வரகு உப்புமா(varagu upma recipe in tamil)

Rithu Home
Rithu Home @rithuhomemohana

உடலுக்கு சத்தான வரகு. வரகில் விதவிதமாக செய்யும் சமையலில் உப்புமா ஒருவகை ..அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் வரகு உப்புமா.

#CF1

வரகு உப்புமா(varagu upma recipe in tamil)

உடலுக்கு சத்தான வரகு. வரகில் விதவிதமாக செய்யும் சமையலில் உப்புமா ஒருவகை ..அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் வரகு உப்புமா.

#CF1

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30நிமிடங்கள்
3 பேர்
  1. 200கிராம் உடைத்த வரகு
  2. 1கேரட்
  3. 1கைப்பிடி பச்சை பட்டாணி
  4. 5பீன்ஸ் பொடியாக நறுக்கியது
  5. 1பெரிய வெங்காயம்
  6. 5பச்சை மிளகாய்
  7. 1/2ஸ்பூன் கடுகு
  8. 1 ஸ்பூன்கடலைப்பருப்பு
  9. 1கைப்பிடி மல்லித்தழை
  10. 1கொத்து கறிவேப்பிலை
  11. தேவையான அளவுஉப்பு

சமையல் குறிப்புகள்

30நிமிடங்கள்
  1. 1

    அடி கனமான வாணலியை அடுப்பில் வைத்து அடுப்பை பற்ற வைக்கவும். தேவையான அளவு கடலை எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் காய்ந்தவுடன் கடுகு கடலைப்பருப்பு சேர்க்கவும்.

  2. 2

    கடலைப் பருப்புடன் வெங்காயம் பச்சை மிளகாய் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

  3. 3

    வெங்காயம் வதங்கிய உடன் கேரட் பீன்ஸ் பச்சை பட்டாணி சேர்த்து நன்றாக வதக்கவும். கொஞ்சம் உப்பு சேர்த்துக் கொள்ளவும். காய்கள் அரைவேக்காடு வெந்தவுடன்...

  4. 4

    ஒரு டம்ளர் உடைத்த வரகுக்கு 2 டம்ளர் தண்ணீர் ஊற்றவும்.நான் இரண்டு டம்ளர் வரகு எடுத்து நான்கு டம்ளர் தண்ணீர் ஊற்றினேன்..

  5. 5

    காய் வெந்ததும் தண்ணீர் கொதிக்கும் நிலையில் கொஞ்சம் கொஞ்சமாக உடைத்த வரகை சேர்த்துக் கிளறவும்.

  6. 6

    உப்பு சரியாக இருக்கிறதா என்று பார்த்து மல்லித்தழை தூவி இறக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Rithu Home
Rithu Home @rithuhomemohana
அன்று
என் பெயர் மோகனா ..எனக்கு சமையல் செய்வது பிடிக்கும் ..என் வீட்டில் நான் மட்டுமே சமைப்பேன் ..நான் கொங்கு நாட்டு சமையலை அதிகமாக விரும்பி சமைப்பேன் ..எனக்கு அதிக விருப்பம் சைவத்தில் தான்.. அசைவம் சாப்பிட விருப்பம் குறைவுதான்..அசைவ உணவுகளையும் நான் சமைப்பேன் ..என் சமையலை செய்து பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி வணக்கம் ..
மேலும் படிக்க

Similar Recipes