மஷ்ரூம் பட்டாணி கறி(peas mushroom curry recipe in tamil)

Sudharani // OS KITCHEN
Sudharani // OS KITCHEN @cook_1_6_89
Coimbatore

10 வது மற்றும் 12 ம் வகுப்பு படிக்கும் குழந்தைகளுக்கு உணவு சாப்பிட நேரம் குறைவாக இருக்கும் அதே சமயம் படித்து மிகவும் சோர்வாக அதிக வேளை பளுவுடன் இருப்பார்கள் அதனால் அவர்களுக்கு காய்கறிகள் உடன் தானியங்கள் சேர்ந்து கலந்த இந்த மாதிரி கறி செய்து கொடுக்கலாம் இதில் நமது விருப்பத்திற்கேற்ப காய்கறிகள் மற்றும் பயறுவகைகளை தினம் ஒன்றாக மாற்றி செய்து கொடுக்கலாம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

25 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 200 கிராம் மஷ்ரூம்
  2. 1 கப் பச்சை பட்டாணி
  3. 1/4 கப் பீன்ஸ் கொட்டை
  4. 2 கேரட்
  5. 10 பீன்ஸ்
  6. 3உருளைக்கிழங்கு
  7. 2 வெங்காயம் பொடியாக நறுக்கவும்
  8. 2 பச்சை மிளகாய்
  9. 3 தக்காளி அரைத்த விழுது
  10. 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  11. 1 ஸ்பூன் மிளகாய்த்தூள்
  12. 2 ஸ்பூன் கரம் மசாலா தூள்
  13. 1/2 ஸ்பூன் மல்லித்தூள்
  14. 1/2 ஸ்பூன் சீரகத்தூள்
  15. தேவையான அளவுஉப்பு
  16. சிறிதுஎண்ணெய்
  17. 1 ஸ்பூன் கடுகு
  18. 1 ஸ்பூன் சோம்பு

சமையல் குறிப்புகள்

25 நிமிடங்கள்
  1. 1

    வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு சோம்பு சேர்த்து வெடித்ததும் நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாயை சேர்த்து வதக்கவும் பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும் பின் அரைத்த தக்காளி விழுதை சேர்த்து வதக்கவும்

  2. 2

    பின் மிளகாய்த்தூள் மல்லித்தூள் சீரகத்தூள் கரம் மசாலா தூள் சேர்த்து நன்கு வதக்கவும்

  3. 3

    பின் நறுக்கிய கேரட் பீன்ஸ் உருளைக்கிழங்கு பீன்ஸ் கொட்டையை 8 மணி நேரம் வரை ஊறவிட்டு இதனுடன் சேர்த்து உப்பு சேர்த்து கலந்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேகவிடவும்

  4. 4

    வெந்ததும் பட்டாணி சேர்த்து கலந்து எல்லாம் சேர்ந்து நன்றாக 5 நிமிடங்கள் வரை கொதித்ததும் இறக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Sudharani // OS KITCHEN
அன்று
Coimbatore

கமெண்ட் (3)

Similar Recipes