அவல் பால் பாயசம்

Aishwarya MuthuKumar
Aishwarya MuthuKumar @cook_25036087

#cookwithmilk
அவல் உடல் சூட்டை தணிக்கும். உடல் எடையை குறைக்க வல்லது. நிறைய சத்துக்கள் கொண்டது. அவல் என்பது நெல்லை ஊறவைத்து பின்பு அதை தட்டையாக்குவார்கள். உமியை நீக்கி விடுவார்கள். அப்போது கைகுத்தல் முறையில் செய்வார்கள். இப்பொது மெஷின் முறையில் செய்கிறார்கள்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 நபர்கள்
  1. 1/2 லிட்டர் பால்
  2. 2 கப் அவல்
  3. ஒரு கப் சர்க்கரை
  4. ஏலக்காய் இரண்டு

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    பாலில் அதிக சத்துக்கள் உண்டு. முக்கியமாக கால்சியம் சத்து அதிகம் உள்ளது. பால் பயன்படுத்தி ஒரு எளிய காலை உணவு செய்யலாம்.

  2. 2

    முதலில் தேவையான பொருள்களை எடுத்து கொள்ளவும். அவலை சிறிது தண்ணீர் சேர்த்து அலசி எடுத்து கொள்ளவும்

  3. 3

    பாலை நன்கு காய்ச்சி எடுத்து கொள்வோம். பின்னர் ஒரு பாத்திரத்தில் அலசி எடுத்து வைத்த அவலை சேர்க்கவும்

  4. 4

    பின்பு காய்ச்சிய பால் மற்றும் சர்க்கரை சேர்க்கவும். சிறிது கிளறி விட வேண்டும்

  5. 5

    சிறிது நேரம் கழித்து கெட்டி ஆகிவிடும். ஏலக்காய் தட்டி போட்டு பரிமாறலாம். சுவையான அவல் பால் பாயசம் தயார்.

  6. 6

    புரட்டாசி சனிக்கிழமை ஸ்பெஷல். கிருஷ்ணருக்கு பிடித்த உணவை நெய்வேத்தியம் செய்தோம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Aishwarya MuthuKumar
Aishwarya MuthuKumar @cook_25036087
அன்று

Similar Recipes