பால் பணியாரம் # cook with milk

Azhagammai Ramanathan
Azhagammai Ramanathan @ohmysamayal

செட்டிநாட்டு கல்யாணங்களில் காலை உணவாக இதை கண்டிப்பாக பரிமாறுவர்.

பால் பணியாரம் # cook with milk

செட்டிநாட்டு கல்யாணங்களில் காலை உணவாக இதை கண்டிப்பாக பரிமாறுவர்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
4 பேர்
  1. 100கி பச்சரிசி
  2. 100கி உளுந்து
  3. 200 மில்லி பால்
  4. 100மி தேங்காய் பால்
  5. 100_125கி சீனி
  6. சிறிதுஏலக்காய்த்தூள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    பச்சரிசியையும் உளுந்தையும் நன்றாக அலசி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.

  2. 2

    இப்போது மிக்ஸி ஜாரில் இதை சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து வடை பதத்திற்கு கெட்டியாக அரைத்து எடுக்கவும்.

  3. 3

    கடாயில் எண்ணெய் காய வைக்கவும். மாவில் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக அடித்து பிசைந்து வைக்கவும்.

  4. 4

    இப்போது கைகளில் ஒரு அளவு மாவு எடுத்து கொண்டு சின்ன சின்ன உருண்டைகளாக எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.மிதமான தீயில் வேகவைக்கவும் நன்றாக கிளறி திருப்பி விட்டு எல்லா பக்கமும் வெந்த மாதிரி எடுக்கவும்.

  5. 5

    இந்த பணியாரம் சிவக்க வேக வைக்க வேண்டாம். ஒரு சில நிமிடங்களில் வெந்துவிடும்.பாலைக் காய்ச்சி ஆற வைத்துக்கொள்ளவும் அதனுடன் தேங்காய் பால் சீனி ஏலக்காய்த்தூள் சேர்க்கவும்.

  6. 6

    இப்போது வெந்த பணியாரங்களை சூடு இருக்கும்போதே பாலில் சேர்க்கவும் நன்றாக ஊறிவிடும்,பரிமாறலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Azhagammai Ramanathan
அன்று

Similar Recipes