Lentils corn dumplings (Lentils corn dumplings recipe in tamil)

#steam
இது கர்நாடக மாநிலத்தின் உணவு வகை அகும்.இதில் பருப்பு வகைகள் சேர்ப்பதால் காலைஉணவிற்கு ஏற்றது.காலை சுறுசுறுப்புடனும் சக்தியுடன் வேலை செய்ய ஏற்ற புரத சத்து மிகுந்த ஆவியில் வேக வைத்த உணவு ஆகும்.மேலும் இதில் கீரை மிளகு இஞ்சி சீரகம் பெருங்காயம் சேர்த்து இருப்பதால் உடல் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.கிருமிகள் தொற்று உண்டாகாது.நான் சுவைக்காக கார்ன் சேர்த்து உள்ளேன்.
Lentils corn dumplings (Lentils corn dumplings recipe in tamil)
#steam
இது கர்நாடக மாநிலத்தின் உணவு வகை அகும்.இதில் பருப்பு வகைகள் சேர்ப்பதால் காலைஉணவிற்கு ஏற்றது.காலை சுறுசுறுப்புடனும் சக்தியுடன் வேலை செய்ய ஏற்ற புரத சத்து மிகுந்த ஆவியில் வேக வைத்த உணவு ஆகும்.மேலும் இதில் கீரை மிளகு இஞ்சி சீரகம் பெருங்காயம் சேர்த்து இருப்பதால் உடல் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.கிருமிகள் தொற்று உண்டாகாது.நான் சுவைக்காக கார்ன் சேர்த்து உள்ளேன்.
சமையல் குறிப்புகள்
- 1
மேற்கூறிய தேவையான எல்லா பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும்.துவரம் பருப்பு, பாசிப் பருப்பு மற்றும் கடலைப் பருப்பு மூன்றையும் நன்கு கழுவி 3 மணி நேரம் தனித்தனியாக ஊற வைத்துக் கொள்ளவும். வேகவைத்த சோளக் கதிரை கால் கப் எடுத்து வைத்துக் கொள்ளவும். அரிந்த இஞ்சி, மிளகாய், கருவேப்பிலை, ஒன்று இரண்டாக நுனுக்கிய சீரகம் மிளகு, நறுக்கிய கொத்தமல்லி, துருவிய தேங்காய், பொடியாக நறுக்கிய முருங்கை கீரை பெருங்காயத் தூள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- 2
பருப்பு வகைகள் மூன்று மணி நேரம் ஊறிய பிறகு தண்ணீரை நன்கு வடித்து மிக்ஸியில் கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். பருப்பு ஊற வைக்கும் பொழுது பாசிப்பருப்பை தனியாக ஊற வைத்து அதில் ஒரு ஸ்பூன் பாசிப்பருப்பை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். இதே போல் வேக வைத்த சோளக்கதிர் ஒரு ஸ்பூன் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.மீதி பாசிப்பருப்பு மற்றும் சோளக் கதிரை மற்ற பருப்புகளுடன் சேர்த்து கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும் தண்ணீர் சேர்க்காமல் அரைத்துக் கொள்ளவும்.
- 3
இப்போது அரைத்த பருப்பு வகைகளுடன் அரிந்து வைத்த எல்லா பொருட்களையும் சேர்க்கவும்.தனியாக எடுத்து வைத்த முழு பாசிப் பருப்பு ஒரு ஸ்பூன் மற்றும் வேக வைத்த சோளக்கதிரில் ஒரு ஸ்பூன் சேர்த்து கொள்ளவும். உப்பு தேவையான அளவு சேர்த்துக் கொள்ளவும். எல்லாவற்றையும் நன்றாக பிசைந்து கலந்து கொள்ளவும். தண்ணீர் சேர்க்க வேண்டாம்.
- 4
ஒரு இட்லி பானையில் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.கைகளில் எண்ணெய் தடவிக் கொண்டு மாவினை ஓவல் ஷேப்பில் பிடித்து எண்ணை தடவிய இட்லி தட்டில் வைக்கவும். மூடிக் கொண்டு மூடவும்.இதை இட்லி பானையில் வைத்து 15லிருந்து 20 நிமிடம் வரை வேக விடவும்.
