வரகு அரிசி கிச்சடி (Varagu arisi kichadi recipe in tamil)

#Millet
சிறு தானியங்களில் ஒன்றான வரகு அரிசி கொண்டு செய்த கிச்சடி. ரவை, சேமியாவில் செய்வதைவிட சுவை அதிகமாக இருந்தது. மேலும் உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது.சர்க்கரை நோயாளிகள் கட்டாயமாக வாரத்தில் இரண்டு முறை இது போன்ற சிறுதானியங்களில் ஏதாவது ஒரு வகை உணவு செய்து சாப்பிடுவது அவர்களுக்கு மிகவும் நல்லது. உண்மையிலேயே குக் பாட் போட்டிக்காக தான் நான் சிறு தானிய வகைகளை செய்ய ஆரம்பித்தேன். இவற்றில் செய்யும் உணவுகள் மிகவும் சுவையாக இருப்பதால் எப்பொழுதும் இந்த சிறுதானிய உணவு வகைகளை இனிமேல் தொடர்ந்து செய்ய முடிவு செய்துள்ளேன்.நன்றி குக் பாட்.மேலும் பல வகையான உணவு வகைகளை நாம் தெரிந்து கொள்ள இந்த குக் பாட் நமக்கு ஒரு வழிகாட்டியாக உள்ளது. சமையல் ஆர்வத்தை தூண்டுவது மட்டுமல்லாமல் நல்ல ஆரோக்கியமான உணவு வகைகளை நாம் எடுத்துக் கொள்வதற்கு உதவியாக இருக்கிறது.
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கப் வரகு அரிசியை வெறும் வாணலியில் நன்கு சூடு ஏறும் வரை வறுத்துக் கொள்ளவும்.ஒரு மூன்று நிமிடம் வரை வறுத்துக் கொள்ளலாம் வாசம் வரும். அது வரை வறுக்கவும். தண்ணீரில் நன்கு கழுவி வைத்துக் கொள்ளவும். மேற்கூறிய காய்கறிகளை பொடியாக அரிந்து கொள்ளவும். தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும். முந்திரிப் பருப்பு மற்றும் நெய் உங்களுடைய விருப்பம். சேர்த்து செய்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். பச்சைப்பட்டாணி என்னிடம் இல்லை அதனால் சேர்க்கவில்லை.
- 2
வாணலியில் எண்ணெய் சேர்த்து காய்ந்தவுடன் கடுகு சேர்க்கவும். கடுகு பொரிந்தவுடன் உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, முந்திரி சேர்த்து சிவக்க வறுக்கவும். பிறகு பச்சை மிளகாய், வெங்காயம்,மற்ற காய்கறிகளை சேர்த்து நன்கு வதக்கவும். காய்கறிகள் நன்கு வதங்கியவுடன் ஒரு கப்புக்கு மூன்றரை கப் வரை தண்ணீர் சேர்த்து அதில் உப்பு சேர்த்து கொதிக்கவிடவும். மஞ்சள்தூள் சேர்த்துக் கொள்ளவும்.
- 3
தாளித்த தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தவுடன் சாமை அரிசியை சேர்த்து நன்கு கலந்து விடவும். பிறகு இதை குக்கருக்கு மாற்றி ஒரு சவுண்ட் விடவும். பிறகு அடுப்பை சிம்'மில் வைத்து இரண்டு சவுண்ட் வரை விடவும். அல்லது பத்து நிமிடம் சிம்மில் இருக்கட்டும்.
