Chicken Hot Dog சிக்கன் ஹாட் டாக் (Chicken hot dog recipe in tamil)

Shanthi Balasubaramaniyam
Shanthi Balasubaramaniyam @cook_16904633

#flour
Maida

Chicken Hot Dog சிக்கன் ஹாட் டாக் (Chicken hot dog recipe in tamil)

#flour
Maida

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

ஒரு நாள்
6நபர்கள்
  1. Hot Dog செய்ய தேவையான பொருட்கள்
  2. 2 டேபிள்ஸ்பூன்சர்க்கரை
  3. உப்பு அரை டீஸ்பூன்
  4. முட்டை 2
  5. 3 டேபிள்ஸ்பூன்உருக்கிய வெண்ணெய்
  6. வெதுவெதுப்பான பால் ஒரு கப்
  7. 2 3/4கப்மைதா
  8. 2 டீஸ்பூன்ஈஸ்ட்
  9. மயோனைஸ் செய்ய தேவையான பொருட்கள்
  10. 200 எம்எல் முதல் 250 எம்எல் வரைசமையல் எண்ணெய்
  11. முட்டையின் மஞ்சள் கரு 2
  12. எலுமிச்சம்பழம் அரை மூடி இன் சாரு
  13. வினிகர் ஒரு டேபிள்ஸ்பூன்
  14. அரை டீஸ்பூன்உப்பு
  15. கால் டீஸ்பூன்கடுகுப் பொடி
  16. கால் டீஸ்பூன்மிளகுத்தூள்
  17. சிக்கன் சாசேஜ்(sausage) செய்ய தேவையான பொருட்கள்
  18. கொத்திய சிக்கன் அரை கிலோ
  19. 3/4 டீஸ்பூன்சோயா சாஸ்
  20. இஞ்சி பூண்டு விழுது ஒரு டீஸ்பூன்
  21. டொமேட்டோ கெட்சப் ஒரு டீஸ்பூன்
  22. உப்பு தேவையான அளவு
  23. மிளகாய் தூள் அரை டீஸ்பூன்
  24. கால் டீஸ்பூன்மஞ்சள்தூள்
  25. அரை ஸ்பூன்வினிகர்
  26. அரை டீஸ்பூன்மிளகுத்தூள்
  27. ஹாட் டாக் செய்ய தேவையான பொருட்கள்
  28. Zucchini(சீமை சுரைக்காய்)ஒன்று
  29. 1பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது
  30. சர்க்கரை ஒரு டேபிள்ஸ்பூன்
  31. கால் டீஸ்பூன்மிளகுத்தூள்
  32. ஒரு டேபிள்ஸ்பூன்வினிகர்

சமையல் குறிப்புகள்

ஒரு நாள்
  1. 1

    முதலில் Hot dog bun செய்முறையை பார்ப்போம்.

  2. 2

    ஒரு கிண்ணத்தில் ஈஸ்ட், சர்க்கரை, வெதுவெதுப்பான பால் சேர்த்து கலந்து 5 நிமிடம் மூடி விடவும்.

  3. 3

    ஒரு அகன்ற பாத்திரத்தில் மைதா,உருக்கிய வெண்ணெய்,முட்டை,உப்பு,ஈஸ்ட் கலவை சேர்த்து நன்றாக கலக்கவும். நன்றாக 10 நிமிடம் கையால் பிசைந்து அரைமணி நேரம் ஊற விடவும்.

  4. 4

    ஒரு தூய்மையான இடத்தில் மைதாவை தூவி ஊறிய மைதா மாவை அதன் மேல் போட்டு நன்றாக கையால் பிசைந்து bun shape இல் உருட்டி அவன் ப்ளேட்டில் வைக்கவும்

  5. 5

    அதன் மீது முட்டை கலவையை தேய்க்கவும். பின் பிரிஹீட் செய்த அவனில் 180 டிகிரி செல்சியஸில் 10 முதல் 15 நிமிடம் வரை வைத்து எடுக்கவும்

  6. 6

    Hot dog bun ரெடி

  7. 7

    மயோனைஸ் (mayonnaise)செய்முறை

  8. 8

    ஒரு அகன்ற பாத்திரத்தில் முட்டையின் மஞ்சள் கருவை சேர்த்து நன்றாக அடிக்கவும்.