- 5
20 நிமிடங்கள் கழித்து இட்லி பானையை திறந்து கொழுக்கட்டை வெந்து விட்டதா என்று பார்க்கவும். இந்த கொழுக்கட்டைக்கு மிளகாய் சட்னி, தேங்காய் சட்னி சுவையாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
Veg corn soup
#refresh2இந்த கொரானா காலத்தில் இது போன்ற ஏதாவது ஒரு சூப் வைத்து குடிப்பது எதிர்ப்பு சக்தி தரக்கூடிய உணவாக இருக்கும். காய்கறிகளில் உள்ள சத்துக்கள்,இஞ்சி பூண்டு சீரகம் மிளகு போன்ற பொருட்கள் தரும் தொண்டை பாதுகாப்பு, பசி தூண்டும் சக்தி நமக்கு நல்லதுதானே?வீட்டில் எந்த காய் இருந்தாலும் சேர்த்து செய்யலாம்.நான் கேரட் பீன்ஸ் நாட்டு சோளக்கதிர் போட்டு செய்தேன். Meena Ramesh -
ஆந்திரா ஹோட்டல் டிஃபன் சாம்பார் (Tiffen sambar recipe in tamil)
#apஆந்திரா 2 செல்லும் போது ஹோட்டலில் இதே சுவை கொண்ட சாம்பார் டிபனுக்கு சாப்பிட்டு உள்ளேன். என் ஆந்திர மாநில (விசாகப்பட்டினம்) தோழியிடம் கேட்டு இந்த சாம்பார் செய்தேன். Meena Ramesh -
ரெஸ்டாரன்ட் ஸ்டைல் கூட்டு.🥗(restuarant style koottu recipe in tamil)
#m2021இந்த ஹோட்டல் ஸ்டைல் கூட்டு எனக்கு மிகவும் பிடிக்கும் எனக்கு மட்டுமல்ல என் கணவருக்கும் மிகவும் இந்த கூட்டுப் பிடிக்கும். இன்று இதில் ஒரே நிறமுள்ள இரண்டு காய்கறிகள் மற்றும் தட்டை காய் வேக வைத்த துவரம்பருப்பு சேர்த்து செய்துள்ளேன் ஆகவே காய்கறியில் உள்ள எல்லா சத்துக்களும் மற்றும் துவரம் பருப்பு தட்டை கையில் உள்ள புரத சத்தும் நம் உடலுக்கு கிடைக்கும். தேங்காய் துருவல் பச்சை மிளகாய் சீரகம் சேர்த்து அரைத்து இந்தக் கூட்டு செய்தேன். Meena Ramesh -
பீட்ரூட் வடை😋
#immunity #book சத்துக்கள் நிறைந்த காய்கறிகளில் ஒன்று பீட்ரூட். பீட்ரூட்டை எப்பொழுதும்போல் பொரியலாகச் செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிட மாட்டார்கள். நோய்த்தொற்று மிகுந்த இந்த காலகட்டத்தில் உடலுக்கு எதிர்ப்பு சக்தி திறன் அதிகம் தேவைப்படுகிறது. பீட்ரூட்டில் நோய் எதிர்ப்புத்திறன் அதிகம் உள்ளது .மேலும் இதில் சீரகம், இஞ்சி, வெங்காயம், புரத சத்து நிறைந்த பருப்பு வகைகள் சேர்ப்பதால் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பீட்ரூட்டில் ஸ்நாக்ஸாக வடை செய்து கொடுத்தோம் என்றால் விரும்பி சாப்பிடுவார்கள். Meena Ramesh -
உளுந்து போண்டா (Ulunthu bonda recipe in tamil)
#poojaவெங்காயம் சேர்க்காத உளுந்து போண்டா. நாங்கள் சரஸ்வதி பூஜை மற்றும் திருவாதிரை பூஜைக்கு செய்வது. இதனுடன் இனிப்பு கச்சாயம் சுடுவோம். அதன் ரெசிபி கொடுத்துள்ளேன்.உளுந்து போண்டா வில் வெங்காயம் சேர்க்காமல் கொத்தமல்லித்தழை கறிவேப்பிலை சீரகம் மிளகு மட்டும் சேர்த்து உளுந்து மாவில் போடப்படும் போண்டா. Meena Ramesh -
சுரைக்காய் சாம்பார் சாதம்(in pressure cooker) (Suraikkaai sambar satham recipe in tamil)