- 4
குக்கரில் ஆவி அடங்கியவுடன் திறந்து ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து நன்றாக கரண்டி கொண்டு கிளறி விடவும். சூடாக பரிமாறவும். எப்போதும் வரகரிசி உப்புமா செய்தவுடன் சாப்பிட்டு விடவும்.இல்லை என்றால் மிகவும் கெட்டியாகி விடும்.அதனால் சாப்பிடுவதற்கு அரை மணி நேரம் இருக்கும் போது செய்யவும். தொட்டு கொள்ள சட்னி சாம்பார் சுவையாக இருக்கும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
வரகு வெஜிடபிள் உப்புமா(varagu vegetable upma recipe in tamil)
#cf1சிறு தானிய உணவுகள் உடல் நலத்திறக்கு மிகவும் நல்லது.கஞ்சி,உப்புமா,பொங்கல்,இனிப்புகள், பிஸ்கெட் போன்ற பல உணவுகள் செய்யலாம். Meena Ramesh -
வரகு அரிசி கஞ்சி(varagu arisi kanji recipe in tamil)
#weightlossநார் சத்துக்கள் அதிகம் உள்ள வரகு அரிசியை தொடர்ந்து உணவில் எடுத்துக் கொள்ளும் போது உடல் எடை குறைய அதிக வாய்ப்புகள் உண்டு. R Sheriff -
வரகு அரிசி கிச்சடி
#milletsஎப்பொழுதும் ரவை & சேமியா கிச்சடி செய்வோர் அதற்கு பதில் சிறுதானியங்களை வைத்து கிச்சடி செய்யலாம் . மிகவும் ஊட்டச்சத்து மிக்கது மற்றும் எளிதில் ஜீரணமாகும். BhuviKannan @ BK Vlogs -
வரகு உப்புமா(varagu upma recipe in tamil)
உடலுக்கு சத்தான வரகு. வரகில் விதவிதமாக செய்யும் சமையலில் உப்புமா ஒருவகை ..அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் வரகு உப்புமா.#CF1 Rithu Home -
வரகு அரிசி ஊத்தாப்பம்(Varagu arisi utthapam recipe in tamil)
#milletசிறுதானியங்கள் என்றாலே மிகவும் உடலுக்கு நல்லது. உடலுக்குத் தேவையான நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது .அதிலும் வரகு அரிசி சர்க்கரை நோய் உள்ளவர்கள் சாப்பிடவேண்டிய அரிசி வகை .இந்த அரிசியை தோசை மாவாக அரைத்து ஊத்தாப்பம் செய்து கொடுக்கலாம். மற்றும் குழந்தைகளும் இப்படி செய்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.Nithya Sharu
-
வரகு அரிசி உப்புமா (Varagu arisi upma recipe in tamil)
வரகு புரதம், நார் சத்து, உலோகசத்து, விட்டமின்கள், சுவை நிறைந்த சிறு தானியம். சுவை , மணம் கொண்ட உப்புமா. அரிசி உப்புமாவிர்க்கு பெருங்காயம், கறிவேப்பிலை மிகவும் அவசியம். அரிசி உப்புமா + கறிவேப்பிலை துவையல்—சொர்கத்தில் நிச்சயக்கப்பட்ட பொருத்தம் (MATCH MADE IN HEAVAN) #millet Lakshmi Sridharan Ph D -
வரகு கிச்சடி (varagu khichadi recipe in tamil)
வரகு அரிசி 100கிராம் ,தக்காளி,காய்கள் மிறகு 1ஸ்பூன், சீரகம்1 ப.மிளகாய் 2 வரமிளகாய் 2 மல்லி இலை எல்க நெய்யில் வதக்கவும். பின் 2.5 பங்கு தண்ணீர் ஊற்றி வேகவிடவும். உப்பு ஒரு ஸ்பூன் போடவும். ஒSubbulakshmi -
வரகு உப்புமா(varagu upma recipe in tamil)
#CF1 சுவையும் ஆரோக்கியவும். மிக்க வரகு உப்புமா... Nalini Shankar -
குதிரைவாலி அரிசி கிச்சடி (Kuthuraivali arisi kichadi Recipe in Tamil)
