Dhaba Style Aloo Chole (Dhaba style aloo chole recipe in tamil)

BhuviKannan @ BK Vlogs
BhuviKannan @ BK Vlogs @Bhuvikannan
BhuviKannan@SG

#family #nutrient3
must try😋

Dhaba Style Aloo Chole (Dhaba style aloo chole recipe in tamil)

#family #nutrient3
must try😋

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

60 நிமிடங்கள்
  1. 1.5 கப் ஊறவைத்த கொண்டைக்கடலை
  2. 1டீ பேக் / 1டீஸ்பூன் டீத்தூள்
  3. 2ஏலக்காய்
  4. 1 inch பட்டை
  5. 2லவங்கம்
  6. 1பிரிஞ்சி இலை
  7. 2உருளைக்கிழங்கு
  8. 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய்
  9. 1 டீஸ்பூன் சீரகம்
  10. 2 ஏலக்காய்
  11. 2 வெங்காய விழுது
  12. 1டீ ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  13. 2 தக்காளி விழுது
  14. 1டேபிள்ஸ்பூன் மிளகாய்த்தூள்
  15. 1 டேபிள்ஸ்பூன் தனியாத்தூள்
  16. 1/2 டேபிள்ஸ்பூன் கரம் மசாலா
  17. 1 டீஸ்பூன் ஆம்சூர் பொடி
  18. 1/2 டீஸ்பூன் சீரகத்தூள்
  19. 1/2 டீஸ்பூன் மஞ்சள்தூள்
  20. தேவைக்கேற்ப உப்பு

சமையல் குறிப்புகள்

60 நிமிடங்கள்
  1. 1

    ஐந்து மணி நேரம் ஊற வைத்த கொண்டைக் கடலையுடன் பட்டை, லவங்கம்,ஏலக்காய், பிரிஞ்சி இலை,டீ தூள், தேவைக்கேற்ப உப்பு சேர்த்து ஐந்து விசில் விட்டு வேக வைக்கவும்

  2. 2

    உருளைக்கிழங்கை வேகவைத்து சிறியதாக நறுக்கி வைக்கவும்.

  3. 3

    மிதமான தீயில் கடாயை வைத்து ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சீரகம் ஏலக்காய் பட்டை தாளித்து, வெங்காய விழுதை சேர்த்து பொன்னிறமாகும் வரை அடிப்பிடிக்காமல் வதக்கவும்.பின்பு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

  4. 4

    பச்சை வாசனை போனவுடன் சிவப்பு மிளகாய்த்தூள், தனியாத்தூள், கரம் மசாலா, ஆம்சூர் பொடி, சீரகத்தூள், மஞ்சள்தூள் இவை அனைத்தையும் அதனுடன் கலந்து ஒரு நிமிடம் வதக்கி, அரைத்த தக்காளி விழுது மற்றும் தேவைக்கேற்ப உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.

  5. 5

    தக்காளி கொதித்து எண்ணெய் பிரிந்து வந்தவுடன், மேலும் சிறிது தண்ணீர் சேர்த்து வேக வைத்த கொண்டைக்கடலை மற்றும் உருளைக்கிழங்கை சேர்த்து மூடி வைத்து மிதமான தீயில் 10 நிமிடம் கொதிக்க வைக்கவும்.

  6. 6

    அடுப்பை அணைத்து கொத்தமல்லி இலை தூவி சூடான பட்டூரா உடன் பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
BhuviKannan @ BK Vlogs
அன்று
BhuviKannan@SG
https://www.youtube.com/channel/UCLpwrwHQywwdjqEQRvtbAIw?view_as=subscriber
மேலும் படிக்க

Similar Recipes