ரிப்பன் பக்கோடா

Raji Alan
Raji Alan @cook_25734398

#GA4week3#pakoda பூண்டு சோம்பு சேர்ப்பதால் நல்ல மணமாக இருக்கும் மிகவும் ருசியான மொறு மொறு ரிப்பன் பக்கோடா எளிதில் செய்யலாம்....

ரிப்பன் பக்கோடா

#GA4week3#pakoda பூண்டு சோம்பு சேர்ப்பதால் நல்ல மணமாக இருக்கும் மிகவும் ருசியான மொறு மொறு ரிப்பன் பக்கோடா எளிதில் செய்யலாம்....

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

40நிமிடம்
10பேர்
  1. பச்சரிசி மாவு ஒரு படி
  2. பொட்டுக்கடலை மாவு அரை படி
  3. வெண்ணெய் 100 கிராம்
  4. பூண்டு ஒரு கைப்பிடி அளவு
  5. மிளகாய்வற்றல் 30-40
  6. பெருங்காயத்தூள் 1ஸ்பூன்
  7. சோம்பு 50 கிராம்
  8. உப்பு தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

40நிமிடம்
  1. 1

    முதலில் பச்சரிசி மாவு பொட்டுக்கடலை மாவு ஆகியவற்றை சலித்து வைத்துக் கொள்ளவும் அதனுடன் உருக்கிய வெண்ணை சேர்த்து பிசைந்து கொள்ளவும்.. பிறகு சோம்பு மிளகாய் வற்றல் பூண்டு ஆகியவற்றை மிக்ஸியில் விழுதாக அரைத்து மாவில் சேர்த்துக் கொள்ளவும் உப்பு தேவையான அளவு போட்டு சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து நன்கு அனைத்தையும் சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும்..

  2. 2

    பிறகு பிசைந்த மாவை காய்ந்த எண்ணெயில் சீவல் அச்சில் வைத்து பிழிந்து விடவும் நன்கு பொன்னிறமாக சிவக்க வேக வைத்து எடுத்து வைக்கவும்.. மிகவும் ஈஸியான மொறு மொறு ரிப்பன் பக்கோடா தயார்...

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Raji Alan
Raji Alan @cook_25734398
அன்று

Similar Recipes