எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

35 நிமிடங்கள்
6 பரிமாறுவது
  1. 1_1/2 லிட்டர் பால்
  2. 200 கிராம் இனிப்பில்லாத கோவா
  3. 1/2 லெமன்
  4. 1 கப் சர்க்கரை
  5. 6 டேபிள் ஸ்பூன் கரகரப்பாக உடைத்த நட்ஸ்
  6. 1/2 கப் நெய்
  7. 1/4 கப் பால் பவுடர்
  8. 1 ஸ்பூன் ஏலத்தூள்
  9. 1/8 ஸ்பூன் ரோஸ் வாட்டர்
  10. 10 இதழ் குங்குமப்பூ

சமையல் குறிப்புகள்

35 நிமிடங்கள்
  1. 1

    தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து கொள்ளவும் நட்ஸ் ஐ கரகரப்பாக பொடித்து கொள்ளவும், சூடான 2 ஸ்பூன் பாலில் குங்குமப்பூ சேர்த்து நன்கு கரைத்து கொள்ளவும்

  2. 2

    ஒரு லிட்டர் பால் ஐ அடுப்பில் வைத்து கொதிக்க விடவும் கொதித்ததும் லெமன் சாறு விட்டு பனீரை பிரித்து எடுக்கவும்

  3. 3

    பின் வடிகட்டி குளிர்ந்த நீர் விட்டு நன்றாக அலசி கொள்ளவும் பின் ஒரு மணி நேரம் வரை தண்ணீர் வடிய விடவும்

  4. 4

    பின் நான்ஸ்டிக் பேனில் சிறிது நெய் விட்டு சூடானதும் கரகரப்பாக பொடித்த நட்ஸ் ஐ சேர்த்து வறுத்து தனியே எடுத்து வைக்கவும்

  5. 5

    பின் அதே பேனில் மீதமுள்ள 1/2 லிட்டர் பால் ஐ ஊற்றவும் பால் கொதித்ததும் பால் பவுடர் சேர்த்து நன்கு கலந்து விடவும் பின் பால் கோவாவை சேர்த்து மெல்லிய தீயில் வைத்து கிளறவும்

  6. 6

    பால் கோவா இளகி பின் பாலுடன் சேர்ந்து வரும் ஸ்மூத்தாக வரும் வரை நன்கு கிளறவும்

  7. 7

    பின் வடிகட்டிய பனீரை சேர்த்து நன்கு கிளறவும்

  8. 8

    பின் சர்க்கரை சேர்த்து நன்கு கிளறவும்

  9. 9

    பின் சர்க்கரை இளகி பின் சேர்ந்து வரும் போது ஏலத்தூள் சேர்த்து நன்கு கிளறவும்

  10. 10

    பின் குங்குமப்பூ கரைசல் விட்டு நன்றாக கிளறவும் பின் நெய்யை சிறிது சிறிதாக சேர்த்து நன்கு கிளறவும்

  11. 11

    பின் எல்லாம் சேர்ந்து வரும் போது இறக்கி ரோஸ் வாட்டர் சேர்த்து நன்கு கலந்து நெய் தடவிய ட்ரேயில் ஊற்றி நட்ஸ் தூவி விடவும்

  12. 12

    சுவையான கேசர் கலாகந்த் ரெடி

  13. 13

    நெய் சொட்ட சொட்ட இருக்கும் மிகவும் இறுக கிளற கூடாது கல் மாதிரி ஆகிவிடும் பதம் முக்கியம் லெமன் அதிகம் விட்டு பனீரை பிரிக்க கூடாது பிறகு ரப்பர் மாதிரி இருக்கும் பனீர், பனீர் சாஃப்ட் ஆக இருக்க வேண்டும் குங்குமப்பூ நல்ல மணத்தை கொடுக்கும் நான் கொடுத்திருக்கற இந்த பதம் ஆறிய பிறகு இப்படி இருக்கும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sudharani // OS KITCHEN
அன்று
Coimbatore

Similar Recipes