Sadhya sambar😋 *Sadhya sambar recipe in tamil)

#Kerala
சத்ய சாம்பார் என்பது கலவை காய்கறிகள் கொண்டு செய்யப் படும் சாம்பார் ஆகும்.இது கேரளாவில் செய்யப்படும் மிகவும் பிரசித்தம் பெற்ற சாம்பார் ஆகும். பண்டிகை நாட்கள் மற்றும் விசேஷங்களில் பரிமாறப்படும் காய் கலவை சாம்பார் ஆகும். எனக்கு மிகவும் பிடிக்கும்.இதற்கு சாம்பார் தூள் தேவை இல்லை நல்ல நிறம் கொண்ட வரமிளகாய் தூள் அல்லது காஷ்மீரி மிளகாய்த்தூள் மற்றும் கொத்தமல்லித் தூள் கொண்டு செய்ய வேண்டும். காய்கள் அரியும் போது கொஞ்சம் பெரிய சைஸில் அறிந்து கொள்ளவும். (படத்தில் காட்டியுள்ளபடி)
Sadhya sambar😋 *Sadhya sambar recipe in tamil)
#Kerala
சத்ய சாம்பார் என்பது கலவை காய்கறிகள் கொண்டு செய்யப் படும் சாம்பார் ஆகும்.இது கேரளாவில் செய்யப்படும் மிகவும் பிரசித்தம் பெற்ற சாம்பார் ஆகும். பண்டிகை நாட்கள் மற்றும் விசேஷங்களில் பரிமாறப்படும் காய் கலவை சாம்பார் ஆகும். எனக்கு மிகவும் பிடிக்கும்.இதற்கு சாம்பார் தூள் தேவை இல்லை நல்ல நிறம் கொண்ட வரமிளகாய் தூள் அல்லது காஷ்மீரி மிளகாய்த்தூள் மற்றும் கொத்தமல்லித் தூள் கொண்டு செய்ய வேண்டும். காய்கள் அரியும் போது கொஞ்சம் பெரிய சைஸில் அறிந்து கொள்ளவும். (படத்தில் காட்டியுள்ளபடி)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு கப் பருப்பை கழுவி தண்ணீர் மற்றும் கால் ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து குக்கரில் 2 அல்லது 3 விசில் விட்டு வேக வைக்கவும். பருப்பை குழைய வைக்க வேண்டாம் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். சிறிய வெங்காயம் தோல் உரித்து வைத்துக்கொள்ளவும் ஒரு தக்காளி அரிந்து வைத்துக் கொள்ளவும் சிறிய மிளகாய் ஆக இருந்தால் 3 பச்சை மிளகாய் அல்லது பெரிய மிளகாய் ஆக இருந்தால் 2 அறிந்து வைத்துக் கொள்ளவும். ஒரு நெல்லிக்காய் அளவு புளி ஊற வைத்து தண்ணி ஆக கரைத்து வைத்துக் கொள்ளவும்.
- 2
ஒரு வாணலியில் ஒரு டேபிள்ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து அதில் கால் ஸ்பூன் வெந்தயம் சேர்க்கவும். வெந்தயம் சிவந்தவுடன் உரித்த சிறிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். கொஞ்சம் வதங்கியவுடன் நீர்க்க கரைத்த வைத்த புளி தண்ணீர், கட்டி பெருங்காயம் சேர்க்கவும். மஞ்சள் தூள் கால் ஸ்பூன் சேர்த்து கொள்ளவும். ஒரு மூன்று நிமிடம் புளித் தண்ணீர் கொதித்தவுடன் அதில் முதலில் அரிந்து வைத்த சிவப்பு பூசணிக்காய், முருங்கைக்காய், சேப்பகிழங்கு அவர காய் இவற்றை சேர்க்கவும்.
