எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
3 நபர்கள்
  1. 3 பரோட்டா
  2. 1 தக்காளி
  3. 2 பெரியவெங்காயம்
  4. 1 இஞ்சிபூண்டு விழுது
  5. 2 பச்சைமிளகாய்
  6. 1 ஸ்பூன் மிளகாய்த்தூள்
  7. 1ஸ்பூன் சாட்மசாலாதூள்
  8. 1/2ஸ்பூன் பெப்பர்தூள்
  9. 2ஸ்பூன் எண்ணெய்
  10. தேவையானஅளவு கருவேப்பிலை
  11. தேவையானஅளவு கொத்தமல்லி இலைகள்

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    புரோட்டாவை துண்டு துண்டாக கட் பண்ணி வைத்துக் கொள்ளவும்.

  2. 2

    அடுப்பில் ஒரு கடையை வைத்து 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் போட்டு தாளிக்கவும்.

  3. 3

    பிறகு பொடியாக நறுக்கிய தக்காளி, வெங்காயம் போட்டு வதக்கவும். தக்காளி,வெங்காயம் நன்கு வதங்கியதும் ஒரு ஸ்பூன் இஞ்சிபூண்டு விழுதை போட்டு 1 நிமிடம் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

  4. 4

    பிறகு துண்டு துண்டாக நறுக்கிய புரோட்டாக்களை அதில் போட்டு 1 நிமிடம் கிளறவும்

  5. 5

    பிறகு அதில் மிளகாய் தூள், சாட்மசாலாதூள், பெப்பர்தூள் போடவும்

  6. 6

    பிறகு 2 கப் குருமாவை அதில் ஊற்றி தேவையான அளவு கறிவேப்பிலை போட்டு 3 நிமிடம் கிளறிக் கொண்டே இருக்கவும். பிறகு கொத்தமல்லி இலைகள் தூவி பரிமாறவும்.

  7. 7

    சுவையான கொத்து பரோட்டா தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

 karthick srini
karthick srini @cook_26638642
அன்று

Similar Recipes