பன்னீர் கேக்

Santhi Murukan
Santhi Murukan @favouritecooking21
சென்னை
எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1மணிநேரம்
4பேர்
  1. 150கி பன்னீர்
  2. 250ml பால்
  3. 1 கப் கோதுமை மாவு
  4. 1/2கப் சர்க்கரை பவுடர்
  5. 6டீஸ்பூன் எண்ணெய்
  6. 1/2டீஸ்பூன் பேக்கிங் சோடா
  7. 1/2டீஸ்பூன் பேக்கிங் பவுடர்
  8. 1கப் செரி பழம்
  9. 1கப் பேரிச்சபழம்

சமையல் குறிப்புகள்

1மணிநேரம்
  1. 1

    பன்னீரை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

  2. 2

    ஒரு பவுளில் 1கப் கோதுமை மாவு, 1/2கப் சர்க்கரை பவுடர்,5 டீஸ்பூன் குக்கிங் ஆயில் (சமையல் எண்ணெய்), 1/2டீஸ்பூன் பேக்கிங் சோடா, 1/2டீஸ்பூன் பேக்கிங் பவுடர் சேர்த்து நன்கு கலந்து விடவும்.

  3. 3

    நன்கு கலந்ததும், காய்ச்சின பாலை சிறிது சிறிதாக ஊற்றி கலந்து, இளகுவான பதத்திற்கு வரும் வரை கலந்து விடவும்.

  4. 4

    கேக் பவுலின் உள்ளே எண்ணெய் தடவி, எல்லா பக்கமும் கீரீஸ் செய்யவும்.செரி பழத்தை இரண்டாக நறுக்கி கொள்ளவும். பேரிச்சபழத்தை நீளவாக்கில் கீறி கொள்ளவும்.

  5. 5

    கேக் பவுளில் கேக் பேட்டரை சேர்த்து விடவும்.அதன் மேலே பன்னீர், செரி,பேரிச்சபழம் மூன்றையும் மேலே பரப்பி விடவும்.

  6. 6

    அதன் மேலே மறுபடியும் கேக் பேட்டரை பரப்பவும். மறுபடியும் அதன் மேல் பன்னீர், செரி, பேரிச்சபழம் மூன்றையும் பரப்பி விடவும். கடைசியாக இருக்கும் பேட்டரை சேர்த்து பழத்தை அலங்கரிக்கவும்.இதை லேயர் லேயராக செய்யவும்.

  7. 7

    பின்னர் ஏற்கனவே 15நிமிடம் பீரிஹீட் செய்த குக்கரில் வைத்து 30 நிமிடம் மூடி போட்டு வேகவிடவும். கடைசியில் டுத்பிக் அல்லது கத்தியால் குத்தி பார்த்து, வெந்ததும் ஆறவிடவும்.

  8. 8

    ஆறினதும், ஓரங்களில் கத்தியால் கீறி, வேறு பாத்திரத்தில் திருப்பி போட்டால், கேக் தனியாக வந்து விடும். இப்போது கேக் ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Santhi Murukan
Santhi Murukan @favouritecooking21
அன்று
சென்னை

Similar Recipes