- 3
மேற்கூறிய காய்கள் கொஞ்சம் வேக விடவும். அதற்குள் ஒரு நான்-ஸ்டிக் தவாவில் ஒரு டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து அதில் ஒன்றரை ஸ்பூன் காஷ்மீரி மிளகாய்த்தூள் மற்றும் 2 ஸ்பூன் கொத்தமல்லி தூள் சேர்த்து லேசாக வறுக்கவும். மனம் வந்தால் போதும். கருக விட்டுவிட வேண்டாம்.
- 4
இப்போது அரிந்து வைத்த கத்திரிக்காயை மற்ற காய்கறிகளுடன் சேர்க்கவும்.புளித் தண்ணீர் பத்தவில்லை என்றால் கொஞ்சம் சுடுதண்ணீர் வைத்து சேர்த்துக் கொள்ளவும். கொஞ்சம் வெந்தவுடன் வெண்டைக்காய் துண்டுகளை சேர்க்கவும். வேகவிடவும். முதலிலேயே கத்திரிக்காய் சேர்த்தால் குறைந்துவிடும்.வெண்டைக்காய் சேர்த்தால் குழம்பு வளவளவென்று ஆகிவிடும். ஒன்றின் பின் ஒன்றாக சேர்க்கவும். ஒரு கொதி வந்தவுடன் வறுத்து அரைத்த மிளகாய் தூள் கலவையை சேர்க்கவும். கலந்து விடவும். 3நிமிடம் வேகவிடவும்.
- 5
பிறகு வேக வைத்த பருப்பை சேர்க்கவும். நன்கு கலந்து விடவும். தேவை என்றால் கொஞ்சம் சுடு தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும். தக்காளியை சேர்க்கவும். நன்கு எல்லா காய்களையும் வேகவிடவும். மூடி வைக்க வேண்டாம். நிறம் மாறும்
- 6
இப்போது கால் ஸ்பூன் வெந்தயத்தூள், சுவைக்காக மீண்டும் கால் ஸ்பூன் வரை பெருங்காயத்தூள் சேர்க்கவும். வெல்லம் சேர்க்கவும் ஒரு தாளிக்கும் கரண்டியில் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து காய்ந்தவுடன் அதில் கடுகு வரமிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து குழம்பில் சேர்க்கவும். இப்போது மூடி போட்டு மூடிவிடவும்.இப்படி செய்வதால் சாம்பார் மிகவும் மணமாக இருக்கும்.
- 7
இன்று எங்கள் வீட்டில் மதிய உணவு முழுக்க முழுக்க கேரளா ஸ்டைல் உணவாகும்.மட்ட அரிசி சாப்பாடு, சத்ய சாம்பார், சேன காய காலன், ரசம், கத்லி பழம், மற்றும் தயிர். அனைத்தும் மிகவும் சுவையாக இருந்தது ரசித்து, ருசித்து சாப்பிட்டோம். கேரளாவில் இருந்தது போல் இருந்தது.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கதம்பக்காய் சாம்பார் (Kathambakkaai sambar recipe in tamil)
தைப்பொங்கல் என்று பால் பொங்கலுக்கு நாங்கள் செய்யும் சாம்பார் இது. துவரம் பருப்பில் இந்த சாம்பாரில் செய்கிறோம். மிகவும் சுவையாக இருக்கும். உடலுக்கு மிகவும் நல்லது எல்லா காய்களும் சேர்ப்பதால். Meena Ramesh -
-
வெள்ளை பூசணி சாம்பார் (Vellai poosani sambar recipe in tamil)
#sambarrasamவெள்ளை பூசணிக்காய் நீர்ச்சத்து உடையது. இதுஉடல் எடை குறைப்புக்கு உதவுகிறது. Priyamuthumanikam -