# steamசுரைக்காயை வைத்து எளிதான சுவையான சாம்பார் சாதம் இன்று செய்தேன். குக்கெரில் ஆவியில் வேக வைத்து செய்தேன்.சுவை மிகவும் நன்றாக இருந்தது. சுரைக்காய் தவிர வேறு காய்கள் எது வேண்டுமானாலும் சேர்த்து செய்யலாம். மேலும் இரண்டு மூன்று காய்கள் சேர்த்து கதம்ப சாம்பார் சாதம் ஆகவும் செய்யலாம். Meena Ramesh -
மிளகு ரசம்(milagu rasam recipe in tamil)
#cf8மிளகு ரசம் இந்த பனி காலத்திற்கு மிகவும் நல்லது . தொண்டை தொற்று, சளி ,காய்ச்சல் போன்றவை வராமல் தடுக்கும். தட்பவெப்ப நிலைக்கேற்ப தரமான போட்டி தலைப்பு தந்த குக் பாடிர்க்கு நன்றி. Meena Ramesh -
Pineapple nendra Madura curry🍍🍌 (Pinapple Nendra madura curry recipe in tamil)
#kerala#photoஇதுவும் கேரள உணவு வகைகளில் முக்கியமான ஒன்று.இனிப்பும் புளிப்பும் காரமும் என மூன்று வகை சுவை கலந்த வித்தியாசமான உணவு ஆகும்.சாப்பாடு உடனும் சாப்பிடலாம்.அப்படியே மாலை நேர சிற்றுண்டி ஆகவும் சாப்பிடலாம்.😊 Meena Ramesh -
செட்டிநாடு அடை தோசை (Chettinadu adai dosai recipe in tamil)
#steamஇந்த அடை தோசை உள்ள புரத சத்து உடம்பிற்கு மிகவும் நல்லது Sharanya -
-
நூடுல்ஸ் மோமோஸ்🍝 (Noodles momos recipe in tamil)
#steamநூடுல்ஸ் மொமோஸ் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஸ்நாக்ஸ் ஆகும்.நீராவியில் வேக வைத்து செய்வதால் உடல் நலத்திற்கும் மிகவும் நல்லது. Meena Ramesh -
துவரம் பருப்பு சாதம் (toor dal rice recipe in tamil)
#made4இது திருநெல்வேலி மாவட்டத்தில் மிகவும் பிரபலமான ஒரு ரெசிபி... இதில் முருங்கைக் கீரையும் சேர்த்து செய்துள்ளதால் இது மிகவும் சத்தானதும் கூட.. Muniswari G -
அரை கீரை பாசி பருப்பு சாதம் (Araikeerai paasiparuppu satham recipe in tamil)
#kids3கூட்டு,பொரியல் ஆக கீரை செய்து கொடுத்தால் குழந்தைகள் சாப்பிட மாட்டார்கள் இது போல் காரம் கம்மியாக நெய் சேர்த்து சாதமாக கலந்து தொட்டுக் கொள்ள அவர்களுக்கு பிடித்தார் போல அப்பளம் வடகம் உடன் கொடுத்தால் மிச்சம் வைக்காமல் சாப்பிட்டு விடுவார்கள். Meena Ramesh -
-
ஸ்பெஷல் ஆனியன் கேரட் ரவா தோசை(rava dosai recipe in tamil)
#ரவா தோசை அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. எப்போதும் ப்லைன் ரவா தோசை தான் செய்வேன் இன்று ஆனியன் காரட் சேர்த்து ரவா தோசை செய்தேன். Meena Ramesh -
கோதுமை சிரட்டை புட்டு (தேங்காய் ஓடு புட்டு) (Kothumai sirattai puttu recipe in tamil)
#GA4# week 8.. Steam கோதுமை மாவை தேங்காய் சிரட்டையில் இட்டு ஆவியில் வேக வைத்த ருசியான புட்டு.. Nalini Shankar -
வீட் வெஜ் மோமோஸ் (Wheat veg moms recipe in tamil)
#steamஆவியில் வேக வைத்த வீட் வெஜ் மோமோஸ் வித்தியாசமான சுவையில், குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஸ்னாக்ஸ்.ஆரோக்கியமான முறையில் வீட்டிலேயே செய்யலாம். Hemakathir@Iniyaa's Kitchen -
