அரிசி, பாசிப்பருப்பு உசிலி

Manju Jaiganesh
Manju Jaiganesh @cook_22897267

அரிசி, பாசிப்பருப்பு உசிலி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

25 நிமிடம்
3 பேருக்கு
  1. 1 ஆளாக்கு பச்சரிசி
  2. 1/4 ஆழாக்கு பாசிப்பருப்பு
  3. 6 வர மிளகாய்
  4. 4 டம்ளர் தண்ணீர்
  5. தேவைக்கேற்ப கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, கருவேப்பிலை, உப்பு
  6. 10 ஸ்பூன் எண்ணெய்

சமையல் குறிப்புகள்

25 நிமிடம்
  1. 1

    முதலில் பச்சரிசி பாசிப்பருப்பு இரண்டையும் பொன்னிறமாக வெறும் வாணலியில் வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.குக்கரில் எண்ணெய் ஊற்றி கடுகு கடலைப்பருப்பு உளுத்தம் பருப்பு வரமிளகாய் கறிவேப்பிலை தாளித்து ஒரு டம்ளர் அரிசி பருப்பு இற்கு 3 1/4 டம்ளர் தண்ணீர் என்ற அளவில் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். தண்ணீர் கொதித்தவுடன் உப்பு சேர்க்கவும்.

  2. 2

    பாசிப்பருப்பு ஒரு முறை கழுவியவுடன் கொதிக்கும் தண்ணீரில் சேர்த்து 5 நிமிடம் வேக வைக்கவும்.

  3. 3

    அரிசியையும் கழுவியவுடன் பாசிப் பருப்புடன் சேர்த்து 5 நிமிடம் வேகவைத்து மூன்று விசில் விட்டு இறக்கவும்.

  4. 4

    சுவையான உசிலி ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Manju Jaiganesh
Manju Jaiganesh @cook_22897267
அன்று

Similar Recipes