#nutrient3 குதிரைவாலியில் மற்ற சிறு தானியங்களை விட இரும்புச்சத்து மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது . இதை நாம் உணவில் சேர்த்துக் கொள்வதால் உடலிலுள்ள கெட்ட கொழுப்பை கரைக்கவும், மலச்சிக்கலை தடுப்பதிலும், ரத்தத்தில் இருந்து குளுக்கோஸ் அளவை மெதுவாக வெளியிடுவதற்கும் உதவுகிறது. உடலைச் சீராக வைக்க உதவுகிறது. BhuviKannan @ BK Vlogs -
திணை அரிசி தக்காளி சாதம்(thinai tomato rice recipe in tamil)
#made3சிறு தானிய வகைகள் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. எடை குறைக்க நினைப்பவர்கள், சர்க்கரை குறைக்க நினைப்பவர்கள், ஆரோக்கியம் தேவை என்று நினைப்பவர்கள் இந்த சிறுதானிய அரிசி வகைகளை எடுத்துக்கொள்ளலாம். அந்த காலத்தில் இந்த தானியங்களை கொண்டு சாப்பாடு அல்லது கஞ்சிதான் வைப்பார்கள். இன்று காலம் மாறிவிட்டது சிறுதானியம் கொண்டு பல உணவு செய்யலாம்.திணை அரிசி கொண்டு இன்று நான் தக்காளி சாதம் செய்தேன் பிரியாணி அரிசி,அரிசி சாதத்தில் இவற்றில் செய்யும் தக்காளி சாதத்தை விட தினையில் செய்த தக்காளி சாதம் மிகவும் சுவையாக இருந்தது ஆரோக்கியத்திற்கும் நல்லது. மேலும் இந்த கால குழந்தைகள் இது போன்ற சிறு தானிய வகைகள் அவர்களுக்கு பிடித்தமாதிரி செய்து கொடுத்தால் தான் விரும்பி சாப்பிடுவார்கள் வளரும் குழந்தையின் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. Meena Ramesh -
வரகு அரிசி வெண்பொங்கல் (Varagu arisi venpongal recipe in tamil)
பச்சரிசியை காட்டிலும் சிறுதானிய அரிசியில் வெண்பொங்கல் செய்ய சுவையும் நன்றாக இருக்கும்.. ஆரோக்கியமானதாகவும் இருக்கும். Hemakathir@Iniyaa's Kitchen -
-
ரவா கிச்சடி /கேரட் /சுஜி
#carrot #goldenapron3 எல்லோருக்கும் பிடித்தமான ஒரு உணவு ரவா உப்புமா. அதிலும் அதில் காய்கறிகள் சேர்த்து செய்தால் கிச்சடி ஆக மாறி சுவை கூடும். எல்லா விஷேஷங்களிலும் ரவா கிச்சடி கென்று ஒரு இடம் இருக்கும்.😍😋 Meena Ramesh -
வரகு ஓமப்பொடி (Varagu omapodi recipe in tamil)
#millet.. சிறுதானியம் தேஹ ஆரோக்கியத்துக்கு மிக உகந்தது.. வரகு அரிசி மாவினால் செய்த சுவையான ஓமப்பொடி.. Nalini Shankar -
வரகு அரிசி மிளகு பொங்கல்(Millet pepper Pongal)
#millet#pepper சுவையான சத்தானது வரகு பொங்கல் காரத்திற்கு மிளகு மட்டுமே சேர்த்ததது பச்சை மிளகாய் சேர்க்கவில்லை Vijayalakshmi Velayutham -
-
-
வரகு அரிசி வெண்பொங்கல்(varagu arisi venpongal recipe in tamil)
#CF1ஈசியான முறையில் சுலபமாக செய்யக்கூடிய சாதம்.வரகு அரிசி சர்க்கரையின் அளவை சம நிலையில் வைத்திருக்கும்,உடலில் கொழுப்பைக் கரைக்கும். Sharmila Suresh -
சாமை அரிசி பொங்கல்
