அம்மாவின் ஆப்பம் வடகறி (Appam vadacurry recipe in tamil)

Nalini Shanmugam
Nalini Shanmugam @Nalini
Puducherry

#GA4 Week7 #Breakfast
என் அம்மா செய்யும் மெத்தென்ற ஆப்பம் எனக்கும் என் குடும்பத்தாருக்கும் மிகவும் பிடிக்கும். காலை உணவுக்கு இது சிறந்த பலகாரம்.

அம்மாவின் ஆப்பம் வடகறி (Appam vadacurry recipe in tamil)

#GA4 Week7 #Breakfast
என் அம்மா செய்யும் மெத்தென்ற ஆப்பம் எனக்கும் என் குடும்பத்தாருக்கும் மிகவும் பிடிக்கும். காலை உணவுக்கு இது சிறந்த பலகாரம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

அரை மணி நேரம்
ஆறு பேர்
  1. 3 கப்புழுங்கல் அரிசி
  2. 3 கப்மாவு பச்சரிசி
  3. உளுந்து - அரை கப்
  4. வெந்தயம் - அரை டீஸ்பூன்
  5. உப்பு - தேவைக்கேற்ப
  6. 2 கப்தேங்காய் பால்
  7. 4 சிட்டிகைசமையல் சோடா

சமையல் குறிப்புகள்

அரை மணி நேரம்
  1. 1

    ஆப்பம் செய்வதற்கு முதல் நாள் புழுங்கலரிசி, பச்சரிசி, உளுந்து மற்றும் வெந்தயத்தை நீரில் 6 மணிநேரம் ஊற வைக்கவும்

  2. 2

    நன்கு ஊறிய அரிசியை களைந்து நீரை வடிகட்டி கிரைண்டரில் அரைத்து உப்பு சேர்த்து கரைத்து வைக்கவும்.

  3. 3

    மறுநாள் காலை மாவு நன்கு புளித்து மேலெழுந்து வந்திருக்கும். இந்த மாவில் சமையல் சோடா மற்றும் தேவையான தேங்காய் பால் சேர்த்து தோசை மாவு பதத்தை விட சற்று நீர்க்க கரைத்துக் கொள்ள வேண்டும்.

  4. 4

    ஆப்ப சட்டியை சூடேற்றி 2 குழிக்கரண்டி மாவை ஊற்றி ஆப்ப சட்டியை இரண்டு பக்கமும் கைகளால் பற்றி சட்டியின் விளிம்புவரை பரவுமாறு சுற்றி மூடி போட்டு வேகவிடவும்.

  5. 5

    இரண்டு அல்லது மூன்று நிமிடத்தில் ஆப்பம் வெந்து விடும். இதைத் திருப்பிப் போட தேவையில்லை. அப்படியே எடுத்து பரிமாறலாம். இதற்கு சைட் டிஷ்ஷாக தேங்காய்ப்பால், வடகறி மற்றும் குருமா சரியாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Nalini Shanmugam
அன்று
Puducherry
Don't cook with angry, cook with happy
மேலும் படிக்க

Similar Recipes