எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

45 நிமிடங்கள்
4-6 பரிமாறுவது
  1. 1 கப் மைதா
  2. 1 கப் பால் பவுடர்
  3. 2 டீஸ்பூன் ரவை
  4. 1 கப் பால்
  5. சிறிதுஏலக்காய்த்தூள்
  6. 1/2 கப் நெய்
  7. சர்க்கரை பாகு
  8. 1 கப் சர்க்கரை
  9. 1 கப் தண்ணீர்
  10. சிறிதுகுங்குமப்பூ

சமையல் குறிப்புகள்

45 நிமிடங்கள்
  1. 1

    ஒரு பௌலில் மைதா மாவு பால் பவுடர் ரவை சேர்க்கவும்

  2. 2

    இதனுடன் ஏலக்காய்த்தூள் சேர்த்து சிறிது சிறிதாக பால் சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கலந்து கொள்ளவும் (தோசை மாவு அல்லது தண்ணீர் போல் இருந்தால் சட்டியில் ஒட்டும் அதனால் இட்லி மாவு பதத்திற்கு கலந்து கொள்ளவும்)

  3. 3

    மற்றொரு பாத்திரத்தில் சர்க்கரை தண்ணீர் குங்குமப்பூ சேர்த்து பிசுபிசுப்பு பதம் வரும்வரை காய்ச்சவும்

  4. 4

    இப்போது கடாயில் நெய் விட்டு சூடானதும் மிதமான தீயில் வைத்துக் கொள்ளவும் கலந்து வைத்த கலவையில் இருந்து ஒரு கரண்டி மாவை எடுத்து படத்தில் காட்டியவாறு ஊற்றி தோசை போல் மெதுவாக தேய்த்துக் கொள்ளவும்

  5. 5

    மிதமான மற்றும் குறைந்த தீயில் இவற்றை இரண்டு பக்கமும் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும் பொரித்து எடுத்த உடனே சூடான சர்க்கரைப் பாகில் ஒரு நிமிடம் வைத்து எடுக்கவும்

  6. 6

    இதேபோல் அனைத்தையும் தயாரித்துக் கொள்ளவும் பரிமாறும் பொழுது இதன் மேல் நறுக்கிய பாதாம் பிஸ்தாவை தூவி பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Viji Prem
Viji Prem @vijiprem24
அன்று
Dharmapuri
Running Madurai virundhu homemade delivery restaurantsFb pagehttps://www.facebook.com/vijiprem20/
மேலும் படிக்க

Similar Recipes