பட்டாணி மசாலா சுண்டல்

Azhagammai Ramanathan
Azhagammai Ramanathan @ohmysamayal

#GA4 #chat
குழந்தைகளுக்கு ஏற்ற மாலை நேர சிற்றுண்டி இந்த பட்டாணி சுண்டல்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

25 நிமிடம்
4 பேர்
  1. 150 கி பட்டாணி
  2. 2 பெரிய வெங்காயம்
  3. 2 தக்காளி
  4. 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  5. 1/2 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  6. 1 டீஸ்பூன் கரம் மசாலா
  7. 1/4 டீஸ்பூன் மஞ்சள்
  8. 1/4 டீஸ்பூன் பாவ்பாஜி மசாலா
  9. சிறிதளவுகொத்தமல்லித்தழை
  10. தேவையான அளவுஉப்பு
  11. 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  12. 1உருளைக்கிழங்கு

சமையல் குறிப்புகள்

25 நிமிடம்
  1. 1

    முதல் பட்டாணியை எட்டு மணி நேரம் ஊற வைத்து தேவையான தண்ணீர் ஒரு உருளைக்கிழங்கு சேர்த்து 3 விசில் வேகவைத்து எடுக்கவும்.

  2. 2

    வெங்காயம் தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும். வெந்த உருளைக்கிழங்கை நன்றாக மசித்துக் கொள்ளவும். தேவையானவற்றை தயாராக எடுத்துக் கொள்ளவும்

  3. 3

    வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் சேர்த்து 2 நிமிடம் வதக்கி இஞ்சி பூண்டு சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். பிறகு தக்காளி சேர்க்கவும்.

  4. 4

    இப்போது தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும். தூள் வகைகளை சேர்த்து 2 நிமிடம் கிளறி பிறகு பட்டாணி சேர்க்கவும்

  5. 5

    இப்போது உருளைக்கிழங்கை சேர்த்து ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றிமூடி போட்டு மிதமான தீயில் 5 நிமிடம் வேக விடவும்.

  6. 6

    கொஞ்சம் தண்ணீராக இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும். அப்போதுதான் சுவையாக இருக்கும். உருளைக்கிழங்கை மசிக்கும் கரண்டியால் இரண்டு மூன்று தடவை மசித்து விடவும். நன்றாக சேர்ந்தாற்போல வரும். அலங்கரிக்க சிறிது வெங்காயம் கொத்தமல்லி தழைகளை சேர்த்து அலங்கரித்து பரிமாறலாம்.

  7. 7

    மாலை நேர மழைக் காலங்களில் இந்த பட்டாணி சுண்டல் மற்றும் தேநீருடன் சாப்பிட நன்றாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Azhagammai Ramanathan
அன்று

Similar Recipes