நாட்டு சர்க்கரை பருப்பு போளி (Naatu sarkarai paruppu poli recipe in tamil)

Muniswari G
Muniswari G @munis_gmvs
Vandalur

நாட்டு சர்க்கரை பருப்பு போளி (Naatu sarkarai paruppu poli recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1கப் மைதா
  2. 1/2கப் கடலை பருப்பு
  3. 1/4கப் நாட்டு சர்க்கரை
  4. 1ஸ்பூன் ஏலக்காய் தூள்
  5. 1/4ஸ்பூன் உப்பு
  6. 1/2ஸ்பூன் மஞ்சள் தூள்
  7. தேவையானஅளவு நெய்
  8. 2ஸ்பூன் எண்ணெய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    மைதா, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலந்து தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்..

  2. 2

    பிசைந்த மாவில் எண்ணெய் விட்டு மூடி 3மணி நேரம் ஊற வைக்கவும்

  3. 3

    கடலை பருப்பை 3 மணி நேரம் ஊற வைத்து நன்கு மசியும் அளவிற்கு வேக வைத்து கொள்ளவும்

  4. 4

    அதை மிக்ஸியில் போட்டு தண்ணீர் இல்லாமல் அதை பொடி செய்து கொள்ளவும்..

  5. 5

    நாட்டு சர்க்கரையை கரைத்து வடிகட்டி கடலைப்பருப்புடன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்

  6. 6

    அடுப்பில் வைத்து கடலை பருப்பு கலவையை நன்கு கிளறி சுருண்டு வரும் போது ஏலக்காய் தூள் சேர்த்து கலந்து இறக்கி ஆறவிடவும்

  7. 7

    ஒரு கவர் எடுத்து அதில் நன்கு எண்ணெய் தடவி மைதாவில் சிறு உருண்டை எடுத்து கையால் தட்டி நடுவில் பூரணத்தை வைக்கவும்

  8. 8

    அதை மூடி மீண்டும் கையால் தட்டி தோசை கல்லை சூடுபடுத்தி அதில் நெய் விட்டு போளியை போட்டு இரண்டு பக்கமும் திருப்பி போட்டு சுட்டு எடுக்கவும்

  9. 9

    அருமையான சுவையான போளி தயார்...

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Muniswari G
Muniswari G @munis_gmvs
அன்று
Vandalur
சமையல் ரொம்ப ஈசி
மேலும் படிக்க

Similar Recipes