அரிசிப் புட்டு மற்றும் கடலை கறி (Arisi puttu and kadalai kari recipe in tamil)

Poongothai N
Poongothai N @cook_25708696

#kerala #puttu #kadalakari
கேரளாவில் மிகவும் பிரபலமான காலை சிற்றுண்டி ஆன அரிசி புட்டு மற்றும் கடலை கறி செய்முறையை பார்க்கலாம்

அரிசிப் புட்டு மற்றும் கடலை கறி (Arisi puttu and kadalai kari recipe in tamil)

#kerala #puttu #kadalakari
கேரளாவில் மிகவும் பிரபலமான காலை சிற்றுண்டி ஆன அரிசி புட்டு மற்றும் கடலை கறி செய்முறையை பார்க்கலாம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1மணி நேரம்
4 பரிமாறுவது
  1. ஒரு டம்ளர்அரிசி மாவு
  2. 1 ஸ்பூன்தேங்காய் துருவியது
  3. உப்பு தேவையான அளவு
  4. ஒரு கப்கொண்டைக்கடலை
  5. 10சின்ன வெங்காயம்
  6. 2தக்காளி
  7. 5பூண்டு பல்
  8. ஒரு துண்டுஇஞ்சி
  9. 1பட்டை
  10. 2கிராம்பு
  11. ஏலக்காய் ஒன்று
  12. 3 ஸ்பூன்சாம்பார் தூள்
  13. மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை
  14. அரை மூடிதேங்காய் துருவல்
  15. தேங்காய் எண்ணெய் தாளிப்பதற்கு

சமையல் குறிப்புகள்

1மணி நேரம்
  1. 1

    முதலில் தேவையான அளவு அரிசி மாவு எடுத்து அதில் உப்பு சேர்த்து கலக்கவும்

  2. 2

    அதில் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து எல்லாம் மாவும் தண்ணீர் படும்படி பிசறவும்

  3. 3

    படத்தில் காட்டியது போல கொழுக்கட்டை பிடித்தால் கொழுக்கட்டை வர வேண்டும் இதுதான் பதம்

  4. 4

    நான் இந்தக் கிண்ணம் மாதிரி உள்ள புட்டு கருவியை பயன்படுத்தி செய்துள்ளேன் குழாய் கருவி பயன்படுத்தியும் செய்யலாம்

  5. 5

    இதை குக்கரில் வைத்து ஒரு நிமிடம் வேக வைத்து இறக்கவும் இப்போது புட்டு தயார்.

  6. 6

    வெங்காயம் தக்காளி இஞ்சி பூண்டு ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும் முதல் நாள் இரவே ஊற வைத்த கொண்டைக் கடலையையும் எடுத்து வைத்துக் கொள்ளவும். நான் முளைவிட்ட கொண்டைக்கடலையை பயன்படுத்தியுள்ளேன்.

  7. 7

    முதலில் தேங்காய் எண்ணெய் ஊற்றி பின் பொடிதாக நறுக்கிய இஞ்சி மற்றும் பூண்டை போட்டு வதக்கவும் அதனுடன் நறுக்கிய வெங்காயத்தையும் சேர்த்து வதக்கவும் கண்ணாடி போல் ஆனவுடன் தக்காளியையும் சேர்த்து வதக்கவும். பின் ஊற வைத்த கொண்டை கடலையையும் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 7-8 விசில் விடவும்

  8. 8

    இப்போது மசாலா செய்வதற்கு தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளலாம்

  9. 9

    செய்ய முதலில் ஒரு கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி பட்டை கிராம்பு ஏலக்காய் சேர்த்து அதை வதக்கிய பின்பு அதனுடன் தேங்காய் துருவலையும் சேர்த்து வதக்கவும் பின்பு அதனுடன் சாம்பார் தூள் மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்

  10. 10

    நன்றாக ஆறியவுடன் மிக்ஸியில் போட்டு அரைக்கவும்

  11. 11

    அந்த வேறொரு பாத்திரத்தில் அல்லது கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி கடுகு சோம்பு கருவேப்பிலை தாளித்து குக்கரில் வேக வைத்த கொண்டைக் கடலையையும் அரைத்து வைத்த மசாலாவையும் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.

  12. 12

    நல்ல கொதி வந்தவுடன் தேவையான அளவு கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கவும்

  13. 13

    அரிசி மாவு புட்டு மற்றும் கடலைக்கறி இரண்டையும் சேர்த்து சாப்பிடும் போது மிகவும் அருமையான சுவையுடன் இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Poongothai N
Poongothai N @cook_25708696
அன்று

Similar Recipes