கார பெண்கள்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Nithyavijay
Nithyavijay @cook_24440782
அன்று
Coimbatore

Similar Recipes