சாம்பார் வடை (Sambar vadai)

Renukabala
Renukabala @renubala123
Coimbatore

உளுந்து வைத்து செய்த வடை தான் சாம்பாரில் போட்டு சாம்பார் வடை என்கிறோம். அதற்கு வைக்கும் சாம்பார் தான் சுவையே. அந்த சாம்பார் செய்முறை இப்போது பார்க்கலாம்.
ONEPOT

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
  1. 1/2 கப் துவரம்பருப்பு
  2. 2 டேபிள் ஸ்பூன் பாசிப்பருப்பு
  3. 1 கேரட்
  4. 3 பீன்ஸ்
  5. 1 வெங்காயம்
  6. 1 தக்காளி
  7. புளி சிறிய நெல்லிக்காய் அளவு
  8. 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  9. உப்பு தேவையான அளவு
  10. வறுத்து அரைக்க :
  11. 1 டேபிள் ஸ்பூன் தனியா
  12. 5 வற்றல் மிளகாய்
  13. 1/4 டீஸ்பூன் வெந்தயம்
  14. 1 டேபிள் ஸ்பூன் கடலை பருப்பு
  15. 3 டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவல்
  16. ஒரு சிட்டிகை பெருங்காயம்
  17. தாளிக்க :
  18. 1 டீஸ்பூன் நெய் ஒரு எண்ணை
  19. 1/4 டீஸ்பூன் கடுகு
  20. கறிவேப்பிலை
  21. 2 வற்றல் மிளகாய்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    துவரம் பருப்பு, பாசிப்பருப்பை நன்கு கழுவி குக்கரில் சேர்த்து மஞ்சள் தூள், நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், கேரட், பீன்ஸ், எண்ணை சேர்த்து மூன்று விசில் வைத்து எடுக்கவும்.

  2. 2

    குக்கரில் உள்ள பருப்பு சூடாறியவுடன் எடுத்து, பாத்திரத்தில் சேர்த்து புளி கரைத்த தண்ணீர், உப்பு கலந்து, வறுத்து அரைத்த பொடி சேர்த்து நன்கு கலந்து, தேவையான தண்ணீர் சேர்த்து (கொஞ்சம் தண்ணீர் அதிகம் சேர்க்கவும்) கொதிக்கவைக்கவும்.

  3. 3

    வறுக்க கொடுத்துள்ள பொருட்களை வெறும் வாணலியில் சேர்த்து வறுத்து, மிக்ஸி ஜாரில் சேர்த்து நைசாக அரைத்துக்கொள்ளவும்.

  4. 4

    பின்னர் தாளிப்பு கரண்டியை ஸ்டவ்வில் வைத்து எண்ணை ஊற்றி, சூடானதும் கடுகு, பெருங்காயம், மல்லி இலை, கறிவேப்பிலை, வற்றல் சேர்த்து பொரிந்ததும், வெந்த பருப்பில் சேர்த்து கலந்தால் சுவையான வடை சாம்பார் தயார்.

  5. 5

    பின்னர் உளுந்து மாவை அரைத்து, வடை பொரித்து, சாம்பாரில் சேர்த்தால் சுவையான சாம்பார் வடை தயார்.

  6. 6

    வடை மாவு அரைப்பது குறித்த செய்முறை என் தயிர் வடை செய்யும் பதிவில், உளுந்துவடை என கொடுத்துள்ளேன். அனைவரும் seithu சுவைக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Renukabala
Renukabala @renubala123
அன்று
Coimbatore
My passion for cooking is my happiness.I make dishes and assemble them in my own style.
மேலும் படிக்க

Similar Recipes