Dhaba style mutter masala Recipe in Tamil

Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
Salem

#Grand2
Happy new year special 😋.... மாறுபட்ட சுவை கொண்ட பட்டாணி குருமா.நாம் எப்போதும் செய்யும் பட்டாணி குருமா வில் இருந்து மாறுபட்ட சுவையுடன் இருக்கும்.குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.முந்திரி கொஞ்சம் கூடுதலாக சேர்த்து காரம் குறைத்து செய்தால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.

Dhaba style mutter masala Recipe in Tamil

#Grand2
Happy new year special 😋.... மாறுபட்ட சுவை கொண்ட பட்டாணி குருமா.நாம் எப்போதும் செய்யும் பட்டாணி குருமா வில் இருந்து மாறுபட்ட சுவையுடன் இருக்கும்.குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.முந்திரி கொஞ்சம் கூடுதலாக சேர்த்து காரம் குறைத்து செய்தால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

45 நிமிடங்கள்
3 பேர்
  1. 1 கப் பச்சை பட்டாணி
  2. 2 பெரிய வெங்காயம்
  3. 2 தக்காளி
  4. 2 பச்சை மிளகாய்
  5. 1 துண்டு இஞ்சி
  6. 3 to 4 பல் பூண்டு
  7. 6 முந்திரி பருப்பு
  8. 1 இன்ச் பட்டை
  9. 4 லவங்கம்
  10. 1 சிறிய அளவு கல் பாசி
  11. 1 ஏலக்காய்
  12. 2 டேபிள் ஸ்பூன் எணணெய்
  13. 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள்
  14. 1 ஸ்பூன் காஷ்மீரி மிளகாய் தூள்
  15. 3/4 ஸ்பூன் தூள் உப்பு or தேவைக்கு ஏற்ப
  16. 1/4 ஸ்பூன் கரம் மசாலாத்தூள்
  17. 1 ஸ்பூன் சர்க்கரை
  18. 1 ஸ்பூன் கஸ்தூரி மெத்தி

சமையல் குறிப்புகள்

45 நிமிடங்கள்
  1. 1

    தேவையான அனைத்து பொருட்களையும் எடுத்து வைத்துக் கொள்ளவும். பூண்டு, பச்சை மிளகாய், இஞ்சி மூன்றையும் மிக்ஸியில் நைசாக அரைத்துக் கொள்ளவும்.ஒரு பெரிய வெங்காயத்தை பொடியாக அரிந்து கொள்ளவும். ஆறு அல்லது ஏழு முந்திரிப் பருப்பை எடுத்து வைத்துக் கொள்ளவும். ஒரு நான் ஸ்டிக் கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து முதலில் வெங்காயத்தை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.பிறகு முந்திரிப் பருப்பையும் சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும். ஆற வைத்து மிக்ஸியில் விழுதாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.

  2. 2

    (இன்னும் கூட 4 முந்திரி பருப்பை சேர்த்து கொள்ளலாம்.நன்கு சுவையாக இருக்கும்.) பின்பு 2 தக்காளியை சுடு தண்ணீரில் வேக வைத்துக் கொள்ளவும். ஆறிய பிறகு மிக்ஸியில் நன்கு அரைத்து வைத்துக் கொள்ளவும்.

  3. 3

    மீண்டும் நான் ஸ்டிக் கடாயில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து அதில் பட்டை, லவங்கம், ஏலக்காய், கல்பாசி சேர்த்து வதக்கவும். பிறகு அதில் மற்றொரு பெரிய வெங்காயத்தை (பொடியாக அரிந்து) சேர்த்து வதக்கவும்.

  4. 4

    வெங்காயத்தை சிவக்க வதக்கியவுடன் அதில் பச்சை மிளகாய் பேஸ்ட் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். பின்பு ஒரு கப் பச்சைப் பட்டாணியை சேர்த்து வதக்கவும். அதில் மஞ்சள் தூள் கால் ஸ்பூன், காஷ்மீரி மிளகாய் தூள் ஒரு ஸ்பூன், உப்பு முக்கால் ஸ்பூன் சேர்த்து வதக்கவும்.

  5. 5

    எல்லாம் நன்கு வதங்கி, ஒன்று கலந்தவுடன், தக்காளி விழுதை சேர்த்து வதக்கவும்.3 நிமிடம் வரை வதங்கிய பிறகு அதில் தண்ணீர் அல்லது மிக்ஸியை கழுவிய தக்காளி தண்ணீரை சேர்த்து 15 நிமிடம் வரை மூடி வைத்து மிதமான தீயில் பட்டாணியை வேக விடவும்.

  6. 6

    பட்டாணி வெந்தவுடன் எண்ணெய் பிரிந்து வரும்.

  7. 7

    இப்போது வெங்காயம் முந்திரி அரைத்த விழுதை சேர்த்து நன்கு கலந்து விடவும்.ஒரு ஸ்பூன் சர்க்கரை மற்றும் கால் ஸ்பூன் கரம் மசாலாத்தூள் சேர்த்து கலந்து விடவும்.கிரேவி பதத்திற்கு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொஞ்சம் கொதிக்க விடவும்.

  8. 8

    கடைசியாக கஸ்தூரி மேத்தி கைகளால் கசக்கி கிரேவியில் சேர்த்து கலந்து விடவும். சுவையான தபா ஸ்டைல் பட்டாணி மசாலா ரெடி.சப்பாத்தி, ஃப்ரைட் ரைஸ், நாண், ரொட்டி, பூரி, பரோட்டா, பிரியாணி சாதம் போன்றவற்றிற்கு தொட்டுக்கொள்ள சுவையாக இருக்கும்.

  9. 9

    நான் இந்தப் பட்டாணி மசாலாவை பரோட்டாவிற்கு தொட்டுக்கொள்ள செய்தேன். மிகவும் சுவையாக இருந்தது. நீங்களும் ஒரு முறை முயற்சி செய்து cook snaps போடவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
அன்று
Salem

Similar Recipes