Raw onion carrot raitha (Raw onion carrot raitha recipe in tamil)
#Pongalஇந்த தயிர் பச்சடி சாம்பார் சாதம், சப்பாத்தி, பிரியாணி, தக்காளி சாதம், பரோட்டா மற்றும் வெறும் சாதத்தில் பிசைந்து சாப்பிட அருமையாக இருக்கும். என் மகனுக்கு மிகவும் பிடித்த தயிர் பச்சடி இது. புளிக்காத தயிரில் செய்ய வேண்டும். Meena Ramesh -
மைசூர் மசாலா தோசை (Mysore masala dosai recipe in tamil)
#karnatakaஇது கர்நாடக மாநிலத்தின் ஸ்பெஷல் டிபன் ஆகும். இதற்கென்று பிரத்தியோகமாக மாவு அரைக்க வேண்டும். தோசை யீல் தடவ ஸ்பெஷல் சட்னி அரைக்க வேண்டும். மீண்டும் தோசைக்குள் வைக்க மசால் தயார் செய்ய வேண்டும். இது எங்கள் சேலம் லட்சுமி பிரகாஷ் ஹோட்டலில் ஈவினிங் ஸ்பெஷலில் கிடைக்கும். மிகவும் ருசியாக இருக்கும். Meena Ramesh -
-
பச்சரிசி அடை (Pacharisi adai recipe in tamil)
#india2020இது என் அம்மா வீட்டு பலகாரம். பாட்டி காலத்தில் இருந்தே செய்வார்கள்.என் பாட்டி வீட்டிற்க்கு சென்றால் பாட்டி எங்களுக்கு செய்து கொடுப்பார்கள்.என் மகனுக்கு என் அம்மா செய்து குடுபார்கள்.(இன்று நானும் 4 வயது குழந்தைக்கு பாட்டி ஆகி விட்டேன்) என் மகனுக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் அவன் வெளிநாட்டில் இருப்பதால் நான் இதை செய்வதே இல்லை.இன்று குக் பாட் போட்டிக்காக செய்தேன். இது தேங்காய் சுவையுடன் மிளகு வாசனையுடன் இருக்கும். தேங்காய் சட்னி அல்லது தயிர் தொட்டு சாப்பிட மிக சுவையாக இருக்கும். விரத நாட்களில் பச்சரிசி பலகாரம் செய்ய ஏற்ற டிஃபன்.இதற்கு என்று பிரத்யோகமாக பித்தளை அடை கல் உள்ளது.அம்மா கொடுத்தது. Meena Ramesh -
வடகறி (ரெஸ்டாரன்ட் ஸ்டைல்) 😍 (vadakari recipe in Tamil)
#nutrient1 #bookகடலைப்பருப்பில் புரதம் அதிகம் உள்ளது. சைவ புரதத்தின் ஒரு சிறந்த உதாரணம் இது. புரதசத்து மட்டுமில்லாமல் இதர தாதுக்களும் அதிகம் உள்ளது. நார்ச்சத்து அதிகம். விட்டமின் பி காம்ப்ளக்ஸ் இதில் அதிகம் உள்ளது. உடல் எடையை குறைக்க உதவுகிறது. ரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்க அதிக இன்சுலினை சுரக்க வைக்கிறது. ஆகவே சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. உடல் எடை குறைய உதவுகிறது. கண் பார்வைக்கு நல்லது.உணவில் உள்ள சக்தியை நமக்கு பிரித்து எடுத்துக் கொடுக்கிறது. புதிய செல்கள் உருவாக உதவுகிறது. எலும்புகள் மற்றும் பற்கள் உறுதிக்கு உதவுகிறது. ஹீமோகுளோபின் பற்றாக்குறையை தீர்க்கிறது. உயிரணுக்கள் பெருக்கத்திற்கு உதவுகிறது. இதயம் ஆரோக்கியம் பெறுகிறது. மிகக்குறைந்த கொழுப்பு சக்தி இருப்பதால் உயர் ரத்த அழுத்த நோய் குறைய வழி வகுக்கிறது. பாஸ்பரஸ் அதிகம் இருக்கிறது. ஆகவே கடலைப்பருப்பை நம் அன்றாட உணவு பழக்கத்தில் ஏதாவது ஒரு வகையில் செய்து சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு மிக நல்லது. Meena Ramesh -
