ஆரஞ்சு கேசரி (Orange kesari recipe in tamil)

Sudharani // OS KITCHEN
Sudharani // OS KITCHEN @cook_1_6_89
Coimbatore

ஆரஞ்சு கேசரி (Orange kesari recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
6 பரிமாறுவது
  1. 1கப் ரவை
  2. 3ஆரஞ்சு
  3. 1_1/2 கப் சர்க்கரை
  4. 1கப் நெய்
  5. 15முந்திரி
  6. 15திராட்சை
  7. 8ஏலக்காய்
  8. 1/4ஸ்பூன் ரோஸ் வாட்டர்
  9. ஆரஞ்சு புட் கலர் சிறிது

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    ஆரஞ்சு பழத்தை பிழிந்து சாறு எடுத்து அளந்து அதனுடன் தண்ணீர் சேர்த்து மொத்தம் இரண்டு கப் அளவிற்கு எடுக்கவும் அதை அடுப்பில் வைத்து ஏலக்காய் இடித்து போட்டு கொதிக்க விடவும்

  2. 2

    வாணலியில் சிறிது நெய் விட்டு சூடானதும் முந்திரி திராட்சை சேர்த்து வறுத்து எடுக்கவும் பின் மீண்டும் சிறிது நெய் விட்டு சூடானதும் ரவையை மெல்லிய தீயில் வைத்து நிதானமாக வறுக்கவும்

  3. 3

    பின் கொதிக்கும் ஆரஞ்சு சாறை சிறிது சிறிதாக ஊற்றி நன்கு கட்டியில்லாமல் கிளறி வேகவிடவும்

  4. 4

    ரவை நன்கு வெந்ததும் சர்க்கரை சேர்த்து கிளறவும் சர்க்கரை இளகி பின் சேர்ந்து வரும் போது ஆரஞ்சு புட் கலர் சிறிது சேர்த்து நன்கு கிளறவும்

  5. 5

    பின் மீதமுள்ள நெய்யை சூடாக்கி ஊற்றி வறுத்த முந்திரி திராட்சை சேர்த்து கிளறி இறக்கவும்

  6. 6

    பின் கேக் மோல்டில் நெய் தடவி இந்த கேசரி ஐ கொட்டி சமப்படுத்தி ஆறவிட்டு கவிழ்க்கவும்

  7. 7

    சுவையான ஆரஞ்சு கேசரி ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sudharani // OS KITCHEN
அன்று
Coimbatore

Similar Recipes