பயறு கஞ்சி மற்றும் சுட்ட அப்பளம்

Poongothai N
Poongothai N @cook_25708696

#kerala #payarukanji
கேரளா திருவனந்தபுரத்தில் மிகவும் பிரபலமான பாசிப்பயறு கஞ்சி செய்முறையை பார்க்கலாம். மிகவும் சுலபமானது மற்றும் சத்தானது

பயறு கஞ்சி மற்றும் சுட்ட அப்பளம்

#kerala #payarukanji
கேரளா திருவனந்தபுரத்தில் மிகவும் பிரபலமான பாசிப்பயறு கஞ்சி செய்முறையை பார்க்கலாம். மிகவும் சுலபமானது மற்றும் சத்தானது

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30நிமிடம்
4 பரிமாறுவது
  1. மட்டை அரிசி அல்லது பச்சரிசி அல்லது சிகப்பு அரிசி ஒரு டம்ளர்
  2. பாசிப்பயறு அரை டம்ளர்
  3. சின்ன வெங்காயம் 4
  4. காய்ந்த மிளகாய் மூன்று
  5. வெந்தயம் ஒரு ஸ்பூன்
  6. உப்பு தேவையான அளவு
  7. தேங்காய் துருவியது தேவைக்கு

சமையல் குறிப்புகள்

30நிமிடம்
  1. 1

    தேவையான பொருட்களை தயாராக வைத்துக் கொள்வோம்

  2. 2

    பிரஷர் குக்கரில் முதலில் அரிசி மற்றும் பச்சை பயறை சேர்த்து நன்றாகக் கழுவி விட்டு பின் வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி சேர்க்கவும். அதன்பின் வர மிளகாயை சேர்க்கவும் வெந்தயத்தை சேர்த்து அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து 4 டம்ளர் தண்ணீர் ஊற்றி 5 விசில் வரும் வரை வைக்கவும்

  3. 3

    விசில் அடங்கியவுடன் கரண்டியின் பின் பகுதியை வைத்து நன்றாக மசித்து விடவும் பின் அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஒரு கொதி விடவும்.

  4. 4

    தண்ணியாக பிடிக்கும் என்றால் நிறைய தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்

  5. 5

    தேவைக்கு ஏற்றவாறு துருவிய தேங்காயை அதனுடன் கலந்து பரிமாறலாம். கேரளாவில் இதனுடன் சுட்ட அப்பளம் சேர்த்து சாப்பிடுவார்கள். சுவையான மற்றும் சத்தான கஞ்சி தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Poongothai N
Poongothai N @cook_25708696
அன்று

Similar Recipes