உருளைக்கிழங்கு வல்லாரை கீரை கறி (Urulaikilanku vallarai keerai curry recipe in tamil)
Sudharani // OS KITCHEN -
Gopi Patha aloo mutter subji recipe in tamil
#cooksnapsRecipie by Sudha Agarwal..बहुत-बहुत धन्यवाद सुधा।आपकी रेसिपी बहुत स्वादिष्ट थी। Meena Ramesh -
பருப்பு வகைகள் மற்றும் கம்பு ஆனியன் ஊத்தாப்பம் தோசை
#everyday3கம்பு மற்றும் எல்லா வகை பருப்புகளையும் கலந்து செய்த கம்பு அடை தோசை. கம்பு சேர்ப்பதால் வெயிலுக்கு நல்லது. எல்லா வகை பருப்புகளும் சேர்ப்பதால் புரதச்சத்து அதிகம் கிடைக்கும். கார மிதமாக சேர்த்தால் குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் தாராளமாக கொடுக்கலாம். Meena Ramesh -
முருங்கை கீரை முட்டை பொரியல்(Murungai Kerai Muttai Poriyal Recipe in Tamil)
முருங்கை கீரை பத்தி எல்லாருக்கும் தெரியும். இதில் நிறைய இரும்பு சத்து இருக்கு. இந்த முருங்கை கீரை ல முட்டை போட்டு பொரியல் பண்ணா குழந்தைகள் கூட விரும்பி சாப்பிடுவாங்க. எப்படி பண்றதுன்னு பாக்கலாம். Belji Christo -
காய்கறி இல்லா மோர் குழம்பு(plain mor kulambu recipe in tamil)
#CF5 மோர் குழம்புOஇதில் பெருங்காயம், சீரகம் போடுவதால் ரொம்பவும் சுவையாக இருக்கும். காய்கறிகளும் பதில் கொஞ்சம் சின்ன வெங்காயம் சேர்த்து செய்து உள்ளேன். மிகவும் ருசியாக இருந்தது தயா ரெசிப்பீஸ் -
ஆந்திரா சாதப் பருப்பு பொடி(Andhra Rice Dhal Powder recipe in Tamil)
#ap*ஆந்திராவில் இருக்கும் பெரும்பாலான ஓட்டல்களில் மற்றும் அனைத்து வீடுகளிலும் சாதத்துடன் சேர்த்து பரிமாறப்படுவது இந்த பருப்பு பொடி.*கண்டி பொடி என்று தெலுங்கில் அழைப்பார்கள்.*இதை சூடான சாதத்தில் நெய் ஊற்றி சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். kavi murali -
ஸ்பைசி கார்ன் டோஸ்ட் (Spicy corn toast recipe in tamil)
# Milletகார்ன் மற்றும் வெஜிடபிள் சேர்த்து செய்த ஒரு வித்தியாசமான மாலை நேர சிற்றுண்டி.... Azhagammai Ramanathan -
கோஸ் சுருள்கள்(Cabbage Rolls recipe in Tamil)
*இந்த கோஸ் சுருள்களுக்கு உள் வேகவைத்த கலந்த காய்கறிகள் சேர்த்து ஆவியில் வேக வைத்து செய்வதால் நம் உடலுக்கு குறைந்த அளவிலான கார்போஹைட்ரேட் மற்றும் நிறைந்த அளவிலான புரதச்சத்து உள்ள உணவு கிடைக்கின்றது.* எனவே உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு ஏற்ற உணவு என்றாலும் அனைவரும் சாப்பிட கூடிய சத்தான உணவு.#steam kavi murali
More Recipes
- ௧ம்புமாவுபுட்டு(தேங்காய் கொட்டாச்சியில்) (Kambu maavu puttu recipe in tamil)
- சுரைக்காய் அடை தோசை (Suraikkaai adai dosai recipe in tamil)
- பால் கொழுக்கட்டை(Paal Kolukattai recipe in tamil))
- ஸ்வீட் கார்ன் கார கொழுக்கட்டை (Sweet corn kaara kolukattai recipe in tamil)
- கத்திரிக்காய் எண்ணெய் வருவல் (Kathirikkaai ennei varuval recipe in tamil)
கமெண்ட் (8)