கோவில் சாம்பார் சாதம்(sambar sadam recipe in tamil)
#வெங்காயம் சேர்க்காத சாம்பார் சாதம்.தங்கள் வீட்டில் என்ன காய்கறிகள் இருக்கிறதோ தகுந்த காய்களை சேர்த்து இந்த சாம்பார் சாதம் செய்யலாம். இதனுடன் உருளைக்கிழங்கு முருங்கைக்காய் கத்திரிக்காய் போன்ற காய்கறிகளை சேர்த்துக் கொள்ளலாம். சாதம் எவ்வளவு செய்கிறீர்களோ அதற்கு தகுந்தாற்போல கூடவோ குறைத்தோ காய்களை நறுக்கிக் கொள்ளவும். அதிக காய்கள் இருந்தால் அது அதில் கொஞ்சமாக சேர்த்துக் கொள்ளவும். இரண்டு மூன்று காய்கறி வகைகள் என்றால் காய்கறிகளின் அளவை அதிகரித்துக் கொள்ளவும்.இது நைவேத்தியத்திற்கு ஆக செய்த சாம்பார் சாதம் அதனால் வெங்காயம் சேர்க்க வில்லை. நான் இன்று வீட்டில் இருந்த காய்களை வைத்து செய்தேன். Meena Ramesh -
-
கிள்ளு வர மிளகாய் சாம்பார்🌶️(Killu varamilakaai sambar recipe in tamil)
#arusuvai2இந்த வகை சாம்பார், சாம்பார் தூள் அல்லது வரமிளகாய்த்தூள் சேர்க்காத சாம்பார் ஆகும். வரமிளகாய் கிள்ளி செய்யும் சாம்பார். சாப்பாட்டிற்கு சுவையாக இருக்கும். மோர் மிளகாய் இதற்கு தகுந்த ஜோடி. உருளைக்கிழங்கு வருவல், பொடிமாஸ் சேனைக்கிழங்கு சாப்ஸ் போன்றவை தொட்டுக்கொள்ள சுவையாக இருக்கும். அப்பளம், வடகம் போன்றவையும் சுவையாக இருக்கும். Meena Ramesh -
-
கொள்ளு & பருப்பு சாம்பார்(kollu and paruppu sambar recipe in tamil)
#JP எப்பொழுதும் ஒரே மாதிரியாக சாம்பார் வைப்பதற்கு மாற்றாக செய்தேன். சுவையாக இருந்தது.அனைவரும் விரும்பினர்.நீங்களும் முயற்சித்துப் பாருங்கள். Ananthi @ Crazy Cookie -
ஆந்திரா ஹோட்டல் டிஃபன் சாம்பார் (Tiffen sambar recipe in tamil)
#apஆந்திரா 2 செல்லும் போது ஹோட்டலில் இதே சுவை கொண்ட சாம்பார் டிபனுக்கு சாப்பிட்டு உள்ளேன். என் ஆந்திர மாநில (விசாகப்பட்டினம்) தோழியிடம் கேட்டு இந்த சாம்பார் செய்தேன். Meena Ramesh -
இடி சாம்பார்(idi sambar recipe in tamil)
#ed1 சைவ குழம்பு களிலேயே முதலிடத்தில் உள்ளது சாம்பார் தான்... சாம்பார் பொடி ஏற்கனவே நான் பதிவிட்டுள்ளேன்.. அதை பயன்படுத்தி செய்த சாம்பார் தான் இது சுவையும் மணமும் அருமையாக இருக்கும்... Muniswari G -
சிகப்பு பூசணி அவரைக்காய் சாம்பார்🎃
#sambarrasamவெங்காயம் தக்காளிபூண்டு சேர்க்காத பருப்பு சாம்பார். மிகவும் சுவையாக இருக்கும். விரத நாளன்று செய்வதற்கு ஏற்ற பருப்பு சாம்பார். நாட்டுக்காய் கொண்டு செய்தது. என் கணவருக்கு மிகவும் பிடிக்கும். எனக்கும் கூட. Meena Ramesh -
-
சவுத் இந்தியன் ஸ்டைல் சாம்பார் (South indian style sambar recipe in tamil)
#sambarrasam Bhagya Bhagya@dhanish Kitchen -