  9. 9

    கடுகுப் பொடி சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்யவும். எண்ணெய் சிறிது சிறிதாக சேர்த்து நன்றாக அடிக்கவும். என்னை ஒரே தடவையில் சேர்த்தால் நீர்த்துவிடும்

  10. 10

    பத்து நிமிடம் நன்றாக அடித்த பின்பு இதனுடன் வினிகர்,எலுமிச்சை சாறு, உப்பு,மிளகுதூள் சேர்த்து மறுபடியும் நன்றாக மிக்ஸ் செய்யவும்.

  11. 11

    எலுமிச்சை பழச்சாறு சேர்த்த பின்பு கலவை நன்றாக வெண்மையாக வந்துவிடும். மறுபடியும் எண்ணெய் சிறிது சிறிதாக சேர்த்து நன்றாக அடிக்கவும்.

  12. 12

    மயோனைஸ் ரெடி

  13. 13

    கொத்திய சிக்கனை நன்றாக கழுவி ஒரு ஈரத்துணியால் துடைத்து மிக்ஸி ஜாரில் போட்டு பேஸ்ட் பண்ணவும்.

  14. 14

    சிக்கன் சாசேஜ்(sausages) செய்முறை

  15. 15

    சிக்கன் பேஸ்டுடன் உப்பு, மிளகாய்த்தூள்,மஞ்சள்,மிளகுத்தூள், கெட்சப்,இஞ்சி பூண்டு விழுது,சோயா சாஸ்,வினிகர் சேர்த்து நன்றாக கலக்கவும்.

  16. 16

    சிக்கன் கலவையை நன்றாக உருட்டி அலுமினிய பேப்பரில் நடுவில் வைத்து நன்றாக இறுக்கி சுருட்டி இரண்டு பக்கமும் முறுக்கிக் கொள்ளவும்

  17. 17

    கடாயில் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் சிக்கன் Hot dog ஐ உள்ளே போட்டு பத்து நிமிடம் வேகவைத்து எடுக்கவும்

  18. 18

    வேக வைத்த சிக்கன் சாசேஜ் நன்றாக ஆற வைத்து ஃப்ரிட்ஜில் வைத்து விடவும்.ஒரு இரவு முழுவதும் ஃப்ரிட்ஜில் வைத்து எடுக்கவும். சிக்கன் sausage ரெடி

  19. 19

    இனி கடைசியாக சிக்கன் ஹாட் டாக் செய்வதைப் பார்ப்போம்

  20. 20

    Zucchini பொடியாக கட் செய்து அதனுடன் உப்பு சேர்த்து ஒரு அரை மணி நேரம் ஊறவைத்து தண்ணீர் நன்றாக வந்ததும் வடிகட்டவும்

  21. 21

    கடாயில் பொடியாக நறுக்கிய zucchini,பெரிய வெங்காயம்,சர்க்கரை, மிளகுத்தூள், வினிகர் சேர்த்து நன்றாகfry பண்ணவும்.

  22. 22

    ஒரு தவாவில் சிறிது எண்ணெய் விட்டு நாம் செய்து வைத்துள்ள சிக்கன் சாசேஜ் நன்றாக ப்ரை பண்ணி எடுக்கவும்

  23. 23

    நாம் செய்து வைத்துள்ள hot dog bun எடுத்து நடுவில் இரண்டாக வெட்டவும்

  24. 24

    பண்ணின் நடுவில்ஃப்ரை செய்த zucchini வைத்து மயோனைஸ் வைத்துchicken sausage வைத்து அதன்மேல் மயோனைஸ் போட்டு பரிமாறவும்

  25. 25

    Chicken hot dog ரெடி

  26. 26

    சுவையான hot dog வீட்டிலேயே சமைத்து சாப்பிடலாம்.

  27. 27

    பன் மற்றும் மயோனைஸ் மற்றும் சிக்கன் சாசேஜ் இந்த மூன்றும் இருந்தால் சிக்கன் hot dog செய்வது மிகவும் சுலபம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Shanthi Balasubaramaniyam
அன்று

Similar Recipes