தேவையான பொருட்கள்

45 நிமிடங்கள்
6 பரிமாறுவது
  1. கேக் செய்ய:
  2. 180 கிராம் பட்டர்
  3. 180 கிராம் மைதா
  4. 180 கிராம் சர்க்கரை
  5. 3 முட்டை
  6. 1_1/2 ஸ்பூன் பேக்கிங் பவுடர்
  7. 1/2 ஸ்பூன் பேக்கிங் சோடா
  8. 1 சிட்டிகை உப்பு
  9. 2 ஸ்பூன் பைனாப்பிள் எசென்ஸ்
  10. 1/2 கப் பைனாப்பிள் ஜீஸ்
  11. ஐசிங் செய்ய:
  12. 100 மில்லி ப்ரஷ் க்ரீம்
  13. 1 கப் ஐசிங் சுகர்
  14. 1 ஸ்பூன் ரோஸ் வாட்டர்
  15. பைனாப்பிள் ஜெல் செய்ய:
  16. 200 கிராம் பைனாப்பிள்
  17. 1/4 கப்+ 2 டேபிள் ஸ்பூன் சர்க்கரை
  18. 2 டேபிள்ஸ்பூன் கார்ன் ப்ளார்
  19. 2 டேபிள்ஸ்பூன் தண்ணீர்
  20. 1 ஸ்பூன் பைனாப்பிள் எசென்ஸ்
  21. மஞ்சள் புட் கலர் சிறிது
  22. அலங்கரிக்க:
  23. ஆப்பிள்
  24. மாதுளை
  25. பைனாப்பிள்
  26. ஸ்ட்ராபெர்ரி
  27. கிவி
  28. 1/4 கப் சர்க்கரை
  29. 1/4 கப் தண்ணீர்
  30. ரோஸ் வாட்டர் சில துளிகள்

சமையல் குறிப்புகள்

45 நிமிடங்கள்
  1. 1

    கேக் செய்முறை : பட்டர் உடன் பொடித்த சர்க்கரை சேர்த்து நன்கு பீட் செய்யவும், பின் முட்டை ஐ ஒவ்வொன்றாக சேர்த்து நன்கு பீட் செய்யவும், பின் பைனாப்பிள் எசென்ஸ் மற்றும் ஜீஸ் சேர்த்து நன்கு பீட் செய்யவும்

  2. 2

    மைதா உடன் பேக்கிங் பவுடர் பேக்கிங் சோடா உப்பு சேர்த்து ஜலித்து கொள்ளவும்

  3. 3

    பின் பீட்டரை நிறுத்தி விட்டு ஜலித்து வைத்துள்ள மைதாவை சிறிது சிறிதாக சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்

  4. 4

    பின் பட்டர் தடவி மைதா டஸ்ட் செய்து ரெடியா இருக்கும் ட்ரேயில் ஊற்றி சமப்படுத்தி 10 நிமிடம் வரை முச்சூடாக்கிய அவனில் வைத்து 30 நிமிடங்கள் வரை பேக் செய்யவும் பின் ஐந்து நிமிடம் கழித்து வெளியே எடுத்து பத்து நிமிடம் வரை ஆறவிட்டு ட்ரேயில் இருந்து மாற்றி மூன்று மணி நேரம் வரை ஆறவிடவும்

  5. 5

    பின் ஐசிங் செய்ய: ப்ரஷ் க்ரீம் உடன் ஐசிங் சுகர் ஐ சிறிது சிறிதாக சேர்த்து நன்கு பீட் செய்யவும் ரோஸ் வாட்டர் கலந்து (ஐஸ்கிரீம் பதத்தில்) பீட் செய்து ஒரு மணி நேரம் வரை பிரிட்ஜில் வைக்கவும்

  6. 6

    பின் பைனாப்பிள் ஜெல் செய்ய: பொடியாக நறுக்கிய பைனாப்பிள் உடன் 1/4 கப் சர்க்கரை சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி ஐந்து நிமிடம் வரை கொதிக்க விடவும்

  7. 7

    பின் ஆறவைத்து மிக்ஸியில் போட்டு அரைத்து வடிகட்டவும் அதனுடன் 2 டேபிள் ஸ்பூன் சர்க்கரை சேர்த்து மெல்லிய தீயில் வதக்கவும்

  8. 8

    பின் கார்ன் ப்ளார் உடன் தண்ணீர் சேர்த்து கரைத்து கொதிக்கும் பைனாப்பிள் உடன் சேர்த்து மெல்லிய தீயில் வைத்து கிளறவும்

  9. 9

    சாஸ் பதம் வந்ததும் இறக்கி எசென்ஸ் மற்றும் கலர் சேர்த்து நன்கு கலந்து ஆறவிடவும்

  10. 10

    பின் ஆறிய கேக் ஐ இரண்டாக நறுக்கி சுகர் சிரப் ஐ ஊற்றவும் பின் அடித்து வைத்துள்ள ப்ரஷ் க்ரீம் ஐ தடவவும் பின் மேல் அடுத்த லேயர் கேக் ஐ வைத்து சுகர் சிரப் ஐ ஊற்றவும்

  11. 11

    பின் கேக் முழுவதும் ப்ரஷ் க்ரீம் ஐ தடவவும் ஒரு மணி நேரம் வரை பிரிட்ஜில் வைக்கவும்

  12. 12

    பின் எடுத்து அதன் மேல் ரெடியா உள்ள ஜெல்லை ஊற்றவும் பின் மீண்டும் ஒரு மணி நேரம் வரை பிரிட்ஜில் வைக்கவும்

  13. 13

    பின் இதற்கிடையில் அலங்கரிக்க கொடுத்துள்ள சர்க்கரை உடன் தண்ணீர் சேர்த்து 5 நிமிடங்கள் வரை கொதிக்க விட்டு இறக்கி ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து நறுக்கிய பழங்களை போட்டு அரை மணி நேரம் வரை ஊறவிடவும்

  14. 14

    பின் சர்க்கரை பாகில் இருந்து வடிகட்டி எடுத்து பிரிட்ஜில் வைக்கவும்

  15. 15

    பின் செட் ஆன ஜெல் மீது. பழங்களை கொண்டு அலங்கரித்து 5_6 மணி நேரம் வரை பிரிட்ஜில் வைக்கவும்

  16. 16

    சுவையான ப்ரூட் கேக் ரெடி

  17. 17

    பைனாப்பிள் ப்ளேவர் வேண்டாம் என்றால் வெனிலா ப்ளேவர் அல்லது ஆரஞ்சு ப்ளேவர் கேக் செய்து கொள்ளலாம் வெனிலா என்றால் பைனாப்பிள் ஜீஸ் பதில் பால் மற்றும் வெனிலா எசென்ஸ், ஆரஞ்சு கேக் என்றால் ஆரஞ்சு ஜீஸ், மற்றும் எசென்ஸ் சேர்த்து கொள்ளவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sudharani // OS KITCHEN
அன்று
Coimbatore

Similar Recipes