கேரட் இனிப்பு மோதகம் (carrot sweet modak) (Carrot inippu mothakam recipe in tamil)

கேரட் மிகவும் சத்துக்கள் நிறைந்தது. எனவே அந்த கேரட்டை வைத்து ஒரு புது வித மோதகம் செய்ய நினைத்தேன். செய்து பார்த்தால் நல்ல சுவையும், கலரும் வந்தது. அனைவரும் செய்து ருசித்திட இங்கு பதிவிட்டுள்ளேன்.
#steam
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் கேரட்டை கழுவி, தோல் நீக்கி, கட் செய்து மிக்ஸியில் சேர்த்து அரைத்து, சாறு வடித்தெடுக்கவும்.
- 2
கடாயை ஸ்டவ்வில் வைத்து சூடானதும், வெல்லம், கேரட் சாறு சேர்த்து உருகியதும், தேங்காய் துருவல், ஏலக்காய் துருவல் சேர்த்து ஒரு நிமிடம் கலக்கினால் கெட்டியாகிவிடும். இறக்கி ஆறியவுடன் எடுத்து விருப்பப்பட்ட உருவத்தில் உருட்டி தயாராகவைக்கவும்.
- 3
வேறு ஒரு பாத்திரத்தை சூடு செய்து, கேரட் சாறு மற்றும் தண்ணீர் சேர்த்து ஒரு கப் ஊற்றி ஒரு சிட்டிகை உப்பு, ஒரு டீஸ்பூன் நெய் சேர்த்து கொதிக்கவிடவும். பின் அரிசிமாவை சேர்த்து கலந்து, கெட்டியாக பந்துபோல் உருண்டு வரும் போது இறக்கினால் மோதகத்தின் மேல் மாவு, நல்ல ஆரஞ்சு கலந்த மஞ்சள் நிறத்தில் கிடைக்கும்.
- 4
பின்னர் மாவு சூடு ஆறியவுடன் கையில் எண்ணை தடவிக்கொண்டு ஓரளவு தடிமனாக அழுத்தி ஒரு தட்டு வடிவம் செய்து, அதில் தயாராக வைத்துள்ள தேங்காய், வெல்லம் சேர்த்த பூரணத்தை வைத்து மூடி விருப்பப்படி வடிவம் கொடுக்கவும். இல்லேயேல் மோதகம் செய்யும் மோல்ட் இருந்தால் அதில் வைத்து அழுத்தி வடிவம் கொடுத்து ஆவியில் வைக்கும் தட்டில் அடுக்கவும்.
- 5
ஸ்டவ்வில் ஒரு பாத்திரத்தை வைத்து தண்ணீர் ஊற்றி கொதிக்கவைத்து, அதில் தயாராக வைத்துள்ள மோதக தட்டை வைத்து எட்டு நிமிடங்கள் வேகவைத்து எடுத்தால் இனிப்பு கலந்த கேரட் மோதகம் தயார்.
- 6
இப்போது மிகவும் நல்ல வண்ணத்தில், சத்தான, சுவையான கேரட் இனிப்பு மோதகம் சுவைக்கத்தயார்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
பீட்ரூட் இனிப்பு உருண்டை (Beetroot sweet balls)
பீட்ரூட் மிகவும் சத்துக்கள் நிறைந்தது. இதை வைத்து ஒரு இனிப்பு மினி கொழுக்கட்டை மாதிரி உருட்டி, கொஞ்சம் டிசைன் கொடுத்து முயற்சித்தேன். மிகவும் அழகாகவும், நல்ல நிறத்தில் மிகவும் சுவையாகவும் இருந்தது. அனைவரும் செய்து சுவைத்திட இங்கு பதிவிட்டுள்ளேன்.#steam Renukabala -
-
-
ஆப்பிள் சோமாஸ் (Apple Somas recipe in tamil)
ஆப்பிள் வைத்து நிறைய இனிப்புகள் செய்யலாம். நான் இங்கு ஆப்பிளுடன் நாட்டுச்சர்க்கரை சேர்த்து சோமாஸ் செய்துள்ளேன். மிகவும் சுவையாக இருந்தது. அனைவரும் செய்து சுவைக்கவேஇங்கு பதிவிட்டுள்ளேன்.#CookpadTurns4 Renukabala -
கேரட் ஸ்வீட் இடியாப்பம்#carrot #book
மாத்தியோசி இடியாப்பம் மாவுடன் கேரட், கலர்ஃபுல் கேரட் இடியாப்பம். Hema Sengottuvelu -
-
பீட்ரூட், கேரட் புட்டு (Beetroot carrot puttu recipe in tamil)
