ரவா கேசரி (Rava kesari recipe in tamil)

Keerthi Elavarasan
Keerthi Elavarasan @cook_26321451

ரவா கேசரி இந்தியாவின் பாரம்பரியமிக்க இனிப்பு வகை. இது இந்தியா முழுக்க மிகவும் புகழ் பெற்றது. விரைவாக செய்யக்கூடிய சுவையான இனிப்பு. ரவா கேசரி ரவை, சர்க்கரை, நெய், முந்திரி பருப்பு, மற்றும் ஏலக்காய் கொண்டு செய்யப்படுகிறது. இது பண்டிகை நாட்கள், திருமண விழாக்கள், மற்றும் உறவினர்களின் வருகையின்போது செய்து செய்யப்படும் ஒரு அசத்தலான இனிப்பு. சுலபமாக செய்யக்கூடிய கேசரியை நீங்களும் செய்து சுவைத்து மகிழுங்கள்.
#the.chennai.foodie #cookpadtamil #the.chennai.foodie

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 minutes
2 பரிமாறுவது
  1. 1 கப் (200 grams)ரவை
  2. 2 கப் (400 grams)சர்க்கரை
  3. 1 கப் (200 ml)நெய்
  4. 1/8 தேக்கரண்டிஆரஞ்சு நிறம்/ கேசரி கலர்
  5. குங்குமப்பூ – சிறிதளவு
  6. 10 அல்லது தேவைக்கேற்பமுந்திரிப் பருப்பு
  7. 10 அல்லது தேவைக்கேற்பஉலர்ந்த திராட்சை
  8. 1/4 தேக்கரண்டிஏலக்காய் தூள்

சமையல் குறிப்புகள்

30 minutes
  1. 1

    ஒரு வாணலியில் 1/4 கப் நெய் சேர்த்து அதனுடன் 10 முந்திரி பருப்பு மற்றும் 10 உலர்ந்த திராட்சை சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும். அதனை தனியே வைத்து விடவும்.

  2. 2

    அதே வாணலியில் 1/4 கப் நெய் சேர்த்து சூடானதும் 1 கப் ரவையை சேர்த்து மிதமான சூட்டில் வறுக்கவும்

  3. 3

    4 முதல் 5 நிமிடங்களுக்கு, நல்ல மணம் வரும் வரை வறுக்கவும்

  4. 4

    ஒரு பாத்திரத்தில் 3 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.

  5. 5

    வறுத்த ரவையுடன் சூடான தண்ணீர் சேர்த்து மிதமான சூட்டில் கட்டியின்றி கிளறவும்

  6. 6

    ரவை வெந்ததும் 1/4 கப் நெய் சேர்க்கவும். ரவையுடன் 2 கப் சர்க்கரை சேர்த்து மிதமான சூட்டில் கட்டியின்றி கிளறவும். சர்க்கரை கரையும் பொழுது கைவிடாமல் நன்கு கிளறவும் அல்லது கட்டியாக வாய்ப்பு உள்ளது

  7. 7

    அதனுடன் குங்குமப் பூ, 1/4 தேக்கரண்டி பொடித்து வைத்த ஏலக்காய் சேர்க்கவும். பின்னர் 1/8 தேக்கரண்டி கேசரி கலர் சேர்த்து கிளறவும். இப்பொழுது வறுத்து வைத்துள்ள முந்திரி, திராட்சையை சேர்க்கவும்

  8. 8

    பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் வரை கிளறவும். சுவையான ரவா கேசரி தயார். #the.chennai.foodie

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Keerthi Elavarasan
Keerthi Elavarasan @cook_26321451
அன்று

Similar Recipes