சுரைக்காய் சாம்பார் (Suraikkai sambar recipe in tamil)

Mangala Meenakshi
Mangala Meenakshi @cook_26918056

#GA4
#week13
#tuvar
சுரைக்காய் நீர்ச்சத்து அதிகமுள்ள காய்களில் ஒன்று அதை பயன்படுத்தி சாம்பார் வைத்தாள் நன்றாக இருக்கும்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
4 பேர்
  1. 100 கிராம் துவரம் பருப்பு
  2. 1/4 கிலோ அளவுள்ள சுரக்காய்
  3. 2தக்காளி
  4. 1 பெரிய வெங்காயம்
  5. புளி பெரிய நெல்லிக்காய் அளவு
  6. உப்பு தேவையான அளவு
  7. 1/2 ஸ்பூன் மஞ்சள்தூள்
  8. 1 மேஜைக்கரண்டி தனி மிளகாய்த்தூள் அல்லது சாம்பார் பொடி
  9. தாளிப்பதற்கு
  10. 1 மேஜைக்கரண்டிகடுகு
  11. 1/2 மேஜைக்கரண்டி பெருங்காயத்தூள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    துவரம்பருப்பை நன்றாக கழுவி குக்கரில் 4 விசில் வரும் வரை வேக விட்டு எடுத்துக் கொள்ளவும். புளியை 20 நிமிடம் ஊற வைத்து கரைத்து புளிக்கரைசல் எடுத்துக் கொள்ளவும். சுரைக்காயை நன்றாக கழுவி நறுக்கி வைத்துக் கொள்ளவும் தக்காளி வெங்காயம் ஆகியவற்றையும் நறுக்கி வைத்துக் கொள்ளவும்

  2. 2

    வாணலியில் 4 ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி அதில் கடுகு சேர்க்கவும் கடுகு வெடித்தவுடன் சீரகம் கருவேப்பில்லை சேர்த்து தாளித்து பெருங்காயத்தூள் சேர்த்துக் கொள்ளவும் இதில் வெங்காயம் தக்காளி ஆகியவற்றை 2 நிமிடங்கள் வதக்கவும் பின்னர் நறுக்கிய சுரைக்காய் ஐயும் சேர்த்து வதக்கவும்.

  3. 3

    காய்கறிகள் அனைத்தும் வழங்கி சுருங்கிய உடன் வேகவைத்த துவரம் பருப்பை அதில் சேர்க்கவும். மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் உப்பு ஆகியவற்றை சேர்த்து 5 நிமிடங்கள் வேக வைக்கவும். காய்கறிகள் பருப்புடன் சேர்ந்து நன்றாக வேக வேண்டும்.

  4. 4

    பின்னர் ஃபுல் கரைசலாக செய்து வைத்துள்ள புலியை அதில் ஊற்றவும் நன்றாக கிளறி 3 முதல் 5 நிமிடங்கள் வரை கொதிக்க விடவும்.பின்னர் அடுப்பிலிருந்து இறக்கி பரிமாறும் பாத்திரத்திற்கு மாற்றி கொள்ளவும். கொத்தமல்லி இலை தூவி அலங்கரிக்கலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

Top Search in

எழுதியவர்

Mangala Meenakshi
Mangala Meenakshi @cook_26918056
அன்று

Similar Recipes