தேங்காய்பால் ரசம் (Thenkaai paal rasam recipe in tamil)

Shamee S
Shamee S @cook_19454836
India

தேங்காய்பால் ரசம் (Thenkaai paal rasam recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 1 வெங்காயம்
  2. 1தக்காளி
  3. 1பச்சை மிளகாய்
  4. 1 எலுமிச்சை அளவு புளி
  5. 1 கப் தேங்காய் பால்
  6. 1/4 ஸ்பூன்மஞ்சள் தூள்
  7. 1/2 ஸ்பூன் மிளகாய் தூள்
  8. 1 ஸ்பூன் கறிமசாலா தூள் / தனியா தூள்
  9. 1 ஸ்பூன் இஞ்சிபூண்டு விழுது
  10. 1 ஸ்பூன்உப்பு
  11. 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  12. 1 ஸ்பூன் கறிவடம்
  13. 1 கொத்து கறிவேப்பிலை

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    வெங்காயம், தக்காளியை மெல்லியதாகவும் மிளகாயை நடுவில் கீறியும் வைக்கவும்..புளியை 1 கப் வருமளவு கரைத்து கொள்ளவும். தேங்காயை துருவி திக்காக பால் எடுத்து கொள்ளவும்.

  2. 2

    புளி தண்ணீரில் வெங்காயம், தக்காளி, மிளகாய் ஆகியவற்றை பிசைந்து கொள்ளவும்.அத்துடன் மஞ்சள் தூள், கறி மசாலா தூள், இஞ்சிபூண்டு விழுது, உப்பு சேர்த்து கரைக்கவும்.

  3. 3

    இதனை ஒரு சட்டியில் வைத்து கொதி வந்ததும் அடுப்பை அணைத்து தேங்காய்பால் சேர்த்து கலந்து விடவும்.

  4. 4

    பின்னர் பானில் எண்ணெய்விட்டு சூடானதும் கறிவடம், மிளகாய் தூள், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து ரசத்தில் சேர்க்கவும்.

  5. 5

    தாளிப்பிற்கு நெய் பயன்படுத்தினால் இன்னும் வாசமாக இருக்கும். சுவையான தேங்காய்பால் ரசம் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Shamee S
Shamee S @cook_19454836
அன்று
India

Similar Recipes