மட்டன் கோஃப்தா சால்னா

மிகவும் சுவையான இந்த கோலா உருண்டை சால்னாவை பலவகையான உணவுகளுடன் உண்டு ருசிக்கலாம்.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தேவையான பொருட்களை கழுவி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். கொத்துக்கறியுடன் 10% கொழுப்பு சேர்ந்து வாங்கிக் கொள்ளவும்.
- 2
ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லி இலைகளை சேர்த்து கொரகொரவென்று அரைத்துக் கொள்ளவும். அதன்பின் கொத்துக்கறி, மிளகாய்த்தூள், மல்லித்தூள் சேர்க்கவும்.
- 3
கூடவே கரம் மசாலா தூள், சீரகத் தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்க்கவும்.
- 4
இதனை கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். நைசாக அரைத்தால் கோலா உருண்டை சுவையாக இருக்காது. இறுதியில் வெங்காயத்தை நறுக்கி அரைத்த கலவையுடன் சேர்த்து ஒருமுறை அரைத்துக் கொள்ளவும். (குறிப்பு:வெங்காயத்தை முதலில் அரைத்து விட்டால் இந்த கோலா உருண்டை மசாலா நீர்த்துவிடும். அரைத்த மசாலாவை ஒரு கிண்ணத்தில் மாற்றி கொள்ளவும்.)
- 5
இப்பொழுது ஈரமில்லாத மிக்ஸியில் பொட்டுக்கடலை, பாதாம் மற்றும் முந்திரிப்பருப்பு சேர்த்து நைஸாக பொடி செய்து கொள்ளவும். இந்தப் பொடியை அரைத்த கொத்துக்கறி மசாலாவுடன் சேர்க்கவும். கூடவே ஒரு மேசைக்கரண்டி வெண்ணெய் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும். (குறிப்பு வெண்ணெய் சேர்ப்பதனால் கோலா உருண்டை மிருதுவாக இருக்கும். வெண்ணெய்க்கு பதிலாக நெய் அல்லது எண்ணெய் கூட சேர்க்கலாம்.)
- 6
இதனை தேவையான அளவில் உருண்டைகள் பிடித்து ஒரு தட்டில் வைத்துக் கொள்ளவும்.
- 7
இப்பொழுது குழம்பு செய்ய ஆரம்பிக்கலாம். ஒரு மண் சட்டியில் நல்லெண்ணெய் சேர்த்து சூடாக்கவும். இதில் சின்ன வெங்காயத்தை அரைத்து சேர்க்கவும்.
- 8
கூடவே புதினா இலைகள் இஞ்சி பூண்டு விழுது மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் மல்லித்தூள் சேர்க்கவும்.
- 9
அதற்குப்பின் கரம் மசாலாத்தூள் சேர்க்கவும். ஒரு உருளைக்கிழங்கை துண்டுகளாக வெட்டி சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.(குறிப்பு: உருளைக்கிழங்கு சேர்ப்பதனால் குழம்பு கெட்டியாக இருக்கும்)
- 10
அரை கப் தண்ணீர் சேர்த்து மூடி வைத்து கிழங்கு வேக வைக்கவும். இப்பொழுது தக்காளியை நறுக்கி மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
- 11
அரைத்த தக்காளி விழுதை குழம்புடன் சேர்க்கவும். கூடவே தயிர் சேர்க்கவும்.இதனை மூடி வைத்து சிறிது நேரம் பச்சை வாடை போகும் வரை கொதிக்க விடவும். அதன்பின் தேங்காயை அரைத்து சேர்க்கவும். நான் இங்கு அரை தக்காளியை தேங்காயுடன் சேர்த்து அரைத்து உள்ளேன், இதனால் தேங்காய் நைசாக அரைபடும்.
- 12
குழம்புக்கு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மூடி வைத்து கொதிக்க விடவும்.
- 13
கொதி வந்தபின் கோலா உருண்டைகளை ஒவ்வொன்றாக குழம்பில் சேர்க்கவும்.தேவையான அளவு உப்பு சேர்த்து மூடி வைத்து 10 நிமிடம் சிறு தீயில் உருண்டைகளை வேக விடவும்.
- 14
பத்து நிமிடம் கழித்து வெந்த கோலா உருண்டைகள் குழம்பின் மேலே நீந்தி வரும். நறுக்கிய கொத்தமல்லி இலைகளை தூவி அருமையான இந்த கோலா உருண்டை குழம்பை பரோட்டா, நாண், சப்பாத்தி, புல்கா இட்லி, தோசை, வெள்ளை சாதம், தேங்காய் பால் சோறு, தாளிச்ச சோறு, மற்றும் குஸ்கா என பல வகையான உணவுகள் உடன் பரிமாறலாம்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

சன்னா மட்டன் சால்னா


மட்டன் சால்னா


வெஜ் சால்னா


கோழி கறி முட்டை கோலா (scotch egg)


ஆட்டுக்கறி உருளைக்கிழங்கு குருமா


பாய் வீட்டு சிக்கன் சால்னா


பாய் வீட்டு மட்டன் தம் பிரியாணி


தேங்காய் பால் மட்டன் சால்னா


பாய் வீட்டு மட்டன் எலும்பு தால்ச்சா


மட்டன் பிரியாணி


அவுல் சுண்டல் சாட் (tarri poha)


காளான் 65


செட்டிநாடு மட்டன் கோலா உருண்டை செய்வது எப்படி? (Mutton kola urundai recipe in tamil)


சுவையான பன்னீர் கட்லெட் செய்ய


விறகடுப்பில் செய்த ரோட்டுக்கடை மட்டன் சால்னா (Mutton salna recipe in tamil)


தம் வைக்காத தம் மட்டன் பிரியாணி


முருமுரு காலிபிளவர் சில்லி


தக்காளி சால்னா#salna


உருளைக்கிழங்கு கார ஜிலேபி


மட்டன் கிரேவி(mutton gravy recipe in tamil)


மேகி மேஜிக் பன்னீர் மசாலா


மட்டன் கோலா உருண்டை (Mutton kola urundai recipe in tamil)


காய்கறி பிரியாணி


சிக்கன் தந்தூரி (Chicken tandoori recipe in tamil)


உருளைக்கிழங்கு சால்னா (Potato Salna)


ஹாட் ரைஸ் குக்கர் காளான் பிரியாணி


பிரோசன் சீஸி கார்ன் க்ரொக்கெட்ஸ்


சேமியா கீமா பிரியாணி


சிக்கன் டிக்கா பிரியாணி


மட்டன் கோலா உருண்டை குழம்பு(mutton kola urundai kulambu recipe in tamil)

கமெண்ட்