தேங்காய் வறுத்து அரைத்த சாம்பார்(sambar recipe in tamil)
#JP - தை திருநாள்தை பொங்கல் அன்று எல்லா காய் மற்றும் கிழங்கு சேர்த்து சாம்பார் செய்வது வழக்கம். அதேபோல் காயகளுடன் தேங்காய் வறுத்து அரைத்து செய்த கேரளா ஸ்பெஷல் பாலகாட் சாம்பார்... Nalini Shankar -
கேரட் சாம்பார்(carrot sambar recipe in tamil)
சுலபமான கேரட் சாம்பார் செய்வது எப்படி என்று கேட்டால் இது சிறந்த முறை ஆகும் parvathi b -
இட்லி சாம்பார் (Idli sambar Recipe in Tamil)
#nutrient2பொதுவாகவே பருப்பு வகைகள், காய்கறிகளில் அதிக விட்டமின் சத்து நிறைந்துள்ளது. இட்லி சாம்பார் ரெசிபியை நான் பகிர்கிறேன் Laxmi Kailash -
-
-
கிளாக்காய் சாம்பார்😋 (Kalakkaai sambar recipe in tamil)
#momகர்ப்பிணி பெண்களுக்கு மசைக்கையின் போது பருப்பு பிடிக்காது.ஆனால் பருப்பு புரோட்டீன் கொண்டிருப்பதால் பருப்பு உணவில் கட்டாயம் சேர்த்து கொள்ள வேண்டும். கிலாக் காய் புளிப்பு சுவை மிகுந்தது.மேலும் மசைக்கை காரணமாக ஏற்படும் வாந்தியை கட்டு படுத்த கூடிய சுவை உடையது.பருப்பில் இந்த காயை இரண்டாக அரிந்து விதை எடுத்து சேர்த்து உப்பு காரம் கொஞ்சம் அதிகமாக சேர்த்து சாம்பார் வைத்து குடுத்தால் கர்ப்பிணி பெண்கள் விரும்பி சாப்பிடுவார்கள். Meena Ramesh -
சாம்பார் (Sambar recipe in tamil) #the.chennai.foodie #ilovecooking
சாம்பார் என்பது தமிழ்நாடு, தென் இந்தியாவில் மிகவும் பிரபலமான ஒரு துணை உணவுப் பொருள் ஆகும்😍 #the.chennai.foodie #ilovecooking Nisha Jayaraj -
பலாக்கொட்டை கத்தரிக்காய் சாம்பார் (jack fruit brinjal sambar recipe in tamil)
பழங்காலத்து கிராமத்தில் செய்த இந்த பலாக்கொட்டை, கத்தரிக்காய் சாம்பார் மிகவும் சுவையாக இருக்கும். சாதம், இட்லி, தோசை போன்ற எல்லா உணவுகளுடன் பொருத்தமாக இருக்கும்.#vk Renukabala -
சுரைக்காய் சாம்பார் சாதம்(in pressure cooker) (Suraikkaai sambar satham recipe in tamil)
# steamசுரைக்காயை வைத்து எளிதான சுவையான சாம்பார் சாதம் இன்று செய்தேன். குக்கெரில் ஆவியில் வேக வைத்து செய்தேன்.சுவை மிகவும் நன்றாக இருந்தது. சுரைக்காய் தவிர வேறு காய்கள் எது வேண்டுமானாலும் சேர்த்து செய்யலாம். மேலும் இரண்டு மூன்று காய்கள் சேர்த்து கதம்ப சாம்பார் சாதம் ஆகவும் செய்யலாம். Meena Ramesh -
துவரம்பருப்பு சாம்பார்(Sambar recipe in tamil)
