ஜூஸி & ஸ்பாஞ்சி ரவா ஸ்வீட் (Rasbhari mithai juicy rava sweet)

Sharmila Suresh
Sharmila Suresh @cook_26342802
Pandhalkudi

#GA4 #week9
#Mithai
#Diwali
தீபாவளிக்கு புதுவிதமான ஸ்வீட் செய்து அசத்தலாம் . குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள்.

ஜூஸி & ஸ்பாஞ்சி ரவா ஸ்வீட் (Rasbhari mithai juicy rava sweet)

#GA4 #week9
#Mithai
#Diwali
தீபாவளிக்கு புதுவிதமான ஸ்வீட் செய்து அசத்தலாம் . குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
3 பரிமாறுவது
  1. 2 ஸ்பூன் நெய்
  2. ஒரு கப் ரவை
  3. 1 1/2 டம்ளர் பால்
  4. ஒரு கப் சர்க்கரை
  5. சிறிதளவுகேசரி பவுடர்
  6. குங்குமப்பூ தேவைப்பட்டால்
  7. 2 ஸ்பூன் பால் பவுடர்
  8. பொரிக்க தேவையான அளவு எண்ணெய்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    ஒரு கடாயில் தேவையான அளவு நெய் விட்டு ஒரு கப் ரவை சேர்த்து நன்றாக வறுத்து கொள்ளவும்.

  2. 2

    நன்றாக வறுத்த பின்பு பால் சேர்த்து நன்றாகக் கிளறிக் கொள்ளவும்.

  3. 3

    கெட்டியான பதத்திற்கு வந்தவுடன் அடுப்பை அணைத்து விட வேண்டும்.சிறிது சூடு ஆறவும் 2ஸ்பூன் பால் பவுடர் சேர்த்து உருண்டை திரட்டும் பதத்திற்கு உருட்டிக் கொள்ளவும்.

  4. 4

    ஒரு கடாயில் தேவையான அளவு சர்க்கரை,சிறிதளவு தண்ணீர் சேர்த்து சர்க்கரை பாகு தயார் செய்யவும்.சிறிதளவு கேசரி பவடர் சேர்த்துக் கொள்ளவும்.

  5. 5

    நன்றாக கொதித்து பிசு பிசுத் தன்மை வந்தவுடன் அடுப்பை அணைத்து விட வேண்டும்.

  6. 6

    ரவை கலவையை சிறு உருண்டையா எடுத்து கரண்டி மேல் வைத்து லேசாக அழுத்தம் கொடுக்கவும்.படத்தில் காட்டியவாறு.

  7. 7

    வித விதமான டிசைன்களில் அச்சிடலாம். படத்தில் காட்டியவாறு உங்களுக்கு விருப்பமான டிசைனை அச்சிடலாம்.

  8. 8

    ஒரு கடாயில் பொரிக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றி மிதமான சூட்டில் இதனை போட்டு பொரித்து எடுக்கவும்.

  9. 9

    சர்க்கரை பாகுவை லேசாக சூடு வைத்து பொரித்து எடுத்த ஸ்வீட்டை அதில் சேர்த்துக் கொள்ளவும்.

  10. 10

    சுவையான ஜூஸி,ஸ்பாஞ்சியான ரவை ஸ்வீட் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sharmila Suresh
Sharmila Suresh @cook_26342802
அன்று
Pandhalkudi

Similar Recipes