ப்ரூட்ஸ் அண்ட் நட்ஸ் புலாவ் (Fruits and nuts pulao recipe in tamil)

Udayabanu Arumugam
Udayabanu Arumugam @cook_26992295

குழந்தைகளுக்கு பிடித்த காரம் இல்லாத பழங்கள் மற்றும் உலர் பழங்கள் சேர்த்த ஒரு சுவையான மதிய உணவு

#ilovecooking
#kids3

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 1 கப் பாஸ்மதி அரிசி
  2. 1/2 ஸ்பூன் குங்குமப்பூ 1/2 கப் பாலில் 15 நிமிடம் ஊறவைக்கவும்
  3. - 1 கப்பாதாம்,முந்திரி,உலர் திராட்சை (எல்லாம் சேர்த்து)
  4. ஆப்பிள்,மாதுளை, அன்னாசி,பச்சை திராட்சை போன்ற பழவகைகள்
  5. 4 ஸ்பூன் நெய்
  6. 1 பெரிய வெங்காயம்
  7. பட்டை,கிராம்பு,சோம்பு, பிரியாணி இலை, - புலாவ் தாளிக்க ஏற்ற அளவு

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    பாஸ்மதி அரிசியை கழுவி 20 நிமிடம் ஊறவைக்கவும்

  2. 2

    ஒரு வாணலியில் 1 ஸ்பூன் நெய் ஊற்றி முந்திரி, திராட்சை,பாதாம் சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்

  3. 3

    அதே வாணலியில் இன்னும் சிறிது நெய் சேர்த்து நீளமாக சன்னமாக அரிந்த வெங்காயம் சேர்த்து வதக்கவும்

  4. 4

    ஒரு குக்கரில் மீதி உள்ள நெய் சேர்த்து பட்டை, கிராம்பு,ஏலக்காய், சோம்பு, பிரியாணி இலை சேர்த்து தாளிக்கவும்

  5. 5

    ஊறவைத்த அரிசியில் நீர் வடிகட்டி குக்கரில் சேர்த்து நெயில் வறுக்கவும்

  6. 6

    குங்குமப்பூ ஊற வைத்த பாலை குக்கரில் ஊற்றவும். 1.5 கப் தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விடவும்

  7. 7

    குக்கர் மூடி 2 விசில் வேக வைத்து அடுப்பை அணைக்கவும்

  8. 8

    சிறிது நேரம் கழித்து புலாவை உதிர்த்து நெயில் வறுத்த வெங்காயம் மற்றும் நட்ஸ் சேர்த்து,பழங்கள் சேர்த்து கிளறி பரிமாறவும்

  9. 9

    குழந்தைகளுக்கு பிடித்த சுவையான புலாவ் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Udayabanu Arumugam
Udayabanu Arumugam @cook_26992295
அன்று

Similar Recipes