புடலங்காய் விதை சட்னி (Snack gourd seed chutney)

Renukabala
Renukabala @renubala123
Coimbatore

சத்துக்கள் நிறைந்த புடலங்காயை வைத்து நிறைய செய்கிறோம். இங்கு நான் தூக்கிப்போடும் புடலங்காய் விதையை வைத்து சட்னி செய்துள்ளது. மிகவும் சுவையாக இருந்தது.
#Cocount

புடலங்காய் விதை சட்னி (Snack gourd seed chutney)

சத்துக்கள் நிறைந்த புடலங்காயை வைத்து நிறைய செய்கிறோம். இங்கு நான் தூக்கிப்போடும் புடலங்காய் விதையை வைத்து சட்னி செய்துள்ளது. மிகவும் சுவையாக இருந்தது.
#Cocount

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
  1. 1 கப் புடலங்காய் விதைகள்
  2. 1/2 கப் தேங்காய் துருவல்
  3. 3 பச்சை மிளகாய்
  4. 1/2 டீஸ்பூன் சீரகம்
  5. கறிவேப்பிலை
  6. 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு
  7. உப்பு தேவையான அளவு
  8. தாளிக்க :
  9. 1/2 டீஸ்பூன் எண்ணை
  10. 1/4 டீஸ்பூன் கடுகு
  11. 1/4 டீஸ்பூன் உளுந்து பருப்பு
  12. வற்றல் மிளகாய்
  13. கறிவேப்பிலை

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    புடலங்காயை நறுக்கி உள்ளே சதையுடன் இருக்கும் விதையை எடுத்து வைத்துக்கொள்ளவும். தேங்காய் துருவல், பச்சை மிளகாய், பூண்டு, எலுமிச்சை எல்லாம் எடுத்து தயாராக வைக்கவும்.

  2. 2

    வாணலியை ஸ்டவ்வில் வைத்து எண்ணை ஊற்றி சூடானதும், பச்சை மிளகாய், சீரகம், பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, எடுத்து வைத்துள்ள புடலங்காய் விதையை சேர்த்து நன்கு வதக்கவும். தேங்காய் துருவல் சேர்க்கவும்.

  3. 3

    சூடாறியவுடன் மிக்ஸி ஜாரில் சேர்த்து, எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்து அரைத்து எடுக்கவும்.

  4. 4

    பின்னர் சட்னியை எடுத்து ஒரு பௌலில் சேர்க்கவும். தாளிப்பு கரண்டியில் எண்ணை சேர்த்து, சூடானதும் கடுகு, உளுந்து பருப்பு, கறிவேப்பிலை, வற்றல் தாளித்து சட்னியில் சேர்க்கவும்.

  5. 5

    இப்போது சுவையான புடலங்காய் விதை தேங்காய் சட்னி சுவைக்கத்தயார்.

  6. 6

    இந்த சட்னி சாதம், இட்லி, தோசையுடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Renukabala
Renukabala @renubala123
அன்று
Coimbatore
My passion for cooking is my happiness.I make dishes and assemble them in my own style.
மேலும் படிக்க

Similar Recipes