துவரம்பருப்பு சாம்பார்.து.பருப்பு 100வேகவைக்கவும்.பெரிய நெல்லி அளவு புளி ஒரு டம்ளர் தண்ணீரில் ஊறப்போட்டு கரைக்கவும். காய்கள், வெங்காயம், ப.மிளகாய்,தக்காளி வெட்டி வைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு,உளுந்து, வெந்தயம், பெருங்காயம், கறிவேப்பிலை, இரண்டு வரமிளகாய் வறுத்து காய் வதக்கி சாம்பார் பொடி தேவையான உப்பு போட்டு கொதிக்க விட்டு பருப்பை போட்டு மீண்டும் கொதிக்க விடவும். மல்லி இலை போட்டு இறக்கவும்.பருப்பு ஸ்பெசல் ஒSubbulakshmi -
ரெஸ்டாரன்ட் ஸ்டைல் இட்லி சாம்பார் (Restaurent style idli sambar recipe in tamil)
#familyஎன் குடும்பத்தில் எல்லோருக்கும் இந்த அரைத்து விட்ட பருப்பு சாம்பார் இட்லி தோசைக்கு மிகவும் பிடிக்கும். மிகவும் வாசனையுடனும் சுவையாகவும் இருக்கும். Meena Ramesh -
மினி இட்லி சாம்பார் (Mini idli sambar recipe in tamil)
#kids3மினி இட்லி என்றாலே குழந்தைகள்தான் ஞாபகத்தில் வருவார்கள். இங்கு நான் மினி இட்லியுடன் பருப்பு மற்றும் காய்கறிகள் சேர்த்து மிகவும் சத்தான சாம்பார் தயாரித்துள்ளேன். இதை கலந்து குழந்தைகள் லஞ்ச் பாக்ஸில் கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். Asma Parveen -
ரோசாப்பூ சட்னி/onion (Rosapoo chutney Recipe in Tamil)
#nutrient2 #goldenapron3 # bookஇந்த ரோசாப்பூ சட்னி செட்டிநாடு வகை சட்னி ஆகும். என்னுடைய அம்மா எனக்கு பிடிக்கும் என்றுசெய்து தருவார்கள். எனக்கு இதன் செய்முறை தெரியாது. 32 வருடங்களுக்குப் பிறகு மும்பையில் உள்ள என் கல்லூரி தோழி மூலம் இதன் செய்முறையை தெரிந்து கொண்டேன்.தக்காளியில் விட்டமின் ஏ 16% விட்டமின் சி 22% விட்டமின் பி 5% உள்ளது மற்றும் இரும்பு கால்சியம் போன்ற சத்துக்களும் உள்ளது சோடியம் பொட்டாசியம் போன்ற தாதுக்களும் உள்ளது உள்ளது. தக்காளியில் ஜூஸ் மற்றும் சாஸ் பொருட்களை தயாரிக்கலாம். மற்றும் தக்காளி பொருட்கள் இதய நோய் மற்றும் பல புற்று நோய்களின் அபாயத்தை குறைக்கிறது இந்த பழம் சரும ஆரோக்கியத்துக்கு நன்மை பயக்கும். ஏனெனில் இது வெயிலில் இருந்து பாதுகாக்கும்.தக்காளியுடன் வெங்காயம் சேர்த்து செய்த சட்னி ஆகும் இது இட்லி தோசை மற்றும் சப்பாத்திக்கு சுவையாக இருக்கும். Meena Ramesh -
இட்லி சாம்பார்(idli sambar recipe in tamil)
#newyeartamilஅரைத்தசாம்பார் மசாலா- மல்லி விதை(தனியா),சீரகம்,வரமிளகாய்,உப்பு சேர்த்து வறுத்து அரைத்தது. SugunaRavi Ravi -
-
செட்டிநாடு நீர் பூசணிக்காய் சாம்பார் (Chettinadu neer poosanikkaai sambar recipe in tamil)
#arusuvai5 BhuviKannan @ BK Vlogs -
கடலைமாவு சாம்பார் (இட்லி, தோசை) (Kadalai maavu sambar recipe in tamil)
ஈஸியான மற்றும் டேஸ்டி யான இன்ஸ்டன்ட் சாம்பார். Madhura Sathish
More Recipes
கமெண்ட் (4)