தஹி பூரி (Dahi poori recipe in tamil)

ARP. Doss
ARP. Doss @cook_21334547

கோல்டன் அப்ரன் முதல் வார போட்டியில் potato yogurt tamarind .#GA4 #GA4

தஹி பூரி (Dahi poori recipe in tamil)

கோல்டன் அப்ரன் முதல் வார போட்டியில் potato yogurt tamarind .#GA4 #GA4

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
இரண்டு நபர்களுக்கு
  1. 1 1/2 கப் ரவை
  2. 6 டீஸ்பூன் மைதா
  3. 1நெல்லிக்காய் சைஸ் புளி
  4. 50 கிராம் பேரிச்சை பழம்
  5. 1/2 கப் நாட்டு சக்கரை
  6. 1 டீஸ்பூன் தனி மிளகாய்த்தூள்
  7. 1 டீஸ்பூன் தனியா தூள்
  8. 1 டீஸ்பூன் சீரகத்தள்
  9. 1 டீஸ்பூன் சோம்பு தூள்
  10. ஒரு கைப்பிடி அளவு புதினா
  11. கொத்தமல்லி சிறிதளவு
  12. ஒரு துண்டு இஞ்சி
  13. 2பச்சை மிளகாய்
  14. சாட் மசாலா தேவையான அளவு
  15. தேவையானஅளவு உப்பு
  16. எண்ணை பொரிப்பதற்கு ஏற்ப
  17. தண்ணீர் தேவையான அளவு
  18. 1 கப் தயிர்
  19. 2உருளைக்கிழங்கு

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    இப்பொழுது ஒரு பாத்திரத்தில் ஒன்றரை கப் அளவு அளவையை சேர்த்துக் கொள்ளவும். அதில் அரை ஸ்பூன் அளவு மைதா தேவையான அளவு உப்பு சேர்த்து. தண்ணீர் ஊற்றி நன்றாக பிசைந்து ஒரு பத்து நிமிடம் அப்படியே விட்டு விடவும். ஒரு ஸ்பூன் மேலே எண்ணெய் ஊற்றி கடுகு வைத்து ஈரத் துணியைப் போட்டு மூடி வைக்க வேண்டும்.

  2. 2

    இதற்கு தேவையான சட்னி களை செய்யலாம். மிக்ஸி ஜாரில் சுத்தம் செய்த புதினா கொத்தமல்லி இஞ்சி பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக அரைத்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஒரு சட்னி பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.

  3. 3

    இப்பொழுது மீட்ட சட்னி செய்வதற்கு தவாவில் ஊற வைத்த புளியை சேர்த்து அதனுடன் பேரீச்சம் பழத்தையும் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.

  4. 4

    பேரிச்சம் பழமும் நன்கு கொதித்த பிறகு. ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு பேஸ்ட் ஆக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.இப்பொழுது இன்னொரு தவாவில் இந்த அரைத்து பேஸ்ட் செய்து சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி நாட்டு சர்க்கரை அல்லது வெல்லம் சேர்க்கலாம். கொதிக்கவிடவும். நன்கு கொதித்து திக்காகும் போது அதில் சீரகத்தூள் ஒரு டீஸ்பூன் சோம்பு தூள் ஒரு டீஸ்பூன் போட்டு நன்கு கொதிக்க. இதற்கு மேலும் தாளிப்பு போட வேண்டும். அதற்கு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் தனி மிளகாய்த்தூள் ஒரு டீஸ்பூன் தனியாத்தூள்

  5. 5

    இதில் கொட்டி விட வேண்டும். ஒரு இரண்டு நிமிடம் கழித்து இறக்கி விட்டாள் சுவையான மற்றும் ஹெல்தியான மீட்ட சட்னி தயார் ஆகிவிட்டது. நன்கு ஆற விடவும்.

  6. 6

    இது பிசைந்து வைத்த மாவில் நன்கு மறுபடியும் பிசைந்து உருண்டைகளாக்கி பூரிக்கட்டையால் போட்டு திரட்டி சின்னச் சின்ன பூரியா கட் பண்ணி எடுக்க வேண்டும்.

  7. 7

    எண்ணெய் ஊற்றி காய்ந்த பிறகு பூரியை நன்கு பொன்னிறமாகும் வரை பொரித்தெடுக்கவும்.

  8. 8

    இப்போது ஒரு பாத்திரத்தில் வேக வைத்த உருளைக்கிழங்கு சேர்க்கவும். அதில் சீரகத் தூள் சோம்புத் தூள் மிளகாய்த் தூள் தனியா தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

  9. 9

    ஒரு கப் கெட்டித் தயிரை எடுத்து கொள்ளவும் அதில் தேவையான அளவு சர்க்கரை சேர்த்து. நன்கு ஸ்பூன் வைத்து க்ரீமி ஆக அடித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

  10. 10

    இப்பொழுது தஹி பூரி செய்ய ஆரம்பிக்கலாம். முதலில் பூரியை ஒரு பிளேட்டில் வைக்கவும். அதன் நடுவில் ஓட்டை போட்டு தயார் செய்து வைத்திருக்கும் உருளைக்கிழங்கு மசாலாவை அதில் வைக்கவும்.

  11. 11

    இப்பொழுது அதன் மேல் நாம் தயார் செய்து வைத்திருக்கும் தயிர் சாஸ் ஊற்றவும். அதனுடன் புதினா சட்னி மற்றும் மீட்டார் சட்னியில் சேர்க்கவும்.

  12. 12

    இப்பொழுது அதன் மேல் சாட் மசாலா தூவி பரிமாறினால் சுவையான தஹி பூரி தயார் ஆகிவிட்டது ஒரு முறை செய்து பாருங்கள் நன்றி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
ARP. Doss
ARP. Doss @cook_21334547
அன்று

Similar Recipes