மக்காசோள நிலக்கடலை ஹல்வா (Makkasola nilakadalai halwa recipe in tamil)

Aishwarya MuthuKumar
Aishwarya MuthuKumar @cook_25036087

#millet
மக்காசோளம் சிறுதானிய வகையை சேர்ந்தது. சோளத்தில் அதிக சத்துக்கள் உள்ளது. இதற்கு "great millet" என்று பெயர் உண்டு. மற்றும் சொர்கம், மைலோ என்று வேறு பெயர்களும் உண்டு. சர்க்கரை அளவை காட்டுக்குள் வைக்கும். அரிசியை விட அதிக சத்துக்கள் கொண்டது. இரும்புசத்து புரதசத்து கால்சியம்... இப்படி பல சத்துக்கள் உள்ளது. என்னுடைய 50th ரெசிபி. இனிப்புடன் ஆரம்பிக்கிறேன்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

2 பேர்
  1. ஒரு சோளம்
  2. ஒரு கப் காய்ச்சிய பால்
  3. 5 ஸ்பூன் நெய்
  4. 5 ஸ்பூன்சர்க்கரை
  5. நிலக்கடலை

சமையல் குறிப்புகள்

  1. 1

    சோளத்தை வேக வைத்து எடுத்து கொள்ளவும். அதை உதிர்த்து எடுத்து கொள்ளவும்

  2. 2

    அதை முதலில் மிக்ஸியில் கொரகொரப்பாக அரைக்கவும். பின்னர் இரண்டு ஸ்பூன் பால் ஊற்றி நன்றாக அரைக்கவும்

  3. 3

    வாணலியில் நெய் சேர்த்து அதில் நிலக்கடலை வறுத்து எடுக்கவும். முந்திரி சேர்க்கலாம் நிலக்கடலை க்கு பதிலாக. நிலக்கடலையில் சத்து அதிகம்.பின்னர் அரைத்த விழுது பால் சேர்த்து நன்கு கிளறவும்

  4. 4

    அதை நன்கு கிளறி நெய் சேர்த்து கிளறவும். பின்னர் சர்க்கரை சேர்த்து கிளறவும். நிறம் சற்று மாறும். அது வரை கைவிடாது கிளறவும். அடுப்பு சிம்மில் தான் வைக்கவும்

  5. 5

    படத்தில் உள்ளவாறு ஒட்டாமல் ஹல்வா பதத்திற்கு வரவும். சுவையான மக்காசோள நிலக்கடலை ஹல்வா தயார். அனைவரும் செய்து பாருங்கள்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Aishwarya MuthuKumar
Aishwarya MuthuKumar @cook_25036087
அன்று

Similar Recipes