திணை முந்திரி குக்கீஸ் (Thinai munthiri cookies recipe in tamil)

Viji Prem
Viji Prem @vijiprem24
Dharmapuri

திணை முந்திரி குக்கீஸ் (Thinai munthiri cookies recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
8-10 பரிமாறுவது
  1. 3/4 கப் திணை மாவு
  2. 3/4 கப் கோதுமை மாவு
  3. 2 டேபிள்ஸ்பூன் உலர் தேங்காய் துருவல்
  4. 1/2 கப் துருவிய வெல்லம்
  5. 2 டேபிள்ஸ்பூன் மிருதுவான வெண்ணெய்
  6. 1முட்டை
  7. சிறிதுஏலக்காய்த்தூள்
  8. 10பொடியாக நறுக்கிய முந்திரி

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    முதலில் பவுலில் மிருதுவான வெண்ணெய் சேர்த்து இரண்டு நிமிடம் நன்றாக கலந்து கொள்ளவும் பிறகு வெல்லத்தை மிக்ஸியில் ஒரு முறை அரைத்து அதையும் இதனுடன் சேர்த்து நன்றாக கலக்கவும்

  2. 2

    இதனுடன் முட்டை சேர்த்து அனைத்தையும் நன்றாக கலக்கவும்... இத்துடன் திணை மாவை சேர்க்கவும் (கடையில் வாங்கிய திணை மாவை உபயோகப்படுத்தினேன்.. வீட்டில் திணைமாவு செய்முறையை முந்தைய பதிப்பில் பதிவிட்டுள்ளேன் பார்க்கவும்)

  3. 3

    அத்துடன் கோதுமை மாவு, உலர் தேங்காய் துருவல், சிறிது ஏலக்காய்த்தூள் சேர்த்து அனைத்தையும் நன்றாக மிருதுவான பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்

  4. 4

    இப்போதும் மாவில் சிறு உருண்டை எடுத்து உருட்டி சிறிது தட்டையாக தட்டிக் கொள்ளவும்

  5. 5

    தயாரித்து வைத்திருக்கும் குக்கீஸை சற்று இடைவெளிவிட்டு வைக்கவும் பிறகு பொடியாக நறுக்கிய முந்திரியை அதன் மேல் வைத்து அழுத்தவும்

  6. 6

    அவனை 180 டிகிரி செல்சியஸ் இருக்கு பிரிஹீட் செய்யவும்... குக்கீஸை 15-20 நிமிடம் வைத்து எடுக்கவும்... திணை தேங்காய் பிஸ்கட் கடாயில் செய்யும் முறை பதிவிட்டுள்ளேன் அதில் வீட்டில் திணை மாவு தயாரிப்பது கடாயில் வைப்பதும் கொடுத்துள்ளேன் விருப்பமெனில் பார்க்கவும்

  7. 7

    சுவையான ஆரோக்கியமான திணை முந்திரி குக்கீஸ் தயார் நீங்களும் இதனை முயற்சித்துப் பாருங்கள்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Viji Prem
Viji Prem @vijiprem24
அன்று
Dharmapuri
Running Madurai virundhu homemade delivery restaurantsFb pagehttps://www.facebook.com/vijiprem20/
மேலும் படிக்க

Similar Recipes