#Milletசாமை சிறு தானியங்களில் ஒரு வகை.இதை சாதமாக ,உப்புமாவாக அல்லது பொங்கலாக செய்து சாப்பிடலாம்.எல்லா ஆரோக்ய சத்துகளும் நிறைந்த சிறு தானியமாகும்.எளிதில் ஜீரண ஆகக்கூடிய உணவு.மேலும் சர்க்கரை நோயாளிகள் அடிக்கடி சிறு தானியங்களை உணவில் சேர்த்து கொள்வதால் சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.அரிசி உணவை தவிர்க்க இதை போன்ற சில தானியங்களை எடுத்து கொள்வது உடல் நலத்திற்கு நல்லது. நலத்திற்கு மட்டும் அல்ல உடல் பருமனையும் குறைக்கும்.அன்றாட வேலைகளை நாம் சோர்வின்றி சுறுசுறுப்புடன் செய்ய முடியும். Meena Ramesh -
-
வரகு கஞ்சி(varagu kanji recipe in tamil)
#CF1ஹெல்த்தியான இந்த ரெசிபி சுவையாக இருக்கும். Gayathri Ram -
-
கோதுமை ரவா கிச்சடி (Kothumai ravai kichadi recipe in tamil)
#onepot கிச்சடி மற்றும் உப்மா வகைகளை விரும்பாதவர்களுக்கு இந்த முறையில் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்Durga
-
கோதுமை ரவை கிச்சடி🥕
#goldenapron3 #carrot#bookகோதுமை ரவை கிச்சடி. கோதுமை உடல் ஆரோக்கியத்திற்கு மிக நல்லது மேலும் சர்க்கரை நோயாளிகள் உணவில் அரிசியை தவிர்க்க கோதுமையை எடுத்துக்கொண்டால் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்ளலாம்.மேலும் இதில் கேரட் பீன்ஸ், குடமிளகாய், பச்சைப் பட்டாணி, வெங்காயம், சேர்ப்பதால் மேலும் இது உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும்.💪👍 Meena Ramesh -
Lentils corn dumplings (Lentils corn dumplings recipe in tamil)
#steamஇது கர்நாடக மாநிலத்தின் உணவு வகை அகும்.இதில் பருப்பு வகைகள் சேர்ப்பதால் காலைஉணவிற்கு ஏற்றது.காலை சுறுசுறுப்புடனும் சக்தியுடன் வேலை செய்ய ஏற்ற புரத சத்து மிகுந்த ஆவியில் வேக வைத்த உணவு ஆகும்.மேலும் இதில் கீரை மிளகு இஞ்சி சீரகம் பெருங்காயம் சேர்த்து இருப்பதால் உடல் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.கிருமிகள் தொற்று உண்டாகாது.நான் சுவைக்காக கார்ன் சேர்த்து உள்ளேன். Meena Ramesh -
-
சின்னம்மன் ரோல்
#NoOvenBakingஇந்த ரெசிபியை கற்று தந்த MasterChef neha அவர்களுக்கு நன்றி. Kavitha Chandran -
திணை அரிசி பாயசம் (Thinai arisi payasam recipe in tamil)
#Milletஇன்றைய சிறுதானியம் ஸ்பெஷல் திணை அரிசியில் வெல்லம் சேர்த்து செய்த பாயசம். Meena Ramesh -
வரகு கொத்துமல்லி சாதம் (Kodu millet Coriander rice) (Varagu kothamalli satham recipe in tamil)
வரகு அரிசியில் நார்சத்து அதிகம் உள்ளது. மாவுசத்து குறைவாக உள்ளதால் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.#Millet Renukabala
More Recipes
- தேங்காய் பர்பி (Thenkaai burfi recipe in tamil)
- மக்ரோனி சங்கு தேங்காய் பாயாசம்(Macaroni Coconut Payasam recipe in tamil)
- சிறுதானிய முருகைகீரை அடை தோசை. (SIruthaaniya murunkai keerai adai recipe in tamil)
- திணை அரிசி பாயசம் (Thinai arisi payasam recipe in tamil)
- பீட்ரூட் தட்டைப்பயிர் பொரியல் (Beetroot thataipayaru poriyal recipe in tamil)
கமெண்ட்