சீஸ் பைட்ஸ்

Kavitha Chandran
Kavitha Chandran @Kavi_chan
எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
4 பரிமாறுவது
  1. 1கப் மைதா
  2. 1/4ஸ்பூன் சோடா உப்பு
  3. 2கியூப் சீஸ்
  4. 2டேபிள்ஸ்பூன் வெண்ணெய்
  5. 1/4கப் பால்
  6. தேவையானஅளவு உப்பு
  7. தேவையானஅளவு எண்ணெய்

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    ஒரு பவுலில் மைதா மாவு, உப்பு, சோடா உப்பு, வெண்ணெய்,சீஸ் துருவி சேர்த்து கலந்து விடவும்.

  2. 2

    பின்னர் பால் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கலந்து விட்டு சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து 15 நிமிடம் ஊற வைத்து கொள்ளவும்.

  3. 3

    பிறகு சிறிய உருண்டையாக உருட்டி சப்பாத்தி கட்டையில் வைத்து நன்கு மெல்லியதாக தேய்த்து ஓரங்களை கத்தியால் கட் செய்து எடுத்து விடவும்.

  4. 4

    பிறகு இதனை படத்தில் காட்டியபடி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

  5. 5

    அடுப்பில் வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் இதனை சேர்த்து பொரித்து எடுத்து கொள்ளவும்.அடுப்பை குறைவான தீயில் வைத்து பொரிக்கவும்.

  6. 6

    சூப்பரான குழந்தைகள் மிகவும் விரும்பி உண்ணும் சீஸ் பைட்ஸ் அல்லது சீஸ்லிங்ஸ் தயார். நன்றி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Kavitha Chandran
Kavitha Chandran @Kavi_chan
அன்று

Similar Recipes