#steamநீராவியில் செய்யும் உணவுகள் உடலுக்கு மிகவும் நல்லது.பீட்ரூட் மற்றும் கேரட் ஜுஸ் எடுத்து இந்த சத்தான புட்டை செய்து உள்ளேன். Jassi Aarif -
-
கொழுக்கட்டை(kolukattai recipe in tamil)
தேங்காய் பூரணம் செய்து கொழுக்கட்டை செய்தேன். அழகாக வந்தது. வினாயகருக்குப் படைத்து கும்பிட்டோம். #VC punitha ravikumar -
-
கேரட் சேமியா பாயசம் (Carrot Vermicelli payasam recipe in tamil)
சேமியாவுடன் கேரட் சேர்த்து பாயசம் செய்யும் போது நல்ல கலரும்,சுவையும் கிடைக்கும்.#npd3 Renukabala -
-
கேரட் சலாட் (Carrot salad)🥕🥗
சத்துக்கள் நிறைந்த கேரட் வைத்து மிகவும் சுலபமாக, சுவையான இந்த சாலட் செய்து சுவைக்கவும்.#Colours1 Renukabala -
-
கேரட் குழம்பு (Carrot gravy) (Carrot kulambu recipe in tamil)
கேரட் மிகவும் சத்துக்கள் நிறைந்த காய். இந்த கேரட்டை வைத்துக்கொண்டு நிறைய ரெசிப்பீஸ், ஸ்வீட்ஸ் செய்யலாம். நான் வித்யாசமாக ஒரு குழம்பு வைத்தேன். மிகவும் சுவையாக இருந்தது.#GA4 #Week3 Renukabala -
கேரட் பக்கோடா (Carrot pakoda recipe in tamil)
கேரட்டை வைத்து பொரியல், பிரைட் ரைஸ், இனிப்பு பலகாரம், சட்னி எல்லாம் செய்துள்ளோம். ஆனால் நான் கேரட் பக்கோடா செய்து பகிந்துள்ளேன். சுவைத்ததில் பிடித்தது.#GA4 #week3 Renukabala -
-
தேங்காய் வெல்ல பர்பி (Cocount jaggery burfi) (Thenkaai vella burfi recipe in tamil)
தேங்காய் வெள்ளை சர்க்கரை வைத்து பர்பி அதிகமாக செய்வோம். இப்போது எல்லோரும் பருமனில்லா உடல் பராமரிப்பிற்காக வெல்லத்தை வைத்து செய்த இனிப்பு பலகாரத்தை விரும்பி சுவைப்பதால், நான் இங்கு தேங்காய் வெல்லம் வைத்து சுவையான பர்பி செய்து பகிந்தள்ளேன்.#Cocount Renukabala -
முளைகட்டிய பச்சை பயறு குழம்பு (Sprouted Moong Gravy) (Mulaikattiya payaru kulambu recipe in tamil)
முளைகட்டிய பச்சைப்பயறு குழம்பு மிகவும் சத்துக்கள் நிறைந்தது. சுவையோ அபாரம். எனவே அனைவரும் செய்து சுவைத்திட இங்கு பதிவிட்டுள்ளேன்.#GA4 #Week11 #Sprouts Renukabala -
-
-
-
-
வாழை இலை இனிப்பு கொழுக்கட்டை(Banana leaf sweet)(Vaazhai ilai inippu kolukattai recipe in Tamil)
*வாழை இலை பயன் படுத்தி செய்வதால், இளநரை வராமல் நீண்டநாட்கள் தலைமுடி கருப்பாக இருக்கும். வாழை இலை ஒரு கிருமி நாசினியாகும். உணவில் உள்ள நச்சுக்கிருமிகளை வாழை இலை அழிக்கும் தன்மை கொண்டது.#steam kavi murali -
-
இனிப்பு பிடி கொழுக்கட்டை (Inippu pidi kolukattai recipe in tamil)
#steam வெல்லம் இரும்புச் சத்து நிறைந்தது நம் உடலுக்குத் தேவையான நிறைய தாது உப்புக்களை உள்ளடக்கியது Nithyavijay -
அவுல் இனிப்பு கொழுக்கட்டை (Aval inippu kolukattai recipe in tamil)
#steam சத்தான மிருதுவான அவுல் கொழுக்கட்டை தயா ரெசிப்பீஸ் -
கமெண்ட்