எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30நிமிடம்
4 பரிமாறுவது
  1. 3 கப் மைதா மாவு
  2. 3 கப் பொடித்த சர்க்கரை
  3. நெய் தேவையான அளவு
  4. சாக்லேட் சிப்ஸ் சிறிது
  5. 2 சிட்டிகைகேசரி கலர்
  6. கொக்கோ பவுடர் தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

30நிமிடம்
  1. 1

    மைதா மாவு பொடித்த சர்க்கரை இரண்டையும் மிதமான சூட்டில் நெய் ஊற்றி சப்பாத்தி மாவு போல் பிசைந்து கொள்ளவும்

  2. 2

    கைகளில் சிறிது நெய் தடவி சிறு சிறு வட்டங்களாக உருட்டவும். இதில் விருப்பமான வடிவங்களை சேர்க்கவும்.

  3. 3

    ஆரஞ்சு பழச்சாறு பிழியும் மூடியை வைத்து வட்டத்தின் மேல் லேசாக அழுத்தவும். அதன் நடுவில் சிறிது ஜாம் வைக்கவும். போர்க் கொண்டு பிஸ்கட்டின் மேல் லேசாக அழுத்தவும்.

  4. 4

    பிஸ்கட்டின் மேல் சாக்லேட் சிப்ஸை அங்கும் இங்குமாக வைக்கவும். ஒரு பாத்திரத்தில் கேசரி பவுடர் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு கலந்து கொள்ளவும். முட்டை பீட்டரின் முனையில் கேசரி கலரை தடவி பிஸ்கட்டின் மேல் லேசாக அழுத்தவும்

  5. 5

    ஒரு தட்டில் கொக்கோ பவுடர் எடுத்துக் கொள்ளவும்.கோகோ பௌடர் போட்டு லேசாக தண்ணீர் நினைப்பு பின் குக்கரில் வைத்து அதனை பிஸ்கட்டின் மேல் விருப்பமான வடிவத்தில் வைக்கவும்

  6. 6

    ஒரு தட்டில் நன்கு வெண்ணெய் தடவி அதன் மேல் பிஸ்கட்டை வைக்கவும். தட்டினை அடுப்பில் ஒரு பாத்திரத்தில் வைத்து சூடாக்கி வெந்தவுடன் எடுத்துக் கொள்ளவும்.

  7. 7

    ஓவன் இருந்தால் பத்து நிமிடம் ஓவனில் வைத்து எடுக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Kamala Shankari
Kamala Shankari @cook_17239307
அன்